Header Ads



60 இலங்கையர்கள் பிரான்சிலிருந்து, தனி விமானத்தில் நாடு கடத்தப்பட்டனர்

மீன்பிடி படகொன்றில் சட்டவிரோதமாக பிரான்சிற்கு சொந்தமான ரியூனியன் தீவிற்கு அகதிகளாக சென்ற 60 பேர் இன்று பிற்பகல் மீண்டும் தாயகம் திரும்பியுள்ளனர்.

பிரான்சிற்கு சொந்தமான விமானமொன்றில் இவர்கள் இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

இவர்களுள் 52 ஆண்களும் 3 பெண்கள் மற்றும் 5 சிறுவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர்களிடம் குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் தற்போது வாக்குமூலம் பதிவு செய்யும் நிலையில் , பின்னர் அவர்கள் குற்றப்புலனாய்வுப்பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

கடந்த ஜனவரி 24ம் திகதி 72 பேருடன் சிலாபத்தில் இருந்து ஆழ்கடல் படகொன்றில் குறித்த நபர்கள் ரியூனியன் நோக்கி சென்றிருந்தனர்.

இந்நிலையில், குறித்த நபர்களில் 6 பேருக்கு ரீயூனியன் தீவில் அரசியல் அடைக்கலம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.