Header Ads



இஸ்­லாத்­துக்கும் IS க்கும் எந்­த­ சம்­பந்­தமும் கிடை­யா­து- இலங்கையில் சகவாழ்­வும், நல்­லி­ணக்­கமுமே அவசியம்

இஸ்­லாத்­துக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ்.க்கும் எந்­த­வித சம்­பந்­தமும் கிடை­யா­தென முன்­னைய ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கும், இன்­றைய நாட்டின் தலை­வர்­க­ளுக்கும் அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா சபை தெளி­வாக எடுத்­துக்­கூ­றி­யுள்­ள­தாக அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா தலைவர் அஷ்ஷெய்க், எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தி (பின்­னூரி) தெரி­வித்தார்.

புத்­தளம் மணல்­குன்று மன்­ப­வுஸ்­ஸா­லிஹாத் பெண்கள் அர­புக்­கல்­லூ­ரியின் ஐந்­தா­வது வருட பட்­ட­ம­ளிப்பு விழா  அர­புக்­கல்­லூரி வளா­கத்தில் இடம்­பெற்­ற­போது அங்கு விசேட உரை நிகழ்த்­தும்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா தலைவர் அஷ்ஷெய்க், அல்­ஆலிம் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தி (பின்­னூரி) அங்கு மேலும் உரை­யாற்­று­கையில்,

சவூ­தியும் ஏனைய நாடு­களும்  இந்த ஐ.எஸ்.ஐ.எஸ். விவ­காரம் தொடர்­பாக தீர்­வு­களை எட்ட முன்­ப­தா­கவே நாம் இலங்­கை­யிலே உல­மாக்கள் ஒன்­று­கூடி இதனை தெளி­வாக அர­சுக்கு முன்­வைத்­துள்ளோம்.

இன்­றைய சூழ்­நி­லையில் நாம் ஓர் அபா­ய­க­ர­மான நிலை­மைக்கு ஆளா­கி­யுள்ளோம். எங்­க­ளு­டைய மடத்­த­ன­மான, கொள்கை ரீதி­யாக வரக்­கூ­டிய தவ­றான வழி­காட்­டல்­களின் மூலம் ஏற்­ப­டக்­கூ­டிய விப­ரீ­தங்கள், இந்த நாட்­டிலே நாம் பெற்­றுள்ள ஜன­நா­யக உரி­மை­களை பறி­கொ­டுக்க கூடிய நிலை­மை­க­ளுக்கு உள்­ளாக்­கி­யுள்­ளது.

சக­வாழ்வும் நல்­லி­ணக்­கமும் ஏற்­ப­டு­வது என்­பது பாலும் சீனியும் கரை­வது போல் அல்ல. பெரும்­பான்மை பௌத்­தர்கள் வாழக்­கூ­டிய இந்த நாட்­டிலே அவர்­க­ளோடு நாம் எப்­படி சேர்ந்து வாழ முடியும் என்­கின்ற சூழலை தோற்­று­விக்க வேண்டும். பழவர்க்க தட்­டு­களை பௌத்த மதத் தலை­வர்­க­ளுக்கு அன்­ப­ளிப்பு செய்­வதன் மூல­மாக, பௌத்த மத சகோ­த­ரர்கள் மத்­தியில் கிண­று­களை அமைத்து வழங்­கு­வதன் மூல­மாக, அவர்­க­ளு­டைய பிள்­ளை­க­ளுக்கு பாட­சாலை உப­க­ர­ணங்­களை வழங்கி அன்­ப­ளிப்பு செய்­வதன் மூல­மாக இந்த சகவாழ்­வி­னையும், நல்­லி­ணக்­கத்­தையும் எம்மால் நிச்­சயம் தோற்­று­விக்க முடியும்.

எங்­க­ளுக்­குள்ளே ஒரு­வரை ஒருவர் மதித்து வேற்­று­மைக்கு மத்­தியில் விட்­டுக்­கொ­டுக்கும் தன்­மை­யோடு, மற்­ற­வர்­களின் கருத்­துக்­க­ளையும் மதித்து செயற்­பட்­டா­லேயே இந்­நாட்டில் நாம் எம் இருப்­பி­டத்­தினை பாது­காத்­துக்­கொள்ள முடியும்.

நாட்­டி­லுள்ள பெண்கள் மத்­ர­ஸாக்­களில், பெண்கள் ஆர்­வத்­தோடு கல்வி பயில்­கின்­றனர். அவர்கள் பாரிய பொறுப்­புக்­களை சுமக்­கக்­கூ­டி­ய­வர்­க­ளாக உள்­ளனர். ஸஹீஹுல் புஹா­ரியை தந்த, தந்­தையை இழந்த இமாம் புஹாரி அவர்­களை அவ­ரது தாயார் எவ்­வாறு உரு­வாக்­கி­னார்­களோ அத்­த­கைய தாயின் ஸ்தானத்தை இந்த கல்­லூ­ரியில் பிள்­ளை­களை கல்வி கற்க வைத்த நீங்கள் பெறுகிறீர்கள்.

புத்தளம் நகரமானது வந்தாரை வாழவைத்த நகரம். 1996 இல் மாபெரும் இஜ்திமாவை 5 இலட்சம் மக்களை ஒன்றுகூட்டி வெற்றிகரமாக நடாத்திய ஊர். இடம்பெயர்ந்து வந்த மக்களை ஆதரித்து வாழவைத்த ஊர். 30 வருடங்களுக்கும் மேலாக இடம்பெயர்ந்து வாழும் அந்த மக்களுடைய அவர்களது சொந்த மண்ணை சரியாக வழங்க வேண்டும் என நாம் அரசினை வலியுறுத்தி வருகிறோம் எனக்கூறினார்.
-Vidivelli

No comments

Powered by Blogger.