Header Ads



ஏப்ரலில் இருந்து புதிய, பிறப்புச் சான்றிதழ்

சர்வதேச தரத்திற்கு அமைய, மும்மொழிகளும் அடங்கிய பிறப்புச் சான்றிதழை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக, தலைமை பதிவாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் இந்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என பதிவாளர் நாயகம் என் சி ச்சத்துர விதானகே குறிப்பிட்டுள்ளார்.

புதிய பிறப்புச் சான்றிதழ் விசேட பாதுகாப்பு நடைமுறையின் கீழ் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், எதிர்வரும் காலங்களில், பதிவாளர் நாயகத்தின் கையொப்பத்துடன் பிறப்புச் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது.

சிங்கள மொழியில் வழங்கப்படும் பிறப்புச் சான்றிதழுக்கு மேலதிகமாக ஆங்கில மொழியிலும் குறித்த சான்றிதழ் மொழிபெயர்க்கப்பட்டு வழங்கப்படவுள்ளது.

அத்துடன், தமிழ்மொழியில் வழங்கப்படும் பிறப்புச் சான்றிதழுக்கு மேலதிகமாக ஆங்கில மொழியிலும் குறித்த சான்றிதழ் மொழிபெயர்க்கப்பட்டு வழங்கப்படவுள்ளது.

2 comments:

  1. மும்மொழிகளிலும் பிறப்புச் சான்றிதழை வழங்குவதனை ஊடாக -  மூவினங்களும் இலங்கையர்களே என்ற ஒற்றுமையை ஏற்படுத்தி, மொழி போன்ற பேதங்களை இனியும் பாராட்டாதிருக்க இதனைப் பயன்படுத்தினால் என்ன?

    பிறப்பு முதலே பிரிவினை காட்டி இறப்பு வரை எதிர்வினை நீட்டி அனுபவித்தது எல்லாம் இனியும் வேண்டாமே!

    ReplyDelete

Powered by Blogger.