Header Ads



24 பேரில் மஹிந்தவுக்கு நெருக்கமானவர்களே, அதிகளவில் கொக்கைன் பயன்படுத்துகின்றனர்

கொக்கைன் உள்ளிட்ட போதைப் பொருள்களைப் பயன்படுத்தும் 24 நாடாளுமன்ற உறுப்பினர்களுள் 90 சதவீதமானோர் மஹிந்தவுக்கு நெருக்கமானவர்களென, இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் நீர்கொழும்பில் பொலிஸ் விசேட படையணியால் போதை வர்த்தகர்கள் சுற்றிவளைக்கப்பட்ட போது, அவர்களைப் பார்ப்பதற்காகச் சென்ற எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த நாடாளுமன்றத்தில் பொருளுக்கு எதிராக கதைக்கின்றமைக் குறித்து மகிழ்ச்சியடைவதாகவும் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

தமது டுவிட்டர் வலைத்தளத்திலேயே இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க அ இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

குறித்த 24 பேரின் பெயர்ப் பட்டியலும் தன்னிடம் காணப்பட்டாலும் இவற்றைப் பகிரங்கப்படுத்தும் போது தனக்கெதிராக மேலும் பல வழக்குகள் தொடரப்படும் என்றும் இவர் பதிவிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.