Header Ads



முஸ்லிம் அரசியல்வாதிகள் செய்வதை, ஏன் உங்களால் செய்யமுடியாது - விக்னேஸ்வரனிடம் தமிழ் மக்கள் கேள்வி

முல்லைத்தீவு கேப்பாப்புலவு பகுதியில் காணி மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களை, வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று -09- நேரில் சந்தித்து பேசியிருந்தார்.

அத்துடன், அந்த மக்களுக்கும் உதவிகளையும் வழங்கியிருந்தார்.

இந்நிலையில், காணி மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் பல்வேறு விடயங்களை சுட்டிக்காட்டி சரமாரியாக கேள்வியெழுப்பிய போது அங்கு முறுகல் நிலை ஏற்பட்டிருந்தது.

இதன் போது “இன்று நாங்கள் நடு வீதியில் விடப்பட்டிருக்கின்றோம். நாங்கள் போராடும் இந்த இடத்தில் இருந்து பார்த்தால் தான் எங்களின் வேதனையும், கஸ்டமும் அரசியல் வாதிகளுக்கு புரியும்.

எந்த அரசியல் வாதியும் எங்களிடம் வாக்கு பிச்சை எடுத்தால் தான் அவர்கள் மேடைக்கு போக முடியும். மக்கள் பிரதிநிதிகள் என கூறும் அனைவரும், எங்களிடம் எதிர்ப்பார்ப்பது புள்ளடி ஒன்றை மட்டுமே.

இன்று முஸ்லிம் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது இன மக்களுக்காக மேற்கொள்ளும் நடவடிக்கைகளை பாருங்கள்.

ஏன் அவர்களுக்கு முடிந்தது எங்களடைய மக்கள் பிரிதிநிதிகளால் செய்யமுடியவில்லை.” என்றவாறு மக்கள் சரமாரியாக கேள்வியெழுப்பியிருந்தனர்.

இதனால் அந்த இடத்தில் சற்று முறுகல் நிலை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

Powered by Blogger.