Header Ads



பிலிப்பைன்ஸில் இருந்து, மைத்திரிக்கு கண்டனம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வெளியிடப்பட்ட கருத்துக்கு மனித உரிமை அமைப்புக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பிலிப்பைன்ஸிற்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்திரி, அந்நாட்டு ஜனாதிபதி டியூட்ரேயின் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து புகழ்ந்து பாராட்டி கருத்து வெளியிட்டிருந்தார்.

ஜனாதிபதி மைத்திரியின் இந்தக் கருத்தை பிலிப்பைன்ஸ் மனித உரிமை அமைப்பான ஐடிபென்ட் என்ற அமைப்பு வன்மையாகக் கண்டித்துள்ளது.

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியின் வழியைப் பின்பற்றுவதற்கு ஜனாதிபதி சிறிசேன முயற்சித்தால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் விசாரணைகளுக்கு உட்பட நேரிடும் என சுட்டிக்காட்;டியுள்ளது.

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்பட்டு வரும் மனிதாபிமான விரோதச் செயற்பாடுகள் குறித்து ஏற்கனவே சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஆரம்ப கட்ட விசாரணைகளை நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளது.

ஆசிய நாடுகளின் தலைவர்கள் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியின் வழித் தடங்களை பின்பற்றி சென்றுவிடக் கூடாது எனவும், மனிதாபிமானத்தை முன்னிலைப்படுத்தியும், ஆதாரங்களின் அடிப்படையிலும் செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டுமென குறிப்பிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.