Header Ads



திறைசேரி செயலர் பதவியை, என்னிடம் தந்து பாருங்கள்...!

“200 நிறுவனங்கள் என்னிடம் உள்ளன. 58ஆயிரம் பேர் அதில் வேலை செய்கின்றனர். அரசியலில் எனக்கு ஆர்வமில்லை... ஆனால் திறைசேரி செயலர் பதவி கிடைத்தால் எப்படி நாட்டின் பொருளாதாரத்தினை நிர்வகிப்பதென செய்து காட்டுவேன். மூன்று மாதத்தில் செய்து காட்டுவேன்.

வடக்கில் 11 லட்சம் மக்கள் உள்ளனர்.. இரண்டு லட்சத்து 40 ஆயிரம் பேர் பாடசாலை செல்கின்றனர். அந்த மாணவர்களுக்கு பிஸ்கட் ஒன்றை வழங்கக் கூட அந்த மாகாணசபையால் முடிந்ததா? அங்குள்ள அரசியல்வாதிகளால் அதைக் கூட செய்ய முடியவில்லை.

1972 இல் அரசியலமைப்பு திருத்தம் செய்யப்பட்டபோது சிலோன் ஸ்ரீலங்காவாக மாற்றப்பட்டது... பெயர்மாற்றம் செய்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று அப்போது மக்கள் நம்பினர் ... 1940 களில் இருந்து 19 தடவைகள் அரசியலமைப்பு திருத்தம் செய்யப்பட்ட போதும் அந்த ஒவ்வொரு தடவையும் ஏதாவது நடக்குமென மக்கள் நம்பினர்.

எனது நிறுவனம் ஒன்று நட்டத்தில் போகிறது.. அதற்காக கம்பனியின் பெயரை மாற்றுவோம் என்று யாராவது நிர்வாகி ஒருவர் என்னிடம் வந்து சொன்னால் அவர் எனது நிறுவனத்தில் வேலை செய்யும் கடைசி தினம் அதுவாகவே இருக்கும்...”

பிரபல தொழிலதிபர் தம்மிக்க பெரேரா தெரண தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியில் தெரிவிப்பு.

-Sivarajah-

4 comments:

  1. Ceylon was far better than Sri Lanka.

    ReplyDelete
  2. If a talented person really challenge for something, it could be verified with some further supervision over the task. Try it please.

    ReplyDelete
  3. Ceylon is very nice and proud name

    ReplyDelete

Powered by Blogger.