Header Ads



மாணவர்கள் மீதான எதிர்காலத்தை, நீதிபதி கவனத்திற்கொண்டார்

ஹொரவபொத்தானை- கிரலாகல புராதன தூபி மீது ஏரி எடுத்த புகைப்படம் தொடர்பில்,  கைது செய்யப்பட்ட 8 பல்கலைக்கழக மாணவர்களையும் கெபித்திகொல்லாவ நீதிமன்றம் விடுவித்தது.

இதன்போது மாணவர்கள் ஆஜரான, ருஸ்தி ஹபீப் jaffna muslim இணையத்துடன் சில தகவல்களை பகிர்ந்து கொண்டார். 

மாணவர்கள் தமது குற்றத்தை ஒப்புக் கொண்டமையால்  50.000 ரூபா தண்டம் அறிவிடப்பட்டது. மாணவர்கள் தமது குற்றத்தை ஒப்புக் கொள்ளாமல் இருந்திருப்பின்  அவர்கள் வருடக்கணக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருப்பார்ர்கள்.

மாணவர்கள் குற்றத்தை ஒப்புக் கொள்ளாமல் இருந்திருப்பின், அவர்கள் பொதுச் சேவையில் இணைவதில்கூட சிக்கல் ஏற்பட்டிருக்கும்.

சம்பந்தப்பட்ட மாணவர்கள் எவருமே இதற்குமுன் எத்தகைய குற்றச் செயல்களிலும் பங்கேற்காத நிலையிலும், அவர்கள் மாணவர்கள் என்பதையும், அவர்களின் எதிர்காலம் பற்றியும் நீதிபதியும் கவனம் செலுத்தினார்.

இந்த அடிப்படையிலும் மாணவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இவற்றுடன் மாணவர்கள் சார்பில், ஆஜரான 3 சட்டத்தரணிகளின் வாதமும் காரணமாக அமைந்தது. 

இந்நிலையில் தற்போது இந்த வழக்கு முடிவுக்கு வந்துள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது.

மாணவர்களின் விடுதலையில் அமைச்சர் றிசாத் பதியுதீன் மற்றும் மேல் மாகாண ஆளுநர் ஆசாத் சாலி ஆகியோரும் அதிகப்பட்ட அக்கறையை வெளிப்படுத்தினர் எனவும் ருஸ்தி ஹபீப் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.