Header Ads



தாய்லாந்திலிருந்து Call எடுத்த ஜனாதிபதி, என்னை கிழக்கு ஆளுனராக நியமிப்பதாக கூறினார்

மேல் மாகாண ஆளுநராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால் நியமிக்கப்பட்ட அசாத் சாலி இன்று(9) ராஜகிரியவில் உள்ள மேல் மாகாண ஆளுணர் அலுவலகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

இந் நிகழ்வில் மேல் மாகண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய, அமைச்சா் றிசாத் பதியுத்தீன் இராஜாங்க அமைச்சர்களான அமீா் அலி, பைசால் காசீம் மற்றும் ஸ்ரீ.ல.சு.கட்சியின் செயலாளா் முன்னாள் அமைச்சா் தயாசிரி ஜயசேகர, முன்னாள் அமைச்சா் பைசா் முஸ்தபா உட்பட அரபு நாடுகளின் வெளிநாட்டுத் துாதுவா்களும் கலந்து கொண்டனா்.

இங்கு உரையாற்றிய மேல் மாகாண ஆளுணா் அசாத் சாலி –

தற்போதைய ஜனாதிபதியுடன் கடந்த 2015ஆம் ஆண்டில் ஜனாதிபதித் தோ்தலில் இருந்து அவருடன் நெருக்கமாக எனது அரசியல் பணியைத் தொடா்ந்தேன். நான் ஒரு வங்கி ஊழியராகப் பணியாற்றி கொழும்பு மாநகர சபை உறுப்பிணா் பிரதி மேயா் மத்திய மாகாண உறுப்பிணராகவும் எனது அரசியல் சேவையை செய்து வருகின்றேன்.

கடந்த 2 வாரங்களுக்கு முன் தாய்லாந்து சென்ற ஜனாதிபதி தன்னை கிழக்கு மாகாண ஆளுனராக நியமிக்கப்போவதாக தனக்கு தொலைபேசியில் அறிவித்தாா் .பின்னா் 2 நாட்களுக்கு பின்னர் இல்லை மேல் மாகாணத்தில் ஆளுணராக நியமிக்கவுள்ளதாகவும் அறிவித்து தன்னை நியமித்துள்ளாா்.

மேல் மாகணத்தில் முன்னாள் ஆளுணா் காலம் சென்ற அலவி மௌலானாவின் காலத்தில் மேல்மாகணத்தின் கல்விப் பிரச்சினைகளுக்கு ஒரு குழு அமைத்து செயலாற்றியுள்ளேன். கொழும்பில் கல்வியின் பின் தங்கியுள்ளோம். பாடசாலைகளுக்கு பிள்ளைகளை சோ்ப்பதற்கு பெற்றாா்கள் பாடசாலையில்லாமால் சர்வர்தேச பாடசாலைகளுக்கு தமது குழந்தைகளை சோ்ப்பதற்காக தமது சொத்துக்களையும் , முச்சக்கர வண்டிகளை விற்று சர்வதேச பாடசாலைகளில் சோ்க்கின்றனா். பின்னா் அவா்களுக்கு மாதாந்தக் கொடுப்பணவு வழங்க வருமானம் இல்லாது அரசியல் வாதிகளின் படிகளின் ஏறி பாடசாலைகளுக்கு பிள்ளைகளை சோ்பதற்கு பெற்றாா்கள் பெரும் பாடுபடுகின்றனா்.

அதற்காக முதலமைச்சா் மற்றும் மேல் மாகண அமைச்சரவைகளுடன் இணைந்து ஒரு திட்டம் அமைத்து கல்விவசதிகள் பாடசாலைகள் குறைபாடுகளை தீீா்ப்பதில் பாடு படுவேண் எனவும் அசாத் சாலி அங்கு தெரிவித்தாா்.(அஷ்ரப் ஏ சமத்)

4 comments:

  1. My3 dreams that he can pull Muslim Votes from Western and Eastern provinces for next presidential election.............

    ReplyDelete
  2. ​​​கைிவாறையும் சுயபுராணம் பாடும் வழமையான பழக்கத்தையும் விட்டு விட்டு ஏதாவது உருப்படியாக செய்ய முடிந்தால் செய்துவி்ட்டுப் போங்க.

    ReplyDelete
  3. Asath could be better for eastern province, as the current governor is a real racist

    ReplyDelete
  4. அஜன் அண்ணா, கெத்த விடாதீங்க அண்ணா.... வீராதி வீர பரம்பரைல வந்த நீங்க இந்த ஹிஸ்புல்லாஹ்வுக்காக தொடை நடுங்குவதை பார்க்க ஏலாம இருக்கு அண்ணே.

    ReplyDelete

Powered by Blogger.