Header Ads



பணயக் கைதியாக, சிக்கியுள்ள ரணில்

தமது இனவாத, பிரிவினைவாத தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்தை பணய கைதியாக பிடித்துள்ளது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

இதன் பிரதிபலனாக சமஷ்டி அரசியலமைப்புச் சட்டம் வேகப்படுத்தப்பட்டுள்ளதுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உத்தியோகபூர்வமற்ற வடக்கு அபிவிருத்தி அமைச்சு பதவியும் கிடைத்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் இன்று -16- நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் விமல் வீரவங்ச இதனை கூறியுள்ளார்.

வடக்கு அபிவிருத்தி அமைச்சின் சகல பணிகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் விருப்பத்திற்கு அமைய செயற்படுத்தப்படகிறது என்பது தெளிவாகியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தாலும் அந்த கூட்டமைப்பினர் அரசாங்கத்தின் நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தும் பங்காளிகள் என்பது உறுதியாகியுள்ளது.

எதிர்க்கட்சியில் அமர்ந்துள்ள கூட்டமைப்பு அரசாங்கத்தின் அமைச்சரவையை கட்டுப்படுத்தும் பொறிமுறையின் பங்காளிகளாக உள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேவைக்கு அமைய உருவாக்கப்பட்ட சமஷ்டி அரசியலமைப்பின் மாதிரி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது அரசியலமைப்புச் சட்ட வரைவு அல்ல என ரணில் விக்ரமசிங்க கூறுகிறார்.

ஆனால், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் யாழ்ப்பாணத்தில் கூறியது என்ன?. இதுதான் புதிய அரசியலமைப்புச் சட்ட வரைவு. தைப்பொங்கல் நிகழ்வு ரணில் விக்ரமசிங்க இது அரசியலமைப்புச் சட்ட வரைவு அல்ல என்று கூறினாலும் சுமந்திரன் அரசியலமைப்புச் சட்ட வரைவு என்கிறார். இதனை நாம் கடுமையாக எதிர்க்கவில்லை என்றால், நிறைவேற்றப்படும் சமஷ்டி அரசியலமைப்புச் சட்டம் கொண்டு வரப்படும் எனவும் வீரவங்ச குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.