Header Ads



7500 பேருக்கு அரச வேலை, வழங்குவதை நிராகரித்த மைத்திரி

கபொத உயர்தர கல்வியைப் பூர்த்தி செய்த 7500 இளைஞர்களுக்கு அரசாங்கத் துறையில் வேலை வாய்ப்பு வழங்குவதற்கு, ஐதேக அரசாங்கம் சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்தை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் கபொத உயர்தர கல்வியைப் பூர்த்தி செய்த 7500 இளைஞர்களுக்கு அரச துறையில் வேலைவாய்ப்பு வழங்குவதற்கான அமைச்சரவைப் பத்திரம் ஒன்று முன்வைக்கப்பட்டது.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஊடாக ஆட்சேர்ப்பை மேற்கொள்ளும் வகையில் இந்த திட்டம் அமைந்திருந்தது.

எனினும், நாட்டில் பெருமளவு பட்டதாரிகள் வேலைவாய்ப்பில்லாமல் இருக்கும் நிலையில், 7500 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவது பொருத்தமற்றது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அதனை நிராகரித்துள்ளார்.

சிறிலங்கா அதிபரின் எதிர்ப்பை அடுத்து. அந்த திட்டத்தை பின்னர் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதென முடிவு செய்யப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.