February 14, 2019

புத்தர் சிலைகள்­ விவகாரம், நீதிமன்றத்தில் நேற்று நடந்தது என்ன..? (நேரடி ரிப்போர்ட்)

- மாவ­னெல்­லை­யி­லி­ருந்து எம்.எப்.எம்.பஸீர் -

கண்டி மற்றும் மாவ­னெல்லை ஆகிய பிர­தான நக­ரங்­களை அண்­மித்த பகு­தி­களில் ஒரே இரவில்  நான்கு இடங்­களில் புத்தர் சிலைகள் நொறுக்கி சேத­மாக்­கப்­பட்ட சம்­ப­வங்­க­ளுடன் ஆரம்­ப­மான புத்தர் சிலை உடைப்பு விவ­கார விசா­ர­ணை­களில், கைது செய்­யப்­பட்­டுள்ள சந்­தேக நபர்­களின் எண்­ணிக்கை தற்­போது 17 ஆக உயர்ந்­துள்­ளது.

இந்த விவ­கா­ரத்தில் பிர­தான சந்­தேக நப­ராக கருதித் தேட­ப்படும் சாதிக் அப்­துல்லா, சாஹித் அப்­துல்லா ஆகிய சகோ­த­ரர்­க­ளுக்கு தங்க இட­ம­ளித்­த­தாக கூறி மாவ­னெல்லை பொலி­ஸாரால் பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் கம்­பளை – உலப்­பனை பகு­தியைச் சேர்ந்த பெண் ஒருவர் உள்­ளிட்ட இரு­வரை கைது செய்து நேற்று மாவ­னெல்லை நீதிவான் நீதி­மன்றில் ஆஜர் செய்­தனர்.

இதன் ஊடா­கவே இந்த விவ­கா­ரத்தில் கைது செய்­யப்­பட்­டுள்ள சந்­தேக நபர்­களின் எண்­ணிக்கை 17 ஆக உயர்ந்­துள்­ளது. இதில் நால்வர் சி.ஐ.டி. பொறுப்பில் தடுப்புக் காவலில் வைக்­கப்­பட்டு நான்காம் மாடியில் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர். ஏனைய 13 பேரையும்  எதிர்­வரும் 27 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்க மாவ­னெல்லை நீதிவான் உபுல் ராஜ­க­ருணா உத்­த­ர­விட்டார்.

நேற்று இவ்­வ­ழக்கு விசா­ர­ணைக்கு வந்­த­போது, சி.ஐ.டி.யால் வணாத்­த­வில்­லுவில் வைத்து கைது செய்­யப்­பட்ட  4 சந்­தேக நபர்­க­ளான மொஹம்மட் ஹனீபா முபீன், மொஹம்மட் ஹமாஸ், மொஹம்மட் நக்பி, மொஹம்மட் நளீம் என அறி­யப்­படும் நால்­வரும் நீதி­வானின் மேற்­பார்­வைக்­காக மன்றில் ஆஜர் செய்­யப்பட்­டனர்.  அத்­துடன்  ஏற்­க­னவே கைது செய்­யப்­பட்ட அக்தாப், முப்தி, முனீப், இர்ஷாத், அஸீஸ், மொஹம்மட் பெளஸான்,  முஸ்­தபா, மொஹம்மட் பயாஸ், பயாஸ் அஹமட்,  மொஹம்மட் இப்­ராஹீம், ஆகில் அஹமட்  ஆகியோர் சிறைச்­சாலை அதி­கா­ரி­களால் மன்றில் ஆஜர்  செய்­யப்­பட்­டனர்.  பின்னர்  பிர­தான சந்­தேக நபர்­க­ளுக்கு அடைக்­கலம் கொடுத்­தமை தொடர்பில்  அப்துல் ஜப்பார் பதுர்தீன், சித்தி நஸீரா இஸ்­ஸதீன் ஆகி­யோரை மாவ­னெல்லை பொலி­சாரும்  கேகாலை மாவட்ட குற்­றத்­த­டுப்புப் பிரி­வி­னரும் மன்றில் முன்­னி­லைப்­ப­டுத்­தினர்.

விசா­ர­ணை­யா­ளர்கள் சார்பில்  நேற்று மன்றில் மாவ­னெல்லை  பொலிஸ் நிலை­யத்தின்  பொலிஸ் பரி­சோ­தகர் ஆர்.எம்.ஏ. ரண­சிங்க ஆஜ­ரானார்.   சி.ஐ.டி. சார்பில்  உப­பொலிஸ் பரி­சோ­தகர்  டயஸ் முன்­னி­லை­யானார்.

முதலில் நேற்று வழக்கு விசா­ர­ணைக்கு வந்­த­போது, 15 சந்­தேக நபர்­களே ஆஜர் செய்­யப்­பட்­டனர். 11 பேர் விளக்­க­ம­றி­யலில் இருந்தும் நால்வர்  சி.ஐ.டி. பொறுப்­பி­லி­ருந்தும் ஆஜர் செய்­யப்­பட்­டனர்.  இதன்­போது குறித்த 11 சந்­தேக நபர்­க­ளையும் தனித்­த­னி­யாக சிறையில் வைத்து விசா­ரிக்க வேண்­டு­மென சி.ஐ.டி. உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர் டயஸ் நீதி­வா­னிடம் சுட்­டிக்­காட்­டினார். இது­வரை விசா­ர­ணை­களில் வெளிப்­ப­டுத்­தப்­பட்ட தக­வல்­க­ளுக்­க­மைய இந்த விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­படல் வேண்­டு­மெ­னவும் அதனால் கேகாலை சிறைச்­சாலை அத்­தி­யட்­ச­க­ருக்கு, அந்த விசா­ர­ணைகள் தொடர்பில் சி.ஐ.டி. அதி­கா­ரி­க­ளுக்கு அனு­ம­தி­ய­ளிக்க உத்­த­ர­வி­டு­மாறு அவர் கோரினார். இதற்கு நீதிவான் அனு­ம­தி­ய­ளித்தார்.

இத­னை­ய­டுத்து சி.ஐ.டி. பொறுப்பில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள நால்­வ­ரையும் தொடர்ந்து தடுத்து வைத்து விசா­ரிக்க அனு­ம­தித்த நீதிவான், ஏனைய 11 பேரையும் விளக்­க­ம­றி­யலில் வைக்க உத்­த­ர­விட்டார்.

இத­னை­ய­டுத்து இத­னுடன் தொடர்­பான வழக்­காக மற்­றொரு புத்தர் சிலை உடைக்­கப்­பட்ட விவ­காரம் மன்றில் விசா­ர­ணைக்கு வந்­தது.  இதன்­போது மாவ­னெல்லை பொலிஸ் பரி­சோ­தகர் ரண­சிங்க மன்றில் கருத்­துக்­களை முன்­வைத்து, பிர­தான சந்­தேக நபர்­க­ளுக்கு அடைக்­கலம் வழங்­கிய இரு­வரை மன்றில் முன்­னி­லைப்­ப­டுத்­தினார். சிறை­யி­லுள்ள 11 பேருக்கும் மேல­தி­க­மாக  அவர்­களை அவர் ஆஜர் செய்தார்.

“கனம் நீதிவான் அவர்­களே, இந்த விவ­கா­ரத்தில் தேடப்­படும் மிக முக்­கிய சந்­தேக நபர்கள் இரு­வ­ரையும் இது­வரை கைது செய்ய முடி­ய­வில்லை. அவர்கள் தலை­ம­றை­வா­கி­யுள்­ளனர். அவர்­க­ளுக்கு  அடைக்­கலம் கொடுத்­த­மைக்­காக இரு­வரை நாம் விசா­ர­ணையில் கைது செய்­துள்ளோம்.  நாவ­லப்­பிட்டி வீதி, உலப்­பனை பகு­தியில் சந்­தேக நபர்கள் இவர்­களின் வீட்டில் தங்­கி­யி­ருந்­துள்­ளனர். எனினும் இவர்கள் அது தொடர்பில் அறிந்­தி­ருந்தும்  பொலி­சா­ருக்குத் தகவல் அளிக்­க­வில்லை. எனவே, பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் 2(1)ஈ, 2, 5(அ) ஆகிய பிரி­வு­களின் கீழ் இவர்­களைக் கைது செய்­துள்ளோம்” என்றார்.

இந்­நி­லையில் சந்­தேக நபர்கள் சார்பில், கொழும்­பி­லி­ருந்து சென்ற சட்­டத்­த­ர­ணி­க­ளான தில்ஹாம் தெஹ்லான் மற்றும் அசேல உள்­ளிட்ட குழு­வினர் ஆஜ­ரா­கி­யி­ருந்­தனர். சட்­டத்­த­ரணி தில்ஹாம் தெஹ்லான் மன்றில் வாதி­டு­கையில்,

“இரு சந்­தேக நபர்­களை கைது செய்ய பொலிசார் தவ­றி­விட்டு அவர்கள் மறைந்­துள்­ள­தாக ஒவ்­வொரு தவ­ணை­யிலும் கூறு­கின்­றனர். இங்கு இவ்­வ­ழக்கின் சாட்­சி­யா­ளர்­க­ளாக இருக்க வேண்­டி­யவர்கள் சந்­தேக நபர்­க­ளாக உள்­ளனர்.

குறிப்­பாக  உதவி ஒத்­தாசை வழங்­கிய குற்­றச்­சாட்டில் இரு­வரை இங்கு ஆஜர் செய்­துள்­ளனர். அவர்­க­ளுக்கு இந்த சம்­ப­வமே தெரி­யாது. அவர்­க­ளது வீட்­டுக்கு சந்­தேக நபர்கள் சென்­றுள்­ளனர். எனினும், அப்­போது அவர்கள் இவ்­வ­ழக்கின் சந்­தேக நபர்கள் என்­பதை அவர்கள் அறிந்­தி­ருக்­க­வில்லை. அங்கு அவர்கள் சில மணி நேரமே இருந்­துள்­ளனர். இக்­குற்றம் தொடர்பில் இவர்கள் எத­னையும் அறிந்­தி­ருக்­க­வில்லை.  குறைந்­த­பட்சம் இந்தப் பெண்­ணுக்­கேனும் பிணை தாருங்கள்” என கோரினார்.

எனினும்,  மாவ­னெல்லை நீதி­மன்றில் கட­மை­யாற்றும் அனைத்து சட்­டத்­த­ர­ணி­களும் (நேற்று மன்றில் இருந்தோர்) விசா­ர­ணை­யா­ளர்­க­ளுக்கு கூடுதல் பல­மாக பாதிக்­கப்­பட்­ட­வர்கள் சார்பில் ஆஜ­ராகி பிணைக்கு எதிர்ப்பு வெளி­யிட்­டனர்.

இந்­நி­லையில் குற்­றச்­சாட்டு பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் உள்­ளதால் பிணை வழங்க அதி­காரம் இல்லை எனக் கூறிய நீதிவான், அனை­வ­ரையும் விளக்­க­ம­றி­யலில் வைக்க உத்­த­ர­விட்டார். அத்­துடன் எதிர்­வரும் 27 ஆம் திகதி கைப்­பற்­றப்­பட்ட வெடி­பொ­ருட்கள் குறித்த இர­சா­யன பகுப்­பாய்வு அறிக்கை மற்றும் சந்­தேக நபர்கள் தொடர்­பி­லான சாட்­சி­யங்­களின் சுருக்­கத்தை மன்றில் தாக்கல் செய்­யவும் உத்­த­ர­விட்டார்.

கடந்த 2018 டிசம்பர் 25 ஆம் திகதி அதி­காலை நேரத்தில் குரு­நாகல் மாவட்டம் பொது­ஹர பொலிஸ் பிரிவின் கட்­டு­பிட்­டிய வீதியில்  கோண்­வல பகு­தியில் அமை­யப்­பெற்­றுள்ள ஆலயம் ஒன்றில் இந்து கட­வுள்­களைக் குறிக்கும் உரு­வச்­சி­லைகள் அடை­யாளம் தெரி­யா­தோரால் அடித்து நொறுக்கி சேத­மாக்­கப்­பட்­டன.  இந்த சம்­பவம் தொடர்பில் பொது­ஹர பொலிஸார் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தி­ருந்த நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் அதா­வது, கடந்த 2018 டிசம்பர் 26 ஆம் திகதி இத­னை­யொத்த ஒரு சம்­பவம் யட்­டி­நு­வர – வெலம்­பட  பொலிஸ் பிரிவில் பதி­வா­னது.

அதி­காலை 3.00 மணி­ய­ளவில் வெலம்­பட பொலிஸ் பிரிவின் லெயம்­க­ஹ­வல பகு­தியில் மூன்­றரை அடி உய­ர­மான புத்தர் சிலை அடை­யாளம் தெரி­யா­தோரின் தாக்­கு­த­லுக்­குள்­ளா­னது. அத்­துடன் அந்த மூன்­றரை அடி உய­ர­மான புத்தர் சிலை சேதப்­ப­டுத்­தப்­படும் அதே நேரம் அதனை அண்­டிய பகு­தியில் இருந்த மேலும் மூன்று சிறு சிலை­களும் சேதப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

இந்­நி­லையில்  அதே தினம்  அதி­காலை 4.00 மணியளவில்  மாவனெல்லை – திதுருவத்த சந்தியிலுள்ள புத்தர் சிலையும் தாக்கி  சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதன்போதுதான் இந்த சிலை உடைப்பு விவகாரத்தில் அல்லது இச்சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க தடயமும் கிடைத்திருந்தது.

திதுருவத்த சந்தியில் புத்தர் சிலையை தாக்க  மோட்டார் சைக்கிளில்  இருவர் வந்துள் ளனர். இவ்வாறு வந்ததாகக் கூறப்படும் இருவரில் ஒருவரை பிரதேசவாசிகள் துரத்திப் பிடித்து மாவனெல்லை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். அதுமுதல் இதுகுறித்த விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையிலேயே தற்போது அவ்விடயத்தில் பல அதிர்ச்சியளிக்கும் விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli

5 கருத்துரைகள்:

appo digana sambawathil kaithu seyya pattawarhaluku pinai walagiyadu enda sattathil keel kaithu seyyapattadal

இலங்கை முஸ்லிம் போராளிகள்?
எல்லாரும் ஒரு சில நாட்களில் கம்பி எண்ணுகிறார்கள்.

In Srilanka they was only Hindhu and Christian(Tamil) Terrorist not even a single terrorist was in History and will not be any terror Muslim in Future.. Muslims can not be a Muslim if he is a Terror.
"Islam means Peace" One and only peaceful religion of the world.
Don't be stupid and communal Ajan. Read books with open mind to know the truth...

இலங்கை, இந்தியா என பல நாடுகளில் தடை செய்யப்பட்ட பயங்கரவாதி பிரபாகரனை நினைவு கூர்ந்த தமிழ் பயங்கரவாதிகளை இதுவரை கைது செய்யாதது ஏன்? ஓ இந்த நாடகங்களின் பின்னால் புலம்பெயர் பயங்கரவாதிகள் இருப்பதாலோ

These are not militants(poralighal)But Muslim terrorist,who are helping Buddhist terrorist who wants All out war against Muslims and sponsored by Tamil terrorist(Diaspora) and Norway. Tamil Diaspora and Norway doing their best since 2010 to have a Island wide riot against Muslims.They did not succeed in Digana of Muslims reaction for the destruction.Now try to have Sinhalese to go for riot.So for that Muslim terrorist were used to anger the Sinhalese for them is Buddhist statue so and so sacred.How ever this terrorist must be punished.

Post a Comment