Header Ads



சாதனை படைத்த மாணவியை, சீண்டிய அரசியல்வாதி - மஹேல பதிலடி

இம்முறை உயர்தர பரீட்சையின் கலை பிரிவில் முதலாம் இடத்தை பிடித்த மாணவி தொடர்பில் முன்னாள் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.

முதலாம் இடத்தை சர்வதேச பாடசாலை மாணவி ஒருவரே பெற்றுள்ளார். அவர் சூழ்ச்சியின் மூலம் முதலாம் இடத்தை பிடித்துள்ளதாக பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

இந்த கருத்து தொடர்பில் முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணி வீரர் மஹேல ஜயவர்தன கருத்து வெளியிட்டுள்ளார்.

டுவிட்டர் பதிவொன்றின் ஊடாக அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

அவரது டுவிட்டர் பதவில், “பந்துல குணவர்தவனின் கருத்து தொடர்பில் நான் எனது வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன். இலவசமாக அல்லது கட்டணம் செலுத்தி கல்வி பயின்றாலும், அனைத்து சந்தர்ப்பங்களிலும் எதிர்கால சந்ததியினரை தைரியப்படுத்த வேண்டும். சித்தியடைந்த அனைத்து மாணவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். விசேடமாக அகில இலங்கை ரீதியில் ஐந்தாம் இடம்பெற்ற மாணவிக்கு எனது வாழ்த்துக்கள். சிறப்பாக செயற்பட்டுள்ளீர்கள்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.



Mahela Jayawardena

@MahelaJay

Very disappointed with this comment.. Education is knowledge if it’s free or paid. We should always encourage our next generations achievements. Congratulations to all students but specially to the young girl who came 5th all island. Well done. 👍

4 comments:

  1. Nit tchiyamaaha edu soollchi thaan

    ReplyDelete
  2. This mad man know nothing about education and development.Private school generate more job and eased the burden of government which spending lot of money to students.the students who got highest mark is because she is clever not cheating.So private school is assets to the country.

    Not only that private university too must be which create jobs.But the process of all the formalities should be governed by government appointed officers to arrest those who try to cheating way by using money.

    ReplyDelete
  3. This ‘swine mouth’ always on in, deceitfulness.

    ReplyDelete

Powered by Blogger.