Header Ads



திருட்டில் ஈடுப்பட்டவன் பேஸ்புக், உதவியுடன் மடக்கி பிடிப்பு - யாழ்ப்பாணத்தில் சம்பவம்

முகநூலின் உதவியுடன், உணவகத்தில் திருடியவர் தொடர்பான விபரங்களைப் பதிவு செய்யப்பட்டு, மக்களின் உதவியுடன் திருடனைப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார் உணவக உரிமையாளர்.

யாழ்ப்பாணம் சாவகச்சேரி மருத்துவமனைக்கு அருகில் உள்ள உணவகமொன்றில் கடந்த ஜனவரி எட்டாம் திகதி இரவு ஓடு பிரித்து உள்நுழைந்த திருடன் முதலில் கடையில் பொருத்தப்பட்டிருந்த கமராக்கள் செய்றபாடுகளை நிறுத்தி விட்டு உணவகத்தினுள் இறங்கி அங்கு வைக்கப்பட்டிருந்த 7 இலட்சம் ரூபா பணத்தையும் 3 இலட்சம் ரூபா பெறுமதியான அலைபேசி,மீள்நிரப்பு அட்டைகளையும் திருடிச் சென்றுள்ளார்.

சாவகச்சேரி பொலிஸார் தொடர் விசாரணைகளை மேற்கொண்டுவரும் நிலையில் கடையின் உரிமையாளர் கடைக்குள் செயலிழக்காமல் இருந்த கமராவின் உதவியுடன் அதற்கு முதல்நாள்களில் கடைக்கு வந்திருந்தவர்கள் தொடர்பாக பார்வையிட்டார்.

முதல் நாளில் அங்கு உணவருந்த வந்தவரும் திருட்டின் போது செயற்பட்ட கமராவில் பதிவில் காணப்பட்ட நபரும் ஒரே மாதிரியாக இருந்ததால் முகநூலில் பதிவு செய்து அங்கு காணப்படுபவர் தொடர்பான விபரங்களை தமக்குத் தெரியப்படுத்துமாறும் இந்தத் தகவலை அனைவருக்கும் பகிருமாறும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்தப் பதிவினைப் பார்வையிட்ட உடையார்கட்டைச் சேர்ந்த ஒருவர் கடை உரிமையாளருக்கு அறிவித்துள்ளார். உரிமையாளர் சிலருடன் அங்கு சென்றார். இவர்களைக் கண்டதும் குறித்த நபர் அங்கிருந்து தப்பியோட முயற்சிக்கவே பொதுமக்களின் உதவியுடன் பிடித்தனர்.

வாகனத்தில் கொண்டு வந்த நபரை சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

No comments

Powered by Blogger.