February 26, 2019

இந்தியாவுக்கு பதிலடி கொடுப்பதற்கு நேரமும், இடமும் முடிவு செய்யப்படும் - இம்ரான் கான்

"எங்கள் பதிலடி வித்தியாசமாக இருக்கும். காத்திருங்கள்" என பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகளின் செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிஃப் கஃபூர் இந்தியாவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் முகாமை குறி வைத்து செவ்வாய்க்கிழமை அதிகாலை இந்தியா தாக்குதல் நடத்தியதாக இந்திய வெளியுறவுச் செயலர் விஜய் கோகலே தெரிவித்தார்.

இதனை அடுத்து, பாகிஸ்தான் பாதுகாப்பு படைகளின் மக்கள் தொடர்பு (ஐ.எஸ்.பி.ஆர்) இயக்குநர் மேஜர் ஜெனரல் ஆசிஃப் கஃபார் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார்.

அதில் பேசிய அவர், "நாங்கள் உங்களை (இந்தியா) திகைப்புக்கு உள்ளாக்குவோம். எங்கள் பதிலடிக்கு காத்திருங்கள். நாங்கள் ஆச்சரியப்படவில்லை. எங்கள் பதிலடி வேறு விதமாக இருக்கும். அதை நீங்களே பார்க்கப் போகிறீர்கள். ஆனால், எங்களுக்கு அமைதியின் மீது நம்பிக்கை உள்ளது" என்று கூறியுள்ளார்.

"ஆனால், பாகிஸ்தான் இந்தத் தாக்குதலால் திகைத்துப் போய்விடவில்லை. தயாராகவே இருந்தோம். அதற்கு சரியாக பதிலடியும் கொடுத்தோம்" என்று அவர் தெரிவித்தார்.

ஜப்பாவில் இந்தியா விமானப்படை தாக்கியதை ஒப்புக் கொண்ட அவர். அதே நேரம் இந்தியா கூறியது போல யாரும் உயிரிழக்கவில்லை என்றும் கூறி உள்ளார். நாங்கள் ஜனநாயகவாதிகள். நீங்கள் அவ்வாறானவர்கள் இல்லை என்று நிரூபித்துள்ளீர்கள் என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

ஊடுருவல் மூன்று இடங்களில் நடந்ததாகவும், ஆனால் அவை முறியடிக்கப்பட்டுவிட்டதாகவும் அவர் கூறினார்.

தயாராக இருங்கள்

எந்த சூழ்நிலைக்கும் தயாராக இருக்கும்படி பிரதமர் (இம்ரான்கான்) தங்களை வலியுறுத்தியதாக அவர் கூறி உள்ளார்.

 பாகிஸ்தான்
"இந்திய ராணுவம் 21 நிமிடங்கள் தாக்குதல் நடத்தி 350 பயங்கரவாதிகளை கொன்றதாக கூறுகிறது. ஆனால், யாரும் மரணிக்கவில்லை. இந்தியாவின் கூற்று முற்றிலும் தவறானது" என்று அவர் கூறினார்.

ராஜாங்க ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் இந்த பதிலடி மும்முனைகளிலும் இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தி் முகாம் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறி இந்தியா வெளியிட்டுள்ள புகைப்படம், மூன்று ஆண்டுகளாக யு-டியூப்பில் உள்ளதாக அவர் கூறினார்.

மேலும், இரவு நேரத்தில் இந்திய விமானங்கள் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் பட்சத்தில், எப்படி அந்தப் படம் அவ்வளவு தெளிவாக இருக்கிறது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

நேரமும், இடமும் முடிவு செய்யப்படும்

முன்னதாக, இந்தியாவுக்கு பதிலடி தருவதற்கு நேரமும், இடமும் முடிவு செய்யப்படும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்தார்.

இந்திய விமான படைகளுக்கு எதிராக சரியான நேரத்தில் எதிர்வினையாற்றிய பாகிஸ்தானிய விமானபடைக்கும் வாழ்த்து தெரிவித்து இருந்தார் இம்ரான்கான்.

தாக்குதல்

எல்லை கட்டுப்பாட்டு கோட்டில், அக்னூர், நவ்ஷேரா, கிருஷ்ணா காட்டி செக்டார் பகுதியில் பாகிஸ்தான் செல்களை வீசுவதாகவும், இந்தியா தக்க பதிலடி கொடுத்து வருவதாகவும் தூர்தர்ஷன் கூறுகிறது.

4 கருத்துரைகள்:

Pakistan need to work hard to make India several piece, it is a big country and very difficult to control by government as it has more poor, uneducated and dangerous Hindu terrorist like bjp and rss,
at least it should be divided 4 part

பாக்கிஸ்தானின் அனுமதியின்றி அந்த நாட்டுக்குள் தாக்குதல்கள் நடத்துவது இது முதல் தடவை இல்லையே. ஏற்கனவே அமேரிக்க உள்ளே வந்து பயங்கரவாதி பின்லேடனை உட்பட பலரை கொன்றார்கள். இப்போ இந்தியா உள்ளே வந்து காஷ்மீர பயங்கரவாதிகளை கொன்றார்கள்.
இப்படி நாடு முழுக்க பயங்கரவாதிகள் இருப்பதால் தானே கிறிக்கற் விளையாட கூட உங்கு ஒருவரும் வருவதில்லைமோடி ஆட்சிக்கு வந்து இந கலவரத்தை தவிர வேறு என்ன சாதனை செய்து விட்டார் சொல்லுங்க பாப்போம் ? காஷ்மீர் மக்களுக்கும் பெண்களுக்கு செய்யும் அட்டூழியங்களையும் பார்த்தல் சும்மா உள்ளவர்களே இந்தியாவுக்கு எதிராக படை எடுப்பார்கள்
11000 மேற்பட்ட முஸ்லீம் பெண்களை இத்தீய ராணுவம் கற்பழித்து விட்டு கொன்று விட்டார்கள் ? அதற்கான ஆதாரம் அதிகமா இருக்கு , மற்றது காஷ்மீர் மக்களுக்கு அநியாயம் செய்ய இந்திய ராணுவம் யாரு? நாய்கள் , மிருகங்களை விட படு மோசமான வார்கள் தான் இந்தீய ராணுவம் . சும்மா எல்லா வற்றுக்கும் பாகிஸ்தானை குறை கூறாமல் இத்தீய மோடி நாயின் அரசக்கணத்தை குறை கூறுங்கள்

@True Never die:
India has already divided Pakistan and created Bangladesh. Balochistan is fighting for independence, in this situation you are talking about dividing India in to 4 part!

Post a Comment