Header Ads



தூபி மீது ஏறி கைதான 2 மாணவர் விவகாரம், பாதிஹ் கல்வி நிறுவனம் மீதான விமர்சனங்களை தவிர்ப்போம்..!

பிள்ளையை கிள்ளி தொட்டிலையும் ஆட்டுகிறார்கள். மிஹிந்தலை தூபி மீது ஏறி கைதான 2 மாணவர்களும் பாதிஹில் கற்பவர்கள் தான். அவர்கள் அங்கு எதற்கு சென்றார்கள் என்று அன்றாட செய்தித் தாள் வாசிப்பவர்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆனால், அவர்கள் செய்தது முற்றிலும் பிழை என்பதை யாரும் மறுக்கவில்லை. அதற்காக அவர்கள் தமது கல்வியை தொடரும் இடத்தை மட்டமாக்க முயற்சிப்பதெல்லாம் நியாயமானதல்ல. அதிலும் நுஸ்ரான் லெப்பையின் 140 பைல் கதையும் அவரின் விழுதுகள் ஒரு பதிவையே சுற்றி சுற்றி Copy& Paste பண்ணுவதும் வேற லெவல்.

குறித்த மாணவர்கள் கற்ற இடம் அறபு மத்ரஸா என்று செய்தியை பரப்பிய ஊடங்களே தவிர குறித்த நிறுவனம் அல்ல என்பதை முதலில் புறிந்து கொள்ள வேண்டும். பாரம்பரிய மத்ரஸா கல்வி முறையிலிருந்து மாறுபட்டு ஷரீஆ கல்வியுடன் இணைந்த உயர் பட்டப்படிப்பிலும் மாணவர்களை ஈடுபடுத்தும் கல்வி முறை மாற்றத்தின் சிந்தனை நீட்சியின் அடியாகவே பாதிஹ் ஆரம்பிக்கப்பட்டது
முதலில், பாதிஹ் அறபு கலாசாலை கிடையாது.ஆனால், இலங்கையில் இஸ்லாமிய ஷரீஆ துறையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு அதே துறையில் பட்டச்சான்றுதலை வழஙகத்தக்க அரச சார்பற்ற பல்கலைக்கழகமாக மாற்றுதல் என்ற தூரநோக்குடன் முழுக்க ஒழுங்கமைக்கப்பட்டு 2011ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கல்வி நிறுவனம்.

இந்த இலக்கின் ஒரு கட்டமாகாவே சூடான் சர்வதேச இஸ்லாமிய பலகலைக்கழம் தமது Degree சான்றுதலை இலங்கையில் பாதிஹ் ஊடாகவும் வழங்குவதற்க்கான அங்கிகாரதை வழங்கியுள்ளது. இதனூடாக பாதிஹில் பிக்ஹ் வ உசூலுஹு பிரிவில் கற்று பட்டம் பெற்று செல்லும் மாணவர் குறித்த பலகலைக்கழகத்தின் சான்றிதலை பெறுவார்.

எந்த சைட் கோஸ் வேலையும் இங்கே இல்லை. முதல் இரண்டரை வருடங்களும் மாணவர்கள் அறபு, ஆங்கில, தமிழ் மற்றும் சிங்கள மொழிக்கற்கையுடன் சேர்த்து உயர்தரப்பிரிவுக்கு (கலை, வர்த்தகம்) தயார்படுத்தப்படுகின்றார்கள். அதன் பின்னர் தான் ஷரீஆ பிரிவுவுக்கு அவர்கள் உள்வாங்கப்பட்டு பிக்ஹ் வ உஸூலுஹு ( Islamic Jurisprudence & Its Principles) துறையில் Semester முறைப்படி 3 வருடங்கள் கற்பிக்கப்படுகின்றனர். இலங்கை முஸ்லிம் வரலாறு 1 Semester க்கு பாடமாக உள்ளது என்பதெல்லாம் இங்கே ஸைட் கோஸ் நடக்கின்றது என்று சொன்னவர்களுக்கு தெரிந்திருக்காது என்று தெரியும்.

மேலும், மானிடவியல் கலைகள் பீடம் என்பன ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் உள்ளன. இலங்கையின் பேராதனை, தென்கிழக்கு மற்றும் திறந்த பல்கலைக்கழகம் என்பவற்றில் வெளிவாரிகாக தமது உயர்கல்வியை தொடர்வதுடன் ஏனைய உயர் கல்வி நிறுவனங்களில் பாதிஹ் மாணவர்கள் கற்றிகிறார்கள்.

குறிப்பாக , அந்த 2 மாணவர்களும் எந்த நோக்கத்தில் செய்தார்கள், ஏன் செய்தார்கள் என்பது இது வரையில் தெரியாது, ஆனால், இதற்கு முன் நடந்த பல்கலைக்கழக மாணவர்களின் பிரச்சினையை அறிவதற்கான முழு சூழலும் அவர்களுக்கு பாதிஹில் இருந்தது.

வீனாக, இயக்கவெறி அல்லது வேறு காரணத்தில் ஒரு நிறுவனத்தின் பெயரை எந்த அடிப்படை அறிவும் இல்லாமல் கலங்கப்படுத்துவதெல்லாம் கலப்படமற்ற வெறித்தனம், அய்யோக்கிய தனம்.

MT. ஸைபுல்லாஹ்

1 comment:

  1. நமது நாட்டுக்கும் சமுகத்திற்கும் நல்லவற்றை யே செய்வோம்.

    ReplyDelete

Powered by Blogger.