Header Ads



ஞானசாரரின் விடுதலை, கோத்தபாயவின் வெற்றியை பாதிக்கும்

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டதால், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட உள்ள கோத்தபாய ராஜபக்சவின் வெற்றிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என மேஜர் அஜித் பிரசன்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அஜித் பிரசன்ன இதனை கூறியுள்ளார்.

ஞானசார தேரர் விடுதலை செய்யப்பட்டால், நாட்டின் சடடம் , ஒழுங்கிற்கு தடையேற்படக் கூடும். அவரை விடுதலை செய்தால், 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் போன்று மீண்டும் நடந்துக்கொண்டு, இனங்கள் மற்றும் மதங்களுக்கு இடையில் பிரச்சினைகளை ஏற்படுத்தி, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் எதிரணி வேட்பாளரை தோற்கடிக்க முயற்சிக்கலாம் எனவும் அஜித் பிரசன்ன குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் இதற்கு பதிலளித்துள்ள சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல்கந்தே சுதத்த தேரர், ஞானசார தேரர் விடுதலையானால், அதன் பின்னர் அவர் வெளியிடும் அறிக்கையால், கோத்தபாய ராஜபக்சவுக்கு அதிகளவான வாக்குகள் கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.