Header Ads



லத்தீப்பை மனந்தளரச் செய்ய, முக்கிய அமைச்சர் முயற்சி - 2013 இல் எடுக்கப்பட்ட புகைப்படம்

மதுஷ் மற்றும் சகாக்கள் விசாரணை குறித்து ஆராய எஸ் ரி எவ் பொறுப்பான பிரதிப்பொலிஸ் மா அதிபர் லத்தீப் டுபாய் சென்றுள்ளதாக வந்துள்ள செய்திகள் தவறானவை.

அவர் டுபாய் பொலிஸாரால் வரவேற்கப்படுவதாக தெரிவித்து இன்று -12- மாலை ஊடகங்களில் வெளிவந்த புகைப்படம் 2013 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது.

பாதுகாப்பு தொடர்பான உயர்மட்ட மாநாடொன்றில் உரையாற்றவென கலந்துகொள்ள சென்றிருந்த லத்தீப்புக்கு ஒரு விருதும் வழங்கப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட படமே இது.

அரசின் முக்கிய அமைச்சர் ஒருவர் டீ ஐ ஜி லத்தீப்பை மனந்தளரச் செய்யும் நோக்கில் தனக்கு நெருக்கமான நண்பர்கள் ஊடாக இப்படியான வதந்திகளை பரப்பி வருவதாக அறியப்பட்டுள்ளது..

மதுஷ் மற்றும் சகாக்கள் நீண்ட காலம் சிறைத்தண்டனை பெறுவார்கள் என்று சொல்லப்படுகிறது. அவர்களின் சிறுநீர் பரிசோதனை அறிக்கை நாளை ஒரு தகவலுக்காக இலங்கைக்கு அனுப்பப்படவுள்ளது..

இலங்கையில் இருந்து விசேட குழு ஒன்றை அனுப்ப ஏற்பாடு இருந்த போதும் இதுவரை எவரும் அனுப்பப்படவில்லை. டுபாய் விசாரணைகள் சீரியஸாக நடப்பதே அதற்கான காரணமாகும்.

No comments

Powered by Blogger.