Header Ads



ஜனாதிபதி வேட்பாளராக ஷிரந்தி..? அதிக வாய்ப்புள்ளதாக நாமல் தெரிவிப்பு - பசில் மனவருத்தம்

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் முதற்பெண்மணி ஷிரந்தி ராஜபக்ச போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தேர்தலில் போட்டியிடுவதற்கான முன்னாயத்த நடவடிக்கைகளில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச தீவிரமாக ஈடுபட்டு வருவதாக ராஜபக்ச குடும்ப தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

தற்போது இந்தியாவுக்கான விஜயத்தில் ஈடுபட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தான் நியமிக்கும் வேட்பாளர் வெற்றி பெறுவது நிச்சயம் என குறிப்பிட்டார்.

மஹிந்த ராஜபக்சவின் கருத்து தொடர்பில் தூதரக அதிகாரிகள் பலர் ஜனாதிபதி வேட்பாளர் யார் என நாமல் ராஜபக்சவிடம் வினவியுள்ளனர்.

இதன் போது தனது தாயார் ஷிரந்தி ராஜபக்சவுக்கே ஜனாதிபதி வேட்பாளராகுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக நாமல் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக யாரை நியமிப்பது என்பது தொடர்பில் பொதுஜன பெரமுன தலைவர்களுக்கு இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடல் பசில் ராஜபக்சவுக்கு அவசியமான நேரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. எனினும் மாலை 7 மணிக்கு கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் இரவு 10 மணிவரை பசில் ராஜபக்ச கலந்து கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் பசில் ராஜபக்ச மன வருத்தத்தில் கலந்துரையாடல்களை புறக்கணித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ராஜபக்ஷ குடும்பத்தை சேர்ந்த ஒருவரே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் என பல தடவைகள் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. The corrupt and power hungry MR family will even put forward a donkey if they have one as their family member.

    ReplyDelete

Powered by Blogger.