Header Ads



இஸ்லாத்திற்கு எதிராக புத்தகம் எழுத ஆரம்பித்த அரசியல்வாதி, இறுதியில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் (வீடியோ)


நெதர்லாந்தின் முன்னால் MP ஜோரம் வான் லவரன் - Joram van Klaveren இரண்டு நாட்களுக்கு முன் புனித இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.

நெதர்லாந்தின் முன்னால் MP ஜோரம் வான் லவரன் - Joram van Klaveren தான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதாக ஊடகங்களுக்கு பகிரங்கமாக அறிவித்துள்ளார். - சர்வதேச ஊடகங்கள் இதனை உறுதிப்படுத்தியுள்ளன.

டச்சு – நெதர்லாந்தின் தீவிர வலதுசாரி கட்சியின் முன்னால் உறுப்பினரும், முன்னால் பாராளுமன்ற உறுப்பினருமான ஜோரம் வான் லவரன் இஸ்லாத்திற்கு எதிராக கடுமையான கருத்துக்களை தெரிவித்து வந்தவராவார். 

2010 – 2014 காலப் பகுதியில் நெதர்லாந்து சுதந்திரக் கட்சியின் - Freedom Party (PVV) பாராளுமன்ற உறுப்பினராக செயல்பட்ட ஜோரம், பின்னர் தனிக் கட்சி ஆரம்பித்து 2017ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

தேர்தல் தோல்வியுடன் தீவிர அரசியலில் இருந்து விலகியிருந்த ஜோரம் அவர்கள் தான் கடுமையாக எதிர்த்து விமர்சனம் செய்து வந்த இஸ்லாத்தைப் பற்றிய ஒரு நூலை எழுத ஆரம்பித்திருந்தார்.

ஜோரம் அவர்கள் தீவிர அரசியலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நேரத்தில் இஸ்லாமிய மார்க்கத்தை பொய்யான மார்க்கம் என்றும், குர்ஆன் என்பது விஷம் என்றும் கடுமையான விமர்சனத்தை தொடர்ந்தும் முன்வைத்து வந்தவராவார்.

தான் இஸ்லாத்தின் மீதும், குர்ஆன் மீதும் முன்வைத்து குற்றச்சாட்டுக்கள் மிகத் தவறானவை என்பதை தற்போது உணர்வதாக ஜோரம் தெரிவித்துள்ளார்.

தான் இஸ்லாத்தை விமர்சித்து எழுத ஆரம்பித்த நூலுக்காக இஸ்லாம் பற்றிய பல செய்திகளை அவர் ஆழமாக படிக்க ஆரம்பித்திருந்தார். 

இஸ்லாத்தின் மிகப் பெரும் எதிரியாகவும், மிகப் பெரும் விமர்சகராகவும் இருந்து, இஸ்லாத்தை எதிர்ப்பதற்காகவே புத்தகம் எழுத ஆரம்பித்த ஜோரம் பின்னர் இஸ்லாத்தின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். - அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்.

40 வயதாகும் ஜோரம் அவர்கள் கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் 26ம் தேதி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுவிட்டார். அதனை வெளியுலகுக்கு பகிரங்கப்படுத்தாமல் இருந்தார்.

“இஸ்லாத்தை விமர்சிக்கும் விதமாக நான் ஒரு புத்தகத்தை எழுதிக் கொண்டிருந்த நிலையில், இஸ்லாத்தை நானே ஏற்றுக் கொள்ளும் நிலை ஏற்பட்டு விட்டது.” 

“புத்தகத்தை எழுதிக் கொண்டிருக்கும் போது இஸ்லாத்தைப் பற்றி அதிகமாக தெரிந்து கொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்தது. அதுதான் இஸ்லாம் பற்றிய என்னுடைய முழுமையான பிழையான கருத்துக்களையும் மாற்றி விட்டது.” என்று நெதர்லாந்தின் வானொலி சேவைக்கு ஜோரம் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இஸ்லாத்தின் உண்மைத் தன்மையை பற்றிய செய்திகளை படித்துணராமல் விமர்சிப்போர் மாத்திரமே இஸ்லாத்திற்கு எதிராக செயல்படுகிறார்கள். 

குர்ஆனையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆதாரபூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ள செய்திகளையும் படித்துணர்ந்து கொள்ளும் யாரும் இஸ்லாத்தின் பக்கம் ஈர்க்கப்பட்டு விடுவார்கள் என்பதற்கு கடந்த கால வரலாற்றுடன் இவரும் ஓர் வரலாற்று முன்னுதாரணமாகும்.

திருமறைக் குர்ஆனின் நேர்வழிக்கான தெளிவான அழைப்பை ஏற்றுக் கொள்ளும் எவரும் இஸ்லாத்தின் இன்பத்தை அடைந்து கொள்வார்கள். 

வேதமுடையோரே! நாம் அல்லாஹ்வைத் தவிர (யாரையும்) வணங்கக் கூடாது; அவனுக்கு இணையாக எதையும் கருதக் கூடாது; அல்லாஹ்வை அன்றி நம்மில் ஒருவர் மற்றவரைக் கடவுள்களாக ஆக்கக் கூடாது என்ற எங்களுக்கும், உங்களுக்கும் பொதுவான கொள்கைக்கு வாருங்கள்!

இறை வேதம், அல்குர்ஆன் 03:64

-ரஸ்மின் MISc

https://www.youtube.com/watch?v=kgSOp4DKtb0



2 comments:

Powered by Blogger.