Header Ads



பசில் ராஜபக்சவின் எடுபிடிகள், பொய் கதைகளை பரப்புகின்றனர் - வாசுதேவ

பசில் ராஜபக்சவின் எடுபிடிகள் சமூக ஊடகங்கள் வழியாக பல பொய் கதைகளை பரப்பி வருவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார குற்றம் சுமத்தியுள்ளார்.

பசில் ராஜபக்சவின் ஆலோசனைக்கு அமைய அன்று கூட்டு எதிர்க்கட்சியினர் என கூறிக்கொண்ட சிலர் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதன் காரணமாகவே ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்திற்கு எதிராக மகிந்த ராஜபக்ச தலைமையிலான அணியினர் கடந்த காலத்தில் முன்னெடுத்த செயற்பாடுகள் தோல்வியடைந்ததாக எவராவது கூறுவார்களாயின் அது குறித்து இரண்டு முறை சிந்திக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஒக்டோபர் 26 புரட்சி, ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டு வந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை அதன் பின்னர் தேசிய அரசாங்கத்தில் இருந்து விலகிய 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மகிந்த அணியுடன் இணைந்தமை போன்ற செயற்பாடுகள் தவறானதா? என பசில் ராஜபக்சவின் எடுபிடிகளிடம் கேள்வி எழுப்புவதாகவும் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு வழக்கு தீர்ப்புகள் காரணமாகவே ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக நாங்கள் முன்னெடுத்த நடவடிக்கைகள் தோல்வியடைந்தது.

சபாநாயகர் ஐக்கிய தேசியக் கட்சியின் சபாநாயகராக செயற்பட்டதால், அவை தோல்வியடைந்தன. இதனால், நாடாளுமன்றத்தில் சிக்கலான நிலைமை ஏற்பட்டது.

இவை குறித்து விசாரணை நடத்தினால், சபாநாயகரும் குற்றவாளி. பசில் ராஜபக்சவுக்கு எடுபிடி வேலை செய்வோர் இது குறித்து ஒவ்வொன்றை கூறுகின்றனர்.

இதனை நான் விரும்பவில்லை. நான் பசில் ராஜபக்சவை குறை கூறவில்லை. அவரது எடுபிடிகள் மீதே குற்றம் சுமத்துகிறேன் எனவும் வாசுதேவ நாணயக்கார மேலும் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. இது ஓர் அட்டை, ஒட்டுவதற்கும் உரிஞ்சுவதற்கும் நபர் அல்லது நபர்களைத் தேடும் ஒட்டுண்ணி. மக்களுக்கோ நாட்டுக்ேகா எந்தப் பிரயோகமுமற்ற காவி.அவ்வளவுதான்.

    ReplyDelete

Powered by Blogger.