Header Ads



ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரியை நிறுத்த, பெரும்பாலானோர் எதிர்ப்பு

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை தெரிவு செய்யும் இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு இருந்தாலும் அவர் தவறான முடிவை எடுத்தால், தாம் அதனை ஆதரிக்க போவதில்லை என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்ச தவறான முடிவை எடுக்க மாட்டார் என நம்புவதாகவும் அவர் தவறான முடிவை எடுத்தால், நாங்கள் அதனை ஆதரிக்க போவதில்லை என்பதை தெளிவாக கூற வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நடத்திய செய்தியாளர் சந்திப்பில் சனத் நிஷாந்த இதனை குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிறுத்தப்படுவதை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை சேர்ந்த பெரும்பாலானோர் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.

ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்த ஒரே ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தப்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

No comments

Powered by Blogger.