Header Ads



மைத்திரி வெளியிட்ட எதிர்ப்புக்கு, ஐதேக.யின் பதிலடி

அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரித்து தேசிய அரசாங்கம் ஒன்றை உருவாக்குவதற்கான யோசனையை பாராளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளமைக்கான நோக்கத்தை ஐக்கிய தேசிய கட்சி தெளிவுபடுத்தியுள்ளது. 

இதுதொடர்பான பாராளுமன்ற முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். 

அரச நிர்வாகத்தில் தேசத்தை கட்டியெழுப்பும் நோக்கோடு நேர்மையாக செயற்படும் அனைத்து கட்சிகளையும் ஒன்றாக இணைப்பதே இதன் நோக்கம் என்று அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். 

தீவிரவாதங்களுக்கு எதிராக நாட்டை அபிவிருத்தி செய்தல், ஜனநாயகத்தை பாதுகாத்தல் மற்றும் மக்களின் உரிமையை பாதுகாத்து பலமான அரசாங்கம் ஒன்றை உருவாக்கி செயற்பாடுகளை துரிதப்படுத்தும் எண்ணம் கொண்ட அனைத்து கட்சிகளுக்கும் இந்த வேண்டுகோள் விடுக்கப்படுதாவ அவர் குறிப்பிட்டார். 

தேசிய அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்தும் யோசனையானது அரசியலமைப்புக்கு ஏற்புடைய ஒரு விடயம் என்று அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். 

அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு பாராளுமன்றத்தில் அனுமதியை பெற்றுக்கொள்வது 19 ஆவது திருத்தத்தின் மூலம் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது என்று பாராளுமன்ற முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.