Header Ads



மாவனல்லை புத்தர் சிலை உடைப்பு - பெண் ஒருவர் கைது

மாவனல்லையிலும், அதனை அண்மித்த பிரதேசங்களிலும் புத்தர் சிலைகளுக்கு சேதம் ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாவனல்லை மஜிஸ்ட்ரேட் உபுல் ராஜகருனா உத்தரவிட்டுள்ளார்.

இது சம்பந்தமான வழக்கு நேற்று (13) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் இதுவரையில் 17 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெண் ஒருவரும் இருப்பதாக கூறப்படுகின்றது.

பிரதான சந்தேக நபர்களுக்கு அடைக்களம் கொடுத்த குற்றச்சாட்டின் பேரில் உலப்பனை பிரதேசத்தில் வசிக்கும் இருவர் நேற்று முன்தினம் (12) கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் பெண் ஒருவரும் காணப்படுவதாக கூறப்படுகின்றது. மாவனல்லை பொலிஸ் விசாரணைப் பிரிவின் பொலிஸ் அதிகாரி ஆர்.எம்.ஏ. ரணசிங்கவின் தலைமையில் சென்ற குழுவினால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களும் நேற்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

நேற்று இடம்பெற்ற வழக்கில் ஆஜர்படுத்துவதற்காக, கேகாலை சிறைச்சாலையிலுள்ள 11 சந்தேகநபர்கள் கடுமையான பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், இச்சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேகநபர்கள் நான்கு பேர், கொழும்பு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இவர்கள் நான்கு பேரும் வனாத்தவில்லு பிரதேசத்திலிருந்து கைது செய்யப்பட்டவர்கள். மாவனல்லை புத்தர் சிலை சேதப்படுத்தியவர்களுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கியதாக கடந்த 30 ஆம் திகதி இவர்கள் கைது செய்யப்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

7 comments:

  1. Please don't give any mercy for them. If they are found guilty pleas hang them in public to learn lesson from that by others.

    ReplyDelete
  2. Let the Magistrate make the decision not you.

    ReplyDelete
  3. Why seeni Mohamed.
    Do you know who did It?
    Do not you know so many conspiracy goes to around Muslim world ..
    So called ISIS if created by some to harm innocent Muslims.
    Why do not think this is too a politics game ?

    ReplyDelete
  4. Seeni mohamamed ta seeni vedivela, pissa

    ReplyDelete
  5. Dear unknown,

    We have to talk the reality and any body who does wrong thing should be punished. I also have said in my post that " if they are found guilty". Therefore let the law & order to work.

    ReplyDelete
  6. Mr. Seeni are you out of your mind. All these stories are drama and its a political game....
    They are only suspect victims. No need any mercy you no need to get crazy/worry...
    Law will do its work..

    ReplyDelete
  7. My dear Goreng

    It is very sad to say that some people are expecting to suffer two millions of Muslims living in Sri Lanka on the account of the radical work of very few which is very racy to count by heads.

    ReplyDelete

Powered by Blogger.