Header Ads



சிலோன் தவ்ஹீத் ஜமாத், பெண்கள் அணியின் அறிவிப்பு

முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்காக கடந்த 2009ம் ஆண்டு அப்போதைய நீதி அமைச்சர் மிலிந்த மொரகொடவினால் அமைக்கப்பட்ட முன்னால் நீதியரசர் சலீம் மர்சூப் தலைமையிலான திருத்தக் குழு தனது பரிந்துரைகளை நீதி அமைச்சர் தலதா அத்துக்கோரளவிடம் கையளித்துள்ளது.

அதே போல் உலமா சபையினரும் தமது நிலைபாடுகளை உள்ளடக்கிய வேறொரு திருத்தக் கோவையை நீதி அமைச்சரிடம் கையளித்திருக்கிறார்கள். இந்த இரண்டு திருத்தக் கோவைகளும் ஒன்றுக்கொன்று முரணானதாகவும் இரண்டுமே குர்ஆன் மற்றும் நபிகள் நாயகத்தின் வழிகாட்டல்களுக்கு மாற்றமானதாகவும் அமைந்திருக்கிறது.

ஒன்றுக்கொன்று முரணான ஆலோசனைகள் அடங்கிய திருத்தக் கோவையின் மூலம் தீர்வை எட்ட முடியாத காரணத்தினால் நீதி அமைச்சர் அவர்கள் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இது தொடர்பில் பேசி முடிவெடுக்க வேண்டும் என கோரி தனியார் சட்ட திருத்தத்தின் இறுதி முடிவெடுக்கும் அதிகாரத்தை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் ஒப்படைத்துள்ளார். மார்க்க அடிப்படையில் முடிவெடுக்க வேண்டிய விவகாரத்தை மார்க்கத்தின் அடிப்படை அறியாத பாராளுமன்ற உறுப்பினர்களிடத்தில் ஒப்படைத்திருப்பது ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும்.

சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்தின் ஊடக சந்திப்பு இன்று (13.02.2019) கொழும்பு 10 இல் அமைந்துள்ள அமைப்பின் தலைமையகத்தில் நடைபெற்ற போதே அமைப்பின் பெண்கள் அணி சார்பில் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.

சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்தின் பெண்கள் அணி சார்பில் நடத்தப்பட்ட குறித்த ஊடக சந்திப்பில் அமைப்பின் பேச்சாளர் சகோதரி ஷப்னா கலீல் தமிழ் மொழியிலும், அமைப்பின் பேச்சாளர் சகோதரி சிபானா சிங்கள மொழியிலும் கருத்துக்களை தெரிவித்தார்கள்.

முஸ்லிம் தனியார் சட்டத் திருத்தத்தில் முஸ்லிம் அமைப்புகளின் கருத்துக்கள் பெறப்பட்டாலும், அவற்றை கவனத்தில் கொள்ளாமல் இஸ்லாத்திற்கு முரணான ஷாபி, ஹனபி மத்ஹபுகளின் அடிப்படையில் திருத்தம் அமைய வேண்டுமென முன்னால் நீதியரசர் சலீம் மர்சூப் மற்றும் உலமா சபையினர் பிடிவாதமாக இருப்பதினால் தான் 10 வருடங்களாக இத்திருத்தம் முடிவுக்கு கொண்டுவர முடியாத அவல நிலை காணப்படுகிறது.

முஸ்லிம் தனியார் சட்டத்தில் பெண்களுக்கு அநீதி நடைபெறுவதாக கூறி முஸ்லிம் பெண்கள் அணி என்ற பெயரில் சில பெண்கள் இஸ்லாத்தின் அடிப்படையே அறியாமல் சர்வதேசத்தினதும், சில இஸ்லாமிய விரோதிகளினதும் திட்டத்தை நடைமுறைப்படுத்த முனைவதை, குர்ஆனையும், நபிகள் நாயகத்தின் வாழ்க்கை முறைகளையும் உயிரினும் மேலாக மதித்து பின்பற்றும் முஸ்லிம் பெண்கள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

முஸ்லிம் தனியார் சட்டத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை அவை குர்ஆன், நபிகள் நாயகத்தின் வழிகாட்டல் பிரகாரம் முறைப்படி செய்யப்பட வேண்டிய திருத்தங்களாகும்.

பெண்களின் திருமண வயதெல்லை

முஸ்லிம் பெண்களின் திருமண வயதெல்லை தொடர்பில் பரந்துபட்ட விமர்சனங்களை ஊடகங்கள் வாயிலாக சில பெயர் தாங்கி முஸ்லிம் பெண்கள் முன்வைத்து வருகிறார்கள்.

முஸ்லிம் பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதெல்லை 18 என்று சலீம் மர்சூப் குழுவும், உலமா சபையினரும் கூறிவருகிறார்கள். இது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும். இஸ்லாத்தின் அடிப்படையில் பெண்களுக்கு திருமண வயதெல்லையை நிர்ணயம் செய்யக் கூடாது.

பருவ வயதை அடைந்திருக்கும் நிலையில் பொருப்பாளரின் ஒத்துழைப்புடன், பெண்களின் பூரண சம்மதம் பெறப்பட்ட பின்னர் திருணம் செய்து கொடுக்க வேண்டும். 18 என்றோ அல்லது அதற்கு அதிகமாக அல்லது குறைவாக வயதெல்லை நிர்ணம் செய்யப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஐரோப்பிய யூனியனின் தேவைக்காக அவர்கள் நினைத்த வயதெல்லையை முஸ்லிம் தனியார் சட்டத்தில் புகுத்துவதற்கு முஸ்லிம் பெண்கள் ஒரு போதும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.

பெண் காதி நீதிபதிகள் நியமணத்தை ஏற்றுக் கொள்ள மாட்டோம்.

அதே போல் பெண் காதியார்கள் நியமணம் செய்யப்பட வேண்டும் என்றும் சிலர் கோரிக்கை முன்வைக்கிறார்கள். இஸ்லாத்தின் அடிப்படையில் தான் திருத்த சட்டம் அமைய வேண்டும் என்ற வகையில் காதியார்களாக பெண்களை நியமிப்பதை இஸ்லாம் ஒரு போதும் அனுமதிக்க வில்லை. குர்ஆனிலோ, நபியவர்களின் வழிகாட்டலிலோ இதற்கு எந்த முன்மாதிரிகளும் கிடையாது. ஆகவே பெண்களை காதி நீதிபதிகளாக நியமிப்பதை நாம் ஏற்றுக் கொள்ள மாட்டோம்.

பெண்களின் உடல், உள பலவீனம் போன்றவற்றை சாதகமாக்கிக் கொண்டு இன்னும் அதிகமாக தவறுகளுக்கு அது வழிவகுத்து விடுமே தவிர எந்தவொரு நியாயத்தையும் பெற்றுத் தராது என்பதுடன் படைத்த இறைவனின் சட்டத்திற்கு மாற்றமாக முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர கூடாது என்றும் தவ்ஹீத் ஜமாஅத் பெண்கள் அணி திட்டவட்டமாக தெரிவித்தது.

முத்தலாக் என்பது 03 சந்தர்பங்களாகும் என்பது தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும்.

பெண்களை பிடிக்காத கணவர்கள் பெண்களை விவாகரத்து செய்து கொள்வதை இஸ்லாம் தலாக் என்று அழைக்கிறது. மனைவியை பிடிக்காத கணவர்கள் மனைவியை விட்டும் நிறந்தரமாக பிரிவதற்கு 03 சந்தர்பங்களை இஸ்லாம் கொடுக்கிறது. தற்போதைய முஸ்லிம் தனியார் சட்டத்தில் மனைவியை கணவன் ஒரு முறை தலாக் சொல்வதே முத்தலாக், 03 சந்தர்பம் என்று ஆக்கி வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே இந்த முறைமை இஸ்லாமிய வழிகாட்டல் பிரகாரம் திருத்தப்பட வேண்டும். தலாக் மற்றும் குலாஃ முறைமை குர்ஆன், ஆதாரபூர்வமான நபிமொழி பிரகாரம் மாற்றம் பெற வேண்டும்.

சீதனம் பெறும் ஆண்களுக்கு எதிராக கடுமையான சட்டத்தை அரசு உருவாக்க வேண்டும்.

பெண்களை திருமணம் முடிப்பதற்காக, ஆண்கள் பெண்களிடமிருந்து சீதனமாக பணம், பொருளை பெற்றுக் கொள்ளும் ஒரு தவறான நடைமுறை முஸ்லிம்களுக்கு மத்தியில் காணப்படுகிறது.

முஸ்லிம் பெண்களுக்கு எதிராக மிகப் பெரும் கொடுமையாக காணப்படும் இந்த சீதன முறைமையை ஆதரிக்கும் விதமாகவே முஸ்லிம் தனியார் சட்டமும் அமையப் பெற்றிருப்பதுடன், தற்போதைய திருத்தக் கோவையிலும் சலீம் மர்சூப் தரப்பினரும், உலமா சபையினர் தரப்பும் சீதனை ஆதரித்தே திருத்தத்தை அமைத்திருக்கிறார்கள்.

சீதனம் எவ்வளவு பெற்றுக் கொண்டார் என்பதை குறிப்பிடும் படியான வரையரைகள் திருத்த சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சீதனத்தை முற்று முழுதாக ஒழித்து, சீதனம் எடுப்போரை தண்டனைக்குற்படுத்த வழி வகை செய்ய வேண்டிய திருத்தக் குழு மிகப் பெரும் பெண் கொடுமைக்கு ஆதரவாக தமது பரிந்துரையை முன்வைத்திருப்பதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

சீதனம் வாங்கும் ஆண்களுக்கு எதிராக கடுமையான சட்டத்தை அரசு கொண்டுவர வேண்டும் என்று தவ்ஹீத் ஜமாஅத் பெண்கள் அணி சார்பில் அரசாங்கத்தை வேண்டிக் கொள்கிறோம்.

பெண்ணுரிமை மாநாட்டுக்கு அன்பாய் அழைக்கிறோம்.

முஸ்லிம் பெண்களுக்கு இஸ்லாம் வழங்கியுள்ள உரிமைகளையும், முஸ்லிம் தனியார் சட்ட திருத்தம் பற்றிய விளிப்புணர்வுகளையும் பெண்களுக்கு மத்தியில் உண்டாக்கும் விதமாக சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் எதிர்வரும் 16ம் திகதி சனிக்கிழமை அன்று கம்பளை, வைட் விங்க்ஸ் மண்டபத்தில் ஆயிரத்திற்கும் அதிகமாக பெண்களை ஒன்று திரட்டி மாபெரும் மாநாட்டை சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் நடத்துகிறது.

இந்த மாநாட்டில் முஸ்லிம் தனியார் சட்டத் திருத்தம் பற்றி விளிப்பூட்டும் உரைகளும், இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ள உரிமைகள் பற்றிய தெளிவுகளும், இஸ்லாம் பற்றிய பகிரங்க கேள்வி பதில் நிகழ்ச்சிகளும் சிறப்பு பட்டி மன்றமும் நடைபெறவுள்ளன.

இந்த மாநாட்டிற்கு முஸ்லிம் பெண்கள் குடும்பத்துடன் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அன்பாய் கேட்டுக் கொள்கிறோம். என்று ஊடக சந்திப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டது.

-ஊடக பிரிவு,

சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் - CTJ

12 comments:

  1. This matter is being handled by ACJU and therefore no need to worry it.

    ReplyDelete
  2. Kalikaalam.
    Yaarukkum maarkkam theriyaathu; Insha Thowwikalath thawira

    ReplyDelete
  3. தேவையான நேரத்தில் குரல் கொடுக்க துனிந்த உங்களுக்கு அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக

    ReplyDelete
  4. As soon as doing our community work

    ReplyDelete
  5. அணிய வேண்டிய முறையில் அணிந்திருக்கும் இவர்களிடம் இருந்தும், அறிய வேண்டியவைகள் நமக்கு  இருக்க முடியும் என்று எதிர்பார்க்கலாம்.

    ReplyDelete
  6. CTJ, SLTJ YOU BOTH ARE CURSE TO SRILANKAN MUSLIMS. BORN IN 1998 BY NAME CALL PJ AS A LEADER. NOW LEADER IS CHASED OUT FROM TNTJ FOR AN ILLICT RELATIONSHIP WITH LADIES FOLLOWERS AS WELL ASSEXUAL HARASSMENT. HERE IN SRI LANKA FOR POWER STRUGGLE AND FOR MONEY THEY DIVIDE IN TO TWO GROUPS. SHATHANS.

    ReplyDelete
  7. Iwangada comedy thaanga mudiyalla, Ayyo Ayyo

    ReplyDelete
  8. May I know this also Nabi Vali ? (Girls gethering and veiw their opinions to public)???

    ReplyDelete
  9. True CTJ is one of fundamental extremist group

    ReplyDelete
  10. Are they moulavia. What is their qualification in quran and hadees. Do not cheat people. Thawheeth broken into many part. You do not agree with each other. How your interpretation of Sharia law related to nikah will be correct.

    ReplyDelete
  11. மூடர்கள் நிறைந்த ஒரு சமூகம். ச்சீ என்று போய்விட்டது. இச்சமூகத்தில் பிறந்து வாழ்வதை இட்டு.

    ReplyDelete

Powered by Blogger.