Header Ads



பால்­மா பற்றி விசாரணை நடத்துங்கள் - அரசவைத்­திய அதி­கா­ரிகள், ஜனா­தி­பதியிடம் கோரிக்கை

இறக்­கு­மதி செய்­யப்­படும் பால்­மாவின் தரம் தொடர்பில் விமர்­ச­னங்கள் எழுந்­துள்­ளதால் அவற்றில் கலப்­ப­டங்கள் சேர்க்­கப்­பட்­டுள்­ளதா என்­பதை அறி­வ­தற்கு முறை­யான விசா­ர­ணை­யொன்­றினை நடத்­து­மாறு அரச வைத்­திய அதி­கா­ரிகள் சங்கம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை எழுத்­து­மூலம் கோரி­யுள்­ளது.

இறக்­கு­மதி செய்­யப்­படும் பால்மா வகை­களில் பன்றிக் கொழுப்பு, தாவர எண்ணெய் உட்­பட வேறு சேர்க்­கைகள் அடங்­கி­யுள்­ள­னவா என்றும் சுகா­தார அமைச்சில் தற்­போது பணி­பு­ரியும் அதி­கா­ரிகள் மற்றும்  முன்­னைய அதி­கா­ரி­க­ளுக்கு பால்மா நிறு­வ­னங்­க­ளு­ட­னான உற­வுகள் என்­பன தொடர்பில் ஆரா­யு­மாறும் அரச வைத்­திய அதி­கா­ரிகள் சங்கம் ஜனா­தி­ப­திக்கு அனுப்பி வைத்­துள்ள கடி­தத்தில் வேண்­டுகோள் விடுத்­துள்­ளது.

பால்மா வகை­களில் கலப்­ப­டங்கள் சேர்க்­கப்­பட்­டுள்­ள­தாக நுகர்வோர் அதி­கார சபைக்கு முறைப்­பா­டுகள் கிடைத்­துள்­ள­தாக கைத்­தொழில் மற்றும் வர்த்­தக பிர­தி­ய­மைச்சர் புத்­திக பத்­தி­ரன தெரி­வித்­துள்ள கருத்­து­களின் உண்மை நிலை­யினை அறிந்து கொள்­வ­தற்கு ஒத்­து­ழைப்பு வழங்­கு­மாறும் ஜனா­தி­ப­தி­யிடம் கோரப்­பட்­டுள்­ளது.

அரச வைத்­திய அதி­கா­ரிகள் சங்­கத்தின் தலைவர் டாக்டர் அனு­ருத்த பாதெ­னிய மற்றும் செய­லாளர் டாக்டர் ஹரித அலுத்கே ஆகி­யோரின் கையொப்­பங்­க­ளுடன் குறிப்­பிட்ட கடிதம் ஜனா­தி­ப­திக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது.

கடி­தத்தில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது;

சுகா­தார திணைக்­க­ளத்தில் உணவு சுகா­தாரம் தொடர்­பான பத­வி­களை வகித்­த­வர்கள்  ஓய்­வு­பெற்­றதன் பின்பு வெளி­நாட்டு பால்மா நிறு­வ­னங்­களின் தலை­வர்­க­ளாக நிய­மனம் பெற்­றுள்­ளமை தொடர்­பிலும் ஆராய வேண்டும். நாட்டு மக்­களின் சுகா­தா­ரத்­தினைப் பாது­காக்க வேண்­டிய, உறு­திப்­ப­டுத்த வேண்­டிய சுகா­தார அமைச்சர் பால்மா நிறு­வனங்­க­ளுக்குச் சார்­பாக கருத்து வெளி­யி­டு­கின்­றமை கவ­லைக்­கு­ரி­ய­தாகும். அத்­தோடு அமெ­ரிக்கா மற்றும் மலே­சியா போன்ற நாடு­க­ளி­லி­ருந்து அதி­கமான தாவர எண்ணெய் இறக்­கு­மதி செய்யும் நாடாக நியூ­சி­லாந்து இருக்­கின்­றமை சந்­தே­கத்தை ஏற்­ப­டுத்­து­கி­றது.

உலக சந்­தையில் பால் கொழுப்பு கிலோ ஒன்றின் விலை இலங்கை ரூபாவில் 900 ரூபா­வாகும். இதே­வேளை தாவர எண்ணெய் ஒரு கிலோவின் விலை 150 ரூபா மாத்­தி­ரமே. அதனால் இலங்கை போன்ற பொரு­ளா­தார வசதி குறைந்த மக்கள் வாழும் சந்­தை­க­ளுக்கு குறைந்த விலையில் பால்­மா­வினை வழங்­கு­வ­தற்­காக பல மாற்று வழி­களைக் கையாள்­வ­தாக தக­வல்கள் வெளியாகியுள்ளதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளது.

எனவே, இது தொடர்பாக விசாரணை நடத்தி நாட்டு மக்களுக்கு தூய்மையான பால்மாவினை நுகர்வதற்கு வழிவகை செய்யுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

2 comments:


  1. The request (letter sent) to the President by the GMOA calling the President to set in a motion an official probe on issue of Pig Oil in the imported Milk powder is most welcome by the Muslim Community. The president should immediately take firm action to set in motion this probe. The ACJU and The Halal Accreditation Council (Guarantee) Limited should also be fully probed for allegedly issuing “FALSE HALAL” certificate for this product. There may be powerful political connections and milk powder importing companies working with the ACJU and The Halal Accreditation Council (Guarantee) Limited, a non-for-profit company established by the ACJU which calls itself as the Halal compliant certification issuing body to cover up this matter which is “DETERIMENTAL” to the Muslim Community and to the health of all consumers in general. Hon. Deputy Minister of Trade and Commerce, Budikka Pathirana’s statement in Parliament that the milk powder imports to Sri Lanka has mixed ingredient of PIG OIL has created the need for a more detailed audit of the product as the Hon. Minister is standing firm on his allegations made against the importers and marketing/distributing companies in Sri Lanka.
    The Muslim community in Sri Lanka has to be great full to the Hon. Minister for revealing this information in the “floor of the parliament”.
    It is a “HYPOCRATIC AND SHAMEFULL” statement that the ALL CEYLON JAMIYATHUL ULEMA (ACJU) operated sister NGO – The Halal Accreditation Council (Guarantee) Limited, a non-for-profit company established by the ACJU which calls itself as the Halal compliant certification issuing body has “FALSELY” made statements certifying the Milk powder alleged to contain Lactose and Pig Oil to be “HALAL”.
    This is the greatest “DECEPTION and HOODWINKING to “DUPE” the Muslim community the All Ceylon Jamiyathul Ulema had done to our community.
    “THE MUSLIM VOICE” “DEMANDS” THE TRUTH FROM THE MILK IMPORTERS AND THE MANUFACTURERS/EXPORTERS ABROAD” TO REVEAL THE TRUTH TO THE MUSLIM COMMUNITY.
    “THE MUSLIM VOICE” also requests/appeals all Muslims in Sri Lanka to “BOYCOTT” the purchasing of this type of Powdered Milk that has leaked into the market, as stated by the Hon. Minister Budikka Pathirana – Deputy Minister of Trade and Commerce.
    “THE MUSLIM VOICE” wishes to state that it fully endorses and support Hon. Budikka Pathirana’s statement in parliament and the request taken by the GMOA on this matter. The President’s action also needs a word of thanks from the Muslim Community.
    Noor Nizam.
    Convener – “The Muslim Voice”.

    ReplyDelete
  2. Even though Scientific(Medicine)community too raising the concern about quality of milk powder,that Halal Council who made Muslims to do haram on Eid day given a clean certificate to the quality of milk powder as though they are scientist.Which raise concern about the credibility of this council (Jamiathul Ulama).This serious matter and Muslim intelectual must discuss and take action to find out the truth.

    ReplyDelete

Powered by Blogger.