February 05, 2019

"மாணவர்களின் விடுதலைக்கு அல்லாஹ், உதவியளித்தான் என்பதுவே நிதர்சன உண்மை"

கடந்த இரு வாரமாக உண்ணாமல் உறங்காமல் பிரார்த்தனைகளோடு அழுதழுது கண்ணீர் வடித்த பெற்றோர்களையும், உறவுகளையும், குறிப்பாக சிறையிலடைக்கப்பட்டிருந்த மாணவர்களையும் நிம்மதி பெருமூச்சு விட வைத்த உங்களுக்கு அல்லாஹ்வின் அருள் என்றும் கிடைக்க வேண்டுமென்று பிரார்த்திக்கிறேன்.

இன்றைய நீதிமன்ற அமர்வில் நடந்ததென்ன?

விடுதலை செய்யப்பட்ட மாணவர் ஒருவரின், சகோதரன் மூலம் கிடைத்த தகவலின் படி பதிவிடுகிறேன்.

மாணவர்களின் கைது விடயத்தை உறவுகள் உங்களிடம் கொண்டு வந்தபொழுது சில நிபந்தனைகளை அவர் முன்வைத்திருந்தீர்கள்.

அதில் முக்கியமாக,

'அரசியல்வாதிகளின் குறுக்கீடு இருக்கக் கூடாது, . விடயம் வெற்றிகரமாக முடியும் வரை பகிரங்கமாக ஏதும் எழுத்துருப் பெறக்கூடாது, மேலும் எனது கட்டளைப்படியே அனைத்தும் நடக்க வேண்டும் என்று நிபந்தனைகள் விதித்த போது, உறவுகள் முழுமையாக ஏற்றுக் கொண்டு செயற்பட்டனர்..
காதும் காதும் வைத்தாற்போல அதன்பிரகாரமே அனைத்தும் நடந்தேறின.
அல்ஹம்துலில்லாஹ்.
அவ்வாறே 
இன்று நீதிமன்றத்துக்கு சிரேஷ்ட சட்டத்தரணி ஷிராஸ் நூர்தீன் அவர்களது குழுவினர் மாணவர்களின் சார்பாக ஆஜராகினர்.
அவர்கள் சற்றும் எதிர்பார்க்காத விதமாக மாணவர்களுக்கு எதிராக கொழும்பு தொல்லியல் திணைக்களத்தின் உயர் உத்தியோகத்தர்கள் நீதிமன்றத்துக்கு வந்திருந்தார்கள்.
அவர்கள் மாணவர்களின் விடுதலைக்கு தங்களது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டார்கள்.
சட்டத்தரணி ஷிராஸ் நூர்தீன் சுமார் நாற்பதைந்து நிமிடங்களுக்கு அதிகமாக, தொல்லியல் திணைக்கள அதிகாரிகளது மறுப்பில் இருக்கின்ற பலவீனமான பகுதிகளை கௌரவ நீதிபதிக்கு விளக்கி வாதிட்டார்.
இறுதியாக கௌரவ நீதிபதியும் சட்டத்தரணி ஷிராஸ் நூர்தீனின் வாதத்தில் இருக்கின்ற நியாயங்களை ஏற்றுக் கொண்டாக வேண்டிய நிலை ஏற்பட்டது..
இறுதியாக மாணவர்கள் குறித்த புனித பகுதியில் ஏறி புகைப்படம் எடுத்துக்கொண்டு சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட செயலில் மாத்திரம் குற்றம் கண்ட நீதிமன்றம்
குற்றப்பரிகாரமாக 51000/= ரூபா தண்டப்பணத்தை செலுத்திவிட்டு வெளியேறி செல்லுமாறு தீர்ப்பளித்தது.
அல்ஹம்துலில்லாஹ்
இந்தத் தீர்ப்பு மாத்திரம் இப்படி கிடைக்காது போயிருந்தால் மாணவர்களுக்கு கடூழிய சிறைத் தண்டனையுடன், அவர்களது கைவிரல் ரேகை அடையாளங்களுடன் மாணவர்களை கிரிமினல்களாக காட்டும் செய்கை அழகாக அரங்கேறியிருக்கும்.
ஊடகங்களின் துணையுடன் இனவாதிகளாலும் அவர்களது அரசியல் தலைவர்களாலும் பூதாகரமாக சித்தரிக்கப்பட்டு பின்னப்பட்ட இந்த சதி வலையை கௌரவ ஷிராஸ் நூர்தீன் தனது வாதத் திறமையால் மிக இலாவகமாக வென்றுகாட்டி நீதியை நிலைபெறச் செய்துள்ளார்.
அல்ஹம்துலில்லாஹ்
இந்த வழக்குக்கு செல்வதற்கு முன்னர் அவர் மிகக் கடுமையான முன்னேற்பாடுகளை மேற்கொண்டு . தகவல்களை சேகரித்ததோடு . கொழும்பு தொல்லியல் திணைக்களத்தில் இருக்கின்ற நூலக சாலையில் அவரது ஜுனியர்களை பல நாட்களாக தேவையான தகவல்களை திரட்டிக் கொடுப்பதில் ஆர்வத்துடன் செயற்பட்டிருந்ததோடு, இவர்களில் சிலர்
கணனியின் முன்னால் தூக்கம் தொலைத்து இம் மாணவர்களின் விடுதலைக்கான நியாயங்களை, சிரேஸ்ட சட்டத்தரணி ஷிராஸ் நூர்தீன் அவர்களுக்கு பெற்றுக்கொடுப்பதில் தங்களை அர்பப்பனித்து வேலை செய்தார்கள்.
இவ்வாறான முன் ஏற்பாடுகளுடன் மாணவர்கள் சார்பாக சிரேஸ்ட சட்டத்தரணி ஷிராஸ் நூர்தீன் அவர்கள் வந்திருப்பார் என்று
தொல்லியல் திணைக்கள உயரதிகாரிகள் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள்.
இன்றைய நீதிமன்ற அமர்வில் சிரேஷ்ட சட்டத்தரணி ஷிராஸ் நூர்தீன் அவர்கள் சரியான ஆதாரங்களுடன் கௌரவ நீதிபதிக்கு சிறப்பாக விளக்கமளித்ததால்தான் மாணவர்களின் விடுதலைக்கு அல்லாஹ் உதவியளித்தான் என்பதுவே நிதர்சனமான உண்மை.
மீண்டும் சிரேஷ்ட சட்டத்தரனி ஷிராஷ் நூர்தீன் அவர்களுக்கும், அவரது குழுவினருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

( MSM நஸீர், ஏறாவூர்)

4 கருத்துரைகள்:

this is very good example for our Muslims society if your visiting historical Places or Religious Places do not do unwanted act like this selfi or Harming the Idols,Paintings so on respect the Religions behave good this is not for students only it is for all
nowadays selfi maniac killing so many Lives,unwanted issues like this happening in our Sri Lanka sad to say this

our community need his support always, may allah bless him and his team.

சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் அவரைகளைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கின்றோம். வழக்குப்பேசுகின்றோம் என்று பெரும்தொகைப் பணத்தை கபளீகரம் செய்து இறுதியில் Sorry சொல்லும் வழக்கறிஞர்கள் மத்தியில் நூர்தீன் அவரகள் ஓர் இமயம்.

Post a Comment