Header Ads



பொலன்னறுவை முஸ்லீம் மத்திய கல்லூரி, தேசிய பாடசாலையாக தரமுயரவேண்டிய அவசியம் - ஜனாதிபதி கவனம் எடுப்பாரா...?

பொலன்னறுவை மாவட்டத்தில், கதுறுவல நகர் பகுதியில் அமைந்துள்ள 1954.01.11 ல் ஆரம்பிக்கப்பட்ட ஓர் தமிழ் மொழி மூலப் பாடசாலையே பொலன்னறுவை முஸ்லீம் மத்திய கல்லூரியாகும்.

வடமத்திய மாகாணத்தில் 258,462 சிங்கள மொழி மூலம் கற்கும் மாணவர்களும், 29,184 தமிழ் மொழிமூலம் கற்கும் மாணவர்களும் உள்ளர். இதில் அனுராதபுர மாவட்டத்தில் 19,606 மாணவர்களும், பொலன்னறுவை மாவட்டத்தில் 9,578 மாணவர்களும் தமிழ் மொழி மூலம் கற்கின்றனர். பொலன்னறுவை மாவட்டத்திலுள்ள பாடசாலைகளில் 1  AB பாடசாலைகள்-25 ம் , 1 C பாடசாலைகள் - 32 ம், ஏனைய வகை பாடசாலைகளும் உள்ளடங்களாக மொத்தம் 250 பாடசாலைகள் உள்ளன. இவற்றில் 216 சிங்கள மொழி பாடசாலைகளும், 25 தமிழ் மொழி பாடசாலைகளும் காணப்படுகின்றன. (இரு மொழிப் பாடசாலைகளும் உண்டு) (Source: School Census Report, 2017)

பொலன்னறுவை மாவட்டத்தில் இன்றுவரை காணப்படும், 4 சிங்கள மொழிமூல தேசிய பாடசாலைகளான பொலன்னறுவை ரோயல் தேசிய பாடசாலை, மெதிரிகிரிய தேசிய பாடசாலை, மின்னேரியா தேசிய பாடசாலை, மற்றும் ஆனந்தா பாலிகா தேசிய பாடசாலை என்பனவாகும்.

இத்தகைய பாடசாலைகளுடன் ஓர் தமிழ் மொழிப் பாடசாலையான, பொலன்னறுவை முஸ்லீம் மத்திய கல்லூரியும் தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்படவேண்டியதன் அவசியத்தை பொலன்னறுவை மாவட்ட முஸ்லீம் சமூகம் உணர்ந்துள்ளமையும், அதற்கான முன்னெடுப்புக்களை மேற்கொள்கின்றமை வரவேற்கத்தக்க அம்சமாகும்.

பொ/ பொலன்னறுவை முஸ்லீம் மத்திய கல்லூரி தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்படுவதற்குரிய கல்வி அமைச்சினால் எதிர்பார்க்கப்படும், அனைத்து தகைமைகளும் உடைய ஓர் பாடசாலையாகும். (TheNationalPolicyontheestablishmentof New National School, Cabinet Memorandum No:18/0757/42/013)

1.1. தேசிய பாடசாலையாகுவதற்கான அதிகளவு மாணவர் தொகையுடைய பாடசாலை No. of Students above 1000)

2 AB தரத்திலுள்ள, உயர்தரப் பிரிவில் கலை, வர்த்தகம், விஞ்ஞானம், தொழிநுட்பம் ஆகிய அனைத்துத் துறைகளும் காணப்படுவதுடன், தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 13 வருட தொடர் கல்வி நிகழ்ச்சித்திட்டமும் ((SmartProject) உள்ள பாடசாலை.

3, பௌதீக ரீதியாக விஸ்தீரமான நிலப்பரப்பைக் கொண்ட பாடசாலை.

4, பாடசாலையுடன் அமைந்த விளையாட்டுத் திடலுள்ள பாடசாலை.

5, நிர்ணயிக்கப்பட்டுள்ள பிரதேச எல்லைக்குள் வேறு எந்தவொரு தேசியப்பாடசாலையும் அமைக்கப்படவில்லை. மாவட்டத்திலேயே எந்தவொரு தமிழ்மொழிப் பாடசாலையும் தேசியப்பாடசாலையாக தரமுயர்த்தப்படவில்லை.

6, ஆண், பெண் இருபாலாரும் கற்கும் பாடசாலை.

7, முஸ்லீம், தமிழ் இருவின மாணவர்கள் கற்கும் பாடசாலை

8, தரம் 6 ற்கு மாணவர்களை சேர்ப்பதற்கான அதிகமான ஊட்டப் பாடசாலைகளைக் கொண்ட ஓர் உயர்தரப் பாடசாலை.

9, மாநகர சபை நிருவாக பிரிவில் அமைந்துள்ள பாடசாலை. ( Polonnaruwa Municipal Council)

10, A  தரத்து பிரதான வீதிக்கு அண்மையில் அமைந்துள்ள பாடசாலை

11, பிரதான போக்குவரத்து வசதி, மாவட்ட புகையிரத நிலையம் என்பன பாடசாலைக்கு அண்மையிலுள்ளன. (Bus Station, Railway Station)

 12, தொலைத்தொடர்பு நிலையங்கள் அண்மையில் உண்டு. தபால் நிலையம்

 13, வங்கி சேவை, மற்றும் தொழில்நுட்ப சேவைகளை இலகுவில் பெறக்கூடிய பிரதேசம்.

எனவே பொலன்னறுவை மாவட்ட முஸ்லீம் மக்களது தேசிய பாடசாலையொன்றின் தேவை நியாயபூர்வமானது என்பதுடன், அதற்குரிய தகைமைகளும் ஒருங்கே காணப்படுவது, இந்நோக்கத்தினை அடைவதற்கான சந்தர்ப்பம் வெகு தொலைவில் இல்லை எனலாம்.

பொலன்னறுவை மாவட்ட கௌரவ மக்கள் பிரதிநிதிகளே !
அரசியல் பிரமுகர்களே ! முஸ்லீம் நிறுவனங்களே !
பாடசாலை அபிவிருத்திச் சங்கமே ! பாடசாலையின் பழைய மாணவர்களே !
பள்ளிவாயல் முஸ்லீம் நிறுவனங்களின் சம்மேளனமே !
பொலன்னறுவை மாவட்ட ஜம்யிய்யதுல் உலமா சபையே !
பள்ளிவாயல் நம்பிகையாளர் சபைகளே !
விளையாட்டுக் கழகங்களே !
நலன் விரும்பிகளே! பெற்றார்களே !

கருத்துவேறுபாடுகளற்ற ஓர் விடயத்தில் அனைவரும் கூட்டுமுயற்சியினை மேற்கொள்ளும் போது தேசியப் பாடசாலை எனும் இலக்கினை மிக விரைவாக பூர்த்தி செய்யமுடியும்.

நாட்டின் ஜனாதிபதியே பொலன்னறுவை மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் இச்சந்தர்பம், ஜனாதிபதியினால் நியமனம் பெற்ற ஆளுனரின் அதிகாரங்களின் கீழுள்ள மாகாணப் பாடசாலையினை விடுவித்து, தேசியப் பாடசாலையாக தரமுயர்த்தும் முறைமையினை விளங்கி, மிகச் சரியான முன்னெடுப்புக்களை மேற்கொள்ளும் போது இன்ஷா அல்லாஹ் வெற்றி நிச்சயம்.

சமூக விடிவுக்காக, எதிர் கால சமூகத்திற்கு மிகச் சிறந்த கற்றல் சூழலை உருவாக்குவோம்.

விழிப்புணர்வுக்கான பதிவு :

SM. முபாறக் B.A(Hons)PGDE
ஆசிரியர்,
பொ /பொலன்னறுவை முஸ்லிம் மத்திய கல்லூரி,
கதுறுவெல.

1 comment:

  1. Before changing it to national collage.
    First change the name and keep a nice Name for School.
    ( Remove Muslims School/Racist Name)
    You can Name as Bellow.
    POLANNARUWA
    "Sir Naleem School"
    “ Sir Raziq Fareed School”
    “ General Muthalif School”
    “Hon Ashraf School”
    “Badudeen School”
    "Mubarak Sir School"

    Many Many Names…

    ReplyDelete

Powered by Blogger.