Header Ads



சிறிசேன - ராஜபக்ச முயற்சிகளை, முறியடிப்பதே எமது நோக்கம் - புரவெசி பலய

அரசியலமைப்பின் 18 ஆவது திருத்தச்சட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தும், சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவின் திட்டத்துக்கு, மைத்திரிபால சிறிசேன ஒத்துழைத்து வருகிறார் என்று சிவில் சமூக அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன.

2015 அதிபர் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்காக, பாடுபட்ட சிவில் சமூக அமைப்புகளின் ஒன்றியமான புரவெசி பலயவின், அமைப்பாளர் காமினி வியன்கொட இதுதொடர்பாக கருத்து வெளியிடுகையில்,

2010 செப்ரெம்பரில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 18 ஆவது திருத்தச்சட்டத்தை, 2015 ஏப்ரல் மாதம், நாடாளுமன்றத்தில் 19 ஆவது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் இல்லாமல் ஒழிக்கப்பட்டது.

19 ஆவது திருத்தச்சட்டத்தின் மூகூலம் நிறைவேற்று அதிகாரம் குறைக்கப்பட்டது. அதனை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கு சிறிலங்கா அதிபர் இடமளிக்கக் கூடாது.

தற்போதைய நிலையில் 18 ஆவது திருத்தச்சட்டத்தை மீண்டும் கொண்டு வரும் சிறிசேன- ராஜபக்சவின் முயற்சிகளை முறியடிப்பதே தமது நோக்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.