February 12, 2019

இவ்வாறானவர்களின்,, கருத்துக்களை ஒருபோதும் சமூக ஊடகங்களில் பரப்பக்கூடாது - மௌலவி AJ அப்துல் ஹாலிக்

சிறிய சிறிய விடயங்களுக்காக நாம் பிரிந்து விடக் கூடாது. நம்மை பிளவு படுத்துவதையே சிலர் இக்காக கொண்டு செயற்படுகின்றனர் என அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையின் உப தலைவர் மௌலவி A .J .அப்துல் ஹாலிக் தெரிவித்தார்.

காத்தான்குடி ஜாமியுழ்ழாபிரீன் ஜும்ஆப்பள்ளிவாயலில் இடம் பெற்ற ஜும்ஆப்பிரசங்கத்தின் போது அவர் மேற்கண்டவாறு கூறினார். இதன் போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

 ஒருவரை ஒருவர் மதிக்கும் தன்மை நம்மிடையே இருக்க வேண்டும். சிறிய சிறிய கருத்து வேறுபாடுகள் இருக்கலாம் அதற்காக ஒருவரை ஒருவர் பரிகாசிப்பது இழிவுபடுத்துவது தரக்குறைவாக நடந்து கொள்வது போன்றவைகள் ஒரு போதும் இருக்க கூடாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வபாத்திலிருந்து கருத்து ரீதியான முரண்பாடுகள் ஏற்பட்டன. ஆனால் ஸஹாபாக்கல் இமாம்கள் யாரையும் கீழ்;த்தரமாக பேச வில்லை. ஒருவரையொருவர் மதித்து நடந்து கொண்டார்கள்.

அபூபக்கர் (ரழி) அவர்களை உமர் (ரழி) அவர்கள் மதித்து மரியாதை காட்டி நடந்தார்கள் 

இவ்வாறுதான் இமாம்கள் மத்தியிலும் கருத்து வேறுபாடுகள் இருந்த போதிலும் யாரும் யாரையும் விமர்சிக்க வில்லை. 

இன்று சர்வதேச ரீதியாகவும் குறிப்பாக இலங்கையில் முஸ்லிம்களாகிய நாம் என்ன நிலையில் இருக்கின்றோம் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

முஸ்லிம்களை முஸ்லிம்களே காட்டிக்கொடுக்கும் நிலை காணப்படுகின்றது. கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஒரு பிரதேசத்தில் நடந்த சம்பவம் நமக்கு நன்கு தெரியும்.

ஸல்மான் றுஸ்தி, தஸ்லிமா நஸ்ரீன் போன்றவர்களைப் போல அன்மைக்காலமாக முன்னாள் முஸ்லிம்கள் என சொல்லிக் கொண்டு  ex முஸ்லிம்கள் என்ற சிலரும் இஸ்லாத்திற்கு எதிராக பிரச்சாரங்களை செய்து வருகின்றனர்.

 நாங்கள் முன்னாள் முஸ்லிம்கள் என கூறிக் கொண்டு சில கருத்துக்களை வெளியிடுவதை நாம் சமூக ஊடங்களில் காண்கின்றோம்.

ஹிஜாப் தேவையில்லை போன்ற கருத்துக்களையும் இவர்கள் கூறி வருகின்றனர்.

இவர்கள் விடயத்தில் நாம் கவனமாக இருக்க வேண்டும். 

அதே போன்றுதான் உங்களது காத்தான்குடியிலும், ஒரு உலமா மோசமான கருத்துக்களை பரப்பி வருகின்றார் அன்மையில் அவர் அந்த கருத்துக்களை பேசியிருப்பதை சமூக ஊடகங்களில் கண்டோம். 

இவ்வாறானவர்களின் கருத்துக்களை ஒரு போதும் நாமே சமூக ஊடகங்களில் பரப்புகின்றோம் அவற்றை நாம் பரப்பக் கூடாது..

இஸ்லாமிய அகீதாவுக்கு (கொள்கைக்கு) முரணாக யார் நடந்தாலும் யார் பேசினாலும் அவற்றை நாம் ஏற்றுக் கொள்ளமுடியாது. 

எனவே காத்தான்குடி அழகான, பசுமையான ஒரு நகரமாகும் காத்தான்குடிக்குள் நுழையும் போதே உள்ளத்தில் ஒரு மகிழ்ச்சி ஏற்படுகின்றது.

நமக்குள் சிறிய சிறிய விடயங்களுக்காக பிளவுபட்டு, ஒருவரை ஒருவர் எதிர்த்துக் கொண்டு பிரிந்து செயற்படாமல் அனைவரும் ஒன்றுபட்டு இஸ்லாத்தை பாதுகாப்போம் என அவர் மேலும் தெரிவித்தார்.

இவருடைய ஜும்ஆப்பிரசங்கம் காலத்திற்கு தேவையானதாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

எம்.எஸ்.எம்.நூர்தீன்

1 கருத்துரைகள்:

இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்; அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத்துப் பாருங்கள்; நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் - உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து; அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்; இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான் - நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் ஆயத்களை - வசனங்களை உங்களுக்கு தெளிவாக்குகிறான்.
(அல்குர்ஆன் : 3:103)
www.tamililquran.com

Post a Comment