Header Ads



மாகாணத் தேர்தலை நடாத்த, மொகமட் கூறும் ஐடியா

தாமதமாகிக்ெகாண்டிருக்கும் மாகாண சபைத் தேர்தலை விரைந்து நடத்துவதாயிருந்தால், உச்ச நீதிமன்றத்தின் பொருட்கோடல் உத்தரவின் மூலமே சாத்தியமாகும் என்று தேர்தல்கள் பணிப்பாளர் நாயகம் எம்.எம்.மொகமட் தினகரன் வாரமஞ்சரிக்குத் தெரிவித்தார்.

பொருட்கோடல் கட்டளைச் சட்டத்தின் (Interpretation Ordinance) கீழ் எவராவது உச்ச நீதிமன்றத்தின் வியாக்கியானத்தைப் பெற்றுக்கொள்ள முனைவாராயின் அதன் மூலம் இதற்கான வழியை ஏற்படுத்த முடியும் என்றும் அவர் கூறினார்.

மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்குப் பாராளுமன்றத்தின் அனுமதியைப் பெற்றுக்ெகாண்டு செயற்பட முடியும், என்பதில் நம்பிக்கையில்லை என்று தெரிவித்த பணிப்பாளர் நாயகம் மொகமட், தற்போது எழுந்துள்ள சட்டச் சிக்கலுக்கு உச்ச நீதிமன்றத்தின் மூலமே தீர்வு காணப்பட முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.

தேர்தலை புதிய முறையில் நடத்துவதற்கான செயற்பாடுகள் இன்னமும் பூர்த்தியாகவில்லை. அத்துடன் பழைய முறையில் நடத்துவதென்றாலும் அதற்குப் புதிய சட்ட மூலம் அல்லது பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெற வேண்டும். இந்நிலையில், பாராளுமன்றத்தில் ஒரு தீர்வு எட்டப்படுவதற்கான சாத்தியமில்லை.

புதிய தேர்தல் முறை சட்டச்சிக்கலுக்குள் முடங்கியிருக்கிறது. அதிலிருந்து விடுபடாமல் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாது. இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிரகாரமே நடவடிக்கை எடுக்க முடியும். சிலவேளை, ​தேர்தலை நடத்துவதற்கான திகதியைக்கூட உச்ச நீதிமன்றம் நியமித்து உத்தரவிட முடியும். இதற்குப் பொருட்கோடல் உத்தரவொன்றைப் பெறுவதற்கு யாராவது மனுத்தாக்கல் செய்தால், அதன்பேரில் வழங்கப்படும் தீர்ப்பின் பிரகாரம் தேர்தல்கள் செயலகம் அதற்கான நடவடிக்ைகயை மேற்கொள்ள முடியும் என்றும் பணிப்பாளர் நாயகம் மொகமட் தெரிவித்தார்.

இதுவரை ஆறு மாகாண சபைகளின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ளது. ஏனைய மூன்று சபைகளில் மேல் மாகாண சபையின் பதவிக்காலம் மார்ச் 24ஆம் திகதியுடன் முடிவடைகிறது. ஆகவே, குறைந்த பட்சம் மாகாண சபைத் தேர்தலை எதிர்வரும் மே மாதமளவிலேனும் நடத்தி முடிக்க வேண்டும். ஜனாதிபதித் தேர்தலை எதிர்வரும் நவம்பர் ஒன்பதாந்திகதிக்கும் டிசம்பர் எட்டாந்திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் நடத்தியாக வேண்டும். அதற்குள் மாகாண சபைத் தேர்தல் நடைபெற வேண்டும் என்றும் தேர்தல்கள் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

2 comments:

  1. (நபியே!) நீர் கூறுவீராக: “அல்லாஹ்வே! ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே! நீ யாரை விரும்புகிறாயோ அவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய்; இன்னும் ஆட்சியை நீ விரும்புவோரிடமிருந்து அகற்றியும் விடுகிறாய்; நீ நாடியோரை கண்ணியப்படுத்துகிறாய்; நீ நாடியவரை இழிவு படுத்தவும் செய்கிறாய்; நன்மைகள் யாவும் உன் கைவசமேயுள்ளன அனைத்துப் பொருட்கள் மீதும் நிச்சயமாக நீ ஆற்றலுடையவனாக இருக்கின்றாய்.”
    (அல்குர்ஆன் : 3:26)
    www.tamililquran.com

    ReplyDelete
  2. Mr. Mohammed Naleemi. You better start growing Beard. Even your old boss having a beard Like a lion.. Why you looks like lioness?

    ReplyDelete

Powered by Blogger.