Header Ads



இராஜதந்திர கடவுச்சீட்டை, யார் பயன்படுத்தலாம்...?

பாதாள உலகக் கோஷ்டித் தலைவர் மாகந்துரே மதுஷ் உள்ளிட்ட குழுவினருடன், டுபாய் நாட்டில் வைத்து கைது செய்யப்பட்ட, இராஜதந்திர கடவுச்சீட்டை உடைய நபர் யாரென்று, இதுவரையில் அரசாங்கம் வெளிப்படுத்தாத நிலையில், இது தொடர்பான உண்மைத் தன்மையை வெளிப்படுத்துமாறு, எதிர்க்கட்சியினர் கோரி வருகின்றனர்.

எவ்வாறாயினும், இந்நாட்டில் காணப்படும் பிரதான பதவிநிலைகளின் அடிப்படையிலான 29 குழுக்களுக்கு, இவ்வாறான இராஜதந்திர கடவுச்சீட்டை வழங்க முடியுமென்று அறிய முடிகின்றது.

அந்த வகையில், ஜனாதிபதி, பிரதமர், முன்னாள் ஜனாதிபதிகள், முன்னாள் பிரதமர்கள், முன்னாள் - இந்நாள் சபாநாயகர்கள், பிரதம நீதியரசர், அமைச்சர்கள் மற்றும் அவர்களுக்கு நெருங்கிய குடும்ப அங்கத்தவர்களுக்கு, இவ்வாறான இராஜதந்திர கடவுச்சீட்டுகளை வழங்க முடியுமெனத் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், வெளிநாட்டுத் தூதுவர்களுக்காக அமைச்சரவையினால் தீர்மானிக்கப்படும் அதிகாரிகள், மாகாண ஆளுநர்கள், முதலமைச்சர்கள், பிரதி மற்றும் அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்கள், ஆணைக்குழுக்களின் உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சிமன்றத் தவிசாளர்கள், மாகாண அமைச்சர்கள் மற்றும் அவர்களது மனைவியருக்கும், இந்த இராஜதந்திர கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.