Header Ads



அரபு கல்லூரிகளுக்கிடையிலான அஞ்சலோட்டப் போட்டி


இஸ்லாஹிய்யா அரபுக்கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியை முன்னிட்டு அரபு க்கல்லூரிகளுக்கிடையிலான உறவைப் பலப்படுத்தும் நோக்கில் விஷேட அஞ்சலோட்டப் போட்டியொன்று பெப்ரவரி 14 ம் திகதி மாதம்பை அல்மிஸ்பாஹ் மகா வித்தியாலய மைதானத்தில்  ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் இஸ்லாஹிய்யாவின் விஷேட அழைப்பை ஏற்று இர்பானிய்யா அரபுக்கல்லூரி,காஸிமிய்யா அரபுக்கல்லூரி ,ஜாமிஅது மனாரில் ஹுதா ,முஹாஜிரின் அரபுக்கல்லூரி , தகவல் தொழிநுட்பத்திற்கான இஸ்லாமிய நிறுவனம் ஆகிய நிறுவனங்கள் கலந்து கொண்டன.

விறுவிறுப்பான இப்போட்டியில் இர்பானிய்யா அரபுக்கல்லூரி முதலாவது இடத்தையும் ,ஜாமிஅது மனாரில் ஹுதா இரண்டாவது இடத்தையும் காஸிமிய்யா அரபுக்கல்லூரி மூன்றாவது இடத்தையும் பெற்றுக் கொண்டன.


No comments

Powered by Blogger.