Header Ads



மகிந்த ஒரு, போலி தேசப்பற்றாளர் - பாராளுமன்றத்தில் சம்பந்தன் உரை

எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச ஒரு போலிதேறப்பற்றாளர் என்று நேரடியாக குற்றம்சாட்டிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், ஊழல் மோசடிகளை மறைத்துக்கொள்வதற்காகவேஉத்தேச அரசியல் சாசனத்திற்கு எதிர்ப்பை வெளியிடுவதாகவும் குற்றம்சாட்டினார்.

அதேவேளை அதிகாரத்தை மாத்திரம் கருத்தில்கொண்டு செயற்படும்மஹிந்த ராஜபக்சவும், அவரது விசுவாசிகளும் எவ்வாறு நாட்டினதும்,நாட்டு மக்களினதும் நலன்கள் தொடர்பில் சிந்திக்கப் போகின்றார்கள்என்றும் கேள்வி எழுப்பிய சம்பந்தன், உத்தேச அரசியல் சாசனவரைபு தொடர்பில் அவர்கள் தெரிவிக்கும் குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும்இல்லை என்றும் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டை மிக மோசமான வறுமைக்குள் தள்ளியுள்ள ஊழல் மோசடிகள்முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டுமானால், கொழும்பில் குவிந்து கிடக்கும் அதிகாரம்மாகாண மற்றும் பிரதேச மட்டங்களுக்கு பகிரப்பட வேண்டும் என்றும் வலியுறுத்திய சம்பந்தன், இதற்காகவே உத்தேச அரசியல் சாசனம் கொண்டுவரப்படவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்றைய தினம்அரசியல் சாசன சபைக்கு முன்வைத்த அரசியல் சாசன வரைபு தொடர்பான பரிந்துரைகள் அடங்கியநிபுணர் குழுவின் அறிக்கைகள் குறித்து உரையாற்றுகையிலேயே தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் கராசாரமான தனது கருத்துக்களை முன்வைத்திருந்தார்.

"இந்த நாட்டில் தாங்களே தேசப்பற்றாளர்கள் என்று கூறிக்கொண்டு சிலர் இருக்கின்றனர்.நான் அவர்களை தேசப்பற்றாளர்களாக கருதவில்லை. அவ்வாறான சிலர் இந்த அவைக்குள்ளும்இருக்கின்றனர். சில அறிக்கைகளையும் அவர்கள் வெளியிட்டனர். அவர்கள் தேசப்பற்றாளர்அல்லர். இவர்கள் சந்தர்ப்பவாதிகள். போலியான தேசப்பற்றாளர்கள். பேரினவாதிகள்.தொடர்ச்சியாக ஆட்சி அதிகாரத்தில் இருப்பதற்கு முயலும் அதிகார வெறியர்கள்.

அதேவேளைஇவ்வாறான சந்தர்ப்பவாத தேசப்பற்றுக்கும் – ஊழல் மோசடிக்கும் நெருங்கிய தொடர்புஇருப்பதையும் இந்த இடத்தில் குறிப்பிட்டாக வேண்டும். போலியான தேசப்பற்றை, ஊழல் மோசடிகளை மூடி மறைத்துக்கொள்வதற்கான கவசமாக இவர்கள்பயன்படுத்துகின்றனர். அதிகாரம் மீது மோகம்கொண்டுள்ளவர்கள், மிகவும்மோசமான ஊழல்வாதிகளாகவே இருக்கின்றனர்.

இதனாலேயே இந்த மோசடிக்காரர்களின்நடவடிக்கைகளால் நாடு இன்று மிக மோசமான வறுமைக்குள் தள்ளப்பட்டிருக்கின்றது.இவ்வாறான சந்தர்ப்பவாத, போலியான தேசப்பற்றாளர்கள் எவ்வாறுநாட்டிற்காகவும், நாட்டு மக்களின் நலனுக்காகவும்சிந்திக்கப்போகின்றார்கள். இவர்கள் தேசப்பற்றை ஊழல் மோசடிகளை மூடிமறைக்க கவசமாகபயன்படுத்தும்வரை ஒருபோதும் நாடு குறித்து சிந்திக்கப்போவதில்லை. இதுவும் ஒருகாரணம் அதிகாரத்தை பரவலாக்கம் செய்ய வேண்டும் என்று நாம் வலியுறுத்துவதற்கு” என்றார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரனதுங்கவின் ஆட்சியின்போதும், மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகித்த போதும் நாட்டின்தேசியப் பிரச்சனையாக இனப்பிரச்சனைக்கு தீர்வு காண அதிகாரப் பரலாக்களைமையப்படுத்திய பிரேரணைகளுக்கு தனது முழுமையான ஆதரவை வழங்கியிருந்த மஹிந்த ராஜபக்ச,தனது அரசியலுக்காகவே உத்தேச அரசியல் சாசன வரைபிற்கு எதிர்ப்பைவெளியிடுவதாகவும் சம்பந்தன் கற்றம்சாட்டினார்.

அத்துடன் மஹிந்த ராஜபக்ச அரசியல் தீர்வை முன்வைப்பதாகவாக்குறுதி அளித்தே தமிழீழ விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக தோற்கடிப்பதற்குஇந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்டநாடுகளிடம் உதவிகளை பெற்றுக்கொண்டிருந்ததாகவும் சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

“போர்இடம்பெற்றுக்கொண்டிருந்த போது அரசியல் தீர்வை காண அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகநீங்கள் ஐ.நா ஊடாக சர்வதேச சமூகத்திற்கு வாக்குறுதிகளை அளித்தீர்கள். அதேபோல் எமதுஅயல் நாடான இந்தியா உட்பட அனைத்து நேச நாடுகளுக்கும் வாக்குறுதிவழங்கியிருந்தீர்கள். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை தோற்கடிப்பதற்காகஇந்தியா மற்றும் மேற்குலக நாடுகளின் உதவிகளை பெற்றுக்கொள்வதற்காக அவர்களுக்கு இந்தவாக்குறுதிகளை வழங்கினீர்கள்.

அரசியல் தீர்வைக் காண நடவடிக்கை எடுப்பதாகவாக்குறுதி அளித்தீர்கள். அரசியல் தீர்வை வழங்குவதாக நீங்கள் வழங்கியவாக்குறுதிக்காக தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடிப்பதற்காக இந்தியா உங்களுக்குஉதவியது. அமெரிக்கா உதவியது. ஐரோப்பிய நாடுகள் உங்களுக்கு உதவின. அதற்கமையவேநீங்கள் நான் முன்னர் குறிப்பிட்ட யோசனைகளை முன்வைக்க நடவடிக்கைஎடுத்திருந்தீர்கள். இதுதான் வரலாறு. இவற்றை புறந்தள்ளவிட்டு முன்னோக்கி நகரமுடியாது. ஆனால் இன்று நீங்கள் தேர்தலில் இது குறித்து கதைக்கலாம் என்று கூறுகின்றீர்கள்” என்றார் சம்பந்தன்.

உத்தேச அரசியல் சாசன வரைபை கைவிடுமாறு இன்றைய தினம் அரசியல்சாசன சபையில் வலியுறுத்தியிருந்த மஹிந்த ராஜபக்ச, பொதுத் தேர்தலைநடத்தினால் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமது தரப்பு யோசனைகளை முன்வைப்பதாக குறிப்பிட்டார்.

மஹிந்தவின் இந்த யோசனையை நிராகரித்த சம்பந்தன், புதியஅரசியல் சாசனத்தை நிறைவேற்றிக்கொள்வதற்கு பொதுத் தேர்தலொன்றை நடத்தி வேண்டியஅவசியம் இல்லை என்று குறிப்பிட்டார். அது மாத்திரமன்றி ஜனாதிபதி மைதிரியுடன்இணைந்து ஆட்சியைக் கவிழ்த்து முன்கூட்டிய பொதுத் தேர்தலை நடத்த மேற்கொண்ட சதி உச்சநீதிமன்றினால் தோற்கடிக்கப்பட்டது நினைவில் இல்லையா என்றும் மஹிநதவை பார்த்துசம்பந்தன் கேள்வி எழுப்பினார்.

"கெரளவமஹிந்த ராஜபக்ச உள்ளுராட்சி சபைத்தேர்தல் தொடர்பில் கதைத்தார். நான் ஐக்கியதேசியக் கட்சிக்காக பேசவும் இல்லை. ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினரும் இல்லை.2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் இடம்பெற்றது. ஐக்கிய தேசியக் கட்சி அதிகாரத்தைகைப்பற்றியது. அவர்க்ள அதிக ஆசனங்களை கைப்பற்றினர். இதற்கமைய குறிப்பிட்டகாலப்பகுதிக்கு ஆட்சியை கொண்டுநடத்த அவர்களுக்கு அனுமதி இருக்கின்றது. ஆனால்உள்ளுராட்சி சபைத் தேர்தலில் வெற்றிபெற்ற காரணத்திற்காக உங்களால் ஆட்சி அதிகாரத்தைமாற்றக்கூடிய பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுக்க முடியுமா?.

அதேவேளை புதிய அரசியல் சாசன வரைபு நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமானால்மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட வேண்டும். அதன்பின்னரே மக்களின் அனுமதிக்காக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும். இதற்கு எமக்குபொதுத் தேர்தல் அவசியமில்லை. நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினரின்ஆதரவுடன் புதிய அரசியல் சாசன வரைபை நிறைவேற்றிக்கொள்வதற்கும் பொதுத் தேர்தலொன்றுஅவசியமில்லை. சர்வஜன வாக்கெடபு்பு நடத்தப்படும் போது இந்த நாட்டில் வாழும் அனைத்துமக்களும், அதாவது சிங்களவர், தமிழர்,முஸ்லீம்கள், பறங்கியர் உட்பட இந்த நாட்டில்வாழும் அனைவரும் வாக்களிப்பர். அப்போது அவர்கள் முடிவெடுப்பார்கள்.

அப்போது தீர்மானிக்கப்படும்இந்த நாட்டின் மீயயர் சட்டமான புதிய அரசியல் சாசனம் வேண்டுமா இல்லையா என்பதைமக்கள் தீர்மானிப்பர். அதற்காக உடனடி பொதுத் தேர்தல் அவசியமில்லை. தேர்தல் நடைபெறவேண்டிய காலத்தில் அதனை நடத்த முடியும். அதனைவிடுத்து நீங்கள் எவ்வாறு பொதுத்தேர்தலை இப்போது கேட்க முடியும். நாட்டில் சட்டமொன்று இருக்கின்றது. ஏற்கனவேநீங்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினீர்கள். நாடாளுமன்றத்தை கலைக்க நடவடிக்கைஎடுத்தீர்கள். ஆனால் உச்ச நீதிமன்றம் அந்த நடவடிக்கைகளை முடக்கியது. இத்தனைக்கும்காரணமாக நீங்களே இப்பொழுது மீண்டும் பொதுத் தேர்தல் வேண்டும் என்று கூறுவதுவேடிக்கையாக இருக்கின்றது” என்றார்.

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்றைய தினம்அரசியல் சாசன சபைக்கு முன்வைத்த யோசனைகளை ஆராய்ந்து, புதிய அரசியல்சாசனமொன்றை தயாரிக்க முழுமையான பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர், அனைத்து கட்சிகளினது் நாடாளுமன்றஉறுப்பினர்களிடம் பகிரங்க கோரிக்கையொன்றையும் முன்வைத்தார்.

“இந்தசபையில் அங்கம் வகிக்கும் ஒவ்வொரு உறுப்பினரும் புதிய அரசியல் சாசன வரைபைதயாரிப்பதற்கு முழுமையான பங்களிப்பை வழங்க வேண்டும். அது அவர்களது கடமை. தமிழ்தேசியக் கூட்டமைப்பினரான இலங்கை தமிழரசுக் கட்சியின் பட்டியலில் போட்டியிட்டுவெற்றிபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களான நாம், இந்த சபைக்குள்ஆளும் கட்சியாகவோ, எதிர்கட்சியாகவோ இருந்தாலும் இந்த சபையில்அங்கம் வகிக்கும் அனைத்து உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சியாக இருக்கலாம்,சுதந்திரக் கட்சியாக இருக்கலாம், ஜாதிக்க ஹெலஉறுமயவாக இருக்கலாம். ஜே.வி.பி யாகவும் இருக்கலாம்.

ஆனால் அனைத்து உறுப்பினர்களும்பொறுப்புவாய்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களாக செயற்பட வேண்டியது அவசியம். அனைத்துவிவகாரங்களும் கலந்துரையாடலுக்கு வரும் போது தமது கடப்பாட்டை உறுப்பினர்கள்நிறைவேற்ற வேண்டும். அதன்ஊடாக தயாரிக்கப்படும் அரசியல் சாசனத்தை இந்த சபைக்குள்நிறைவேற்றி, மக்களின் அனுமதிக்காக சர்வஜன வாக்கெடுப்பிற்குவிட முடியும்” என்று சம்பந்தன் மேலும் தெரிவித்தார்.

1 comment:

Powered by Blogger.