Header Ads



குரே, நிலுக்காவுக்கு புதிய பதவிகளை வழங்கிய மைத்திரி - ஐ.தே.க. கடுமையாக எதிர்க்கிறது

முன்னாள் ஆளுநர்களான ரெஜினோல்ட் குரே,நிலுக்கா ஏக்கநாயக்காவிற்கு அரசகூட்டுத்தாபனங்களின்; தலைவர் பதவியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியுள்ளமைக்கு ஐக்கியதேசிய கட்சி கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. 

முன்னாள் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயை தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணங்கள் அதிகாரசபையின் தலைவராக சிறிசேன நியமித்துள்ளார்

முன்னாள் சப்ரஹமுவ மாகாண ஆளுநரான நிலுக்கா ஏக்கநாயக்கவை அரசமரக்கூட்டுத்தாபனத்தின் தலைவராக சிறிசேன நியமித்துள்ளார்.

 ஜனாதிபதி சமீபத்தில்  அரச கூட்டுத்தாபனங்களின் தலைவர்களாக நியமிக்கப்படுபவர்கள் பட்டப்படிப்பை பூர்த்தி செய்திருக்கவேண்டும் என அறிவுறுத்தல் விடுத்திருந்ததை சுட்டிக்காட்டியுள்ள  ஐதேக வட்டாரங்கள் இரு ஆளுநர்களும் அந்த தகுதியை கொண்டிருக்கவில்லை என தெரிவித்துள்ளன

சமீபத்தில் அனைத்து கூட்டுத்தாபனங்களினதும் தலைவர்களின்  தகமை தொடர்பில் ஆராய்வதற்காக தனது செயலாளர் தலைமையில் குழுவொன்றை நியமித்திருந்த ஜனாதிபதி கூட்டுத்தாபனங்களின் தலைவர்களாக நியமிக்கப்படுபவர்கள் பட்டப்படிப்பை பூர்த்தி செய்திருக்கவேண்டும் அறிவுறுத்தியிருந்தார் என்பதை ஐக்கியதேசிய கட்சி வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

தனது நியமனங்களிற்கு ஜனாதிபதி வேறு விதிமுறைகளை பின்பற்றுகின்றார் என தெரிவித்துள்ள ஐக்கியதேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஜனாதிபதி தனது உத்தரவையே மீறியுள்ளார் இது அரசியல் சந்தர்ப்பவாதம் என குறிப்பி;ட்டுள்ளார்

No comments

Powered by Blogger.