Header Ads



பாகிஸ்தான் வீரர் இந்தியாவிடம் பிடிபட்டபோது, கேவலமாக நடத்தப்பட்ட விதம் - வைரலாகும் புகைப்படம்


இந்திய விமானியை பாகிஸ்தான் இராணுவம் மரியாதையாக நடத்தி வருவதாகவும், அதே சமயம் இந்தியா தங்கள் கையில் சிக்கிய பாகிஸ்தான் இராணுவ வீரரை எப்படி நடத்தியுள்ளது என்பது குறித்த புகைப்படங்களை பாகிஸ்தானியர்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

இந்தியா-பாகிஸ்தானுக்கிடையே நடந்த விமானப்படை தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த அபிநந்தன் என்ற விமானி பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்துவிட்டார்.

அவரை அங்கே கண்ட பாகிஸ்தான் இராணுவம், உடனடியாக அங்கிருந்த மக்களிடமிருந்து மீட்டு இராணுவ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

அதன் பின் கைது செய்யப்பட்ட விமானியின் பெயர் அபிநந்தன் என்று கூறி, அவர் பாகிஸ்தான் இராணுவ வீரர்களிடம் பேசிய வீடியோ வெளியாகியிருந்தது.

குறிப்பாக பாகிஸ்தான் ஒரு தீவிரவாத நாடு என்று கூறப்பட்டு வருவதால், அங்கிருக்கும் பாகிஸ்தானியர்கள், கடந்த 1965-ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தானுக்கிடையே நடந்த போரின் போது, பாகிஸ்தானைச் சேர்ந்த Sipahi Maqbool Hussain என்ற இராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.

அப்போது அவர் கடுமையாக துன்புறுத்தலுக்கு ஆளானார் எனவும் அதிக மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் கூறப்படுகிறது. அதன் பின் 40 ஆண்டுகளுக்கு பின் 2005-ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார்.

இதனால் பாகிஸ்தானியர்கள் யார் தீவிரவாதி எங்களிடம் சிக்கிய இராணுவ விமானியை பத்திரமாக பார்த்துக் கொண்டதா? அல்லது இந்தியா அவரை டார்ச்சர் செய்தத்தா என்பது தொடர்பான இரண்டு புகைப்படங்களையும் வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர்.

2 comments:

  1. பயங்கரவாத்த்தால் அழிந்து நாசமாகி மூளை சிதைந்த அஜன் அன்டனி கிறுக்கனுக்கு இதுவெல்லாம் புரியாது. இலங்கை இராணுவத்தின் பாசையில்தான் இவனுக்குப் புரியும்.

    ReplyDelete
  2. @Lafir, நீங்க சரியான காமேடி பீஷு தான் போல

    ReplyDelete

Powered by Blogger.