Header Ads



ஹிஸ்புல்லாஹ்வை கிழக்கு ஆளுணராக நியமித்து, கிழக்கு மக்களின் துயர்துடைக்கும் காவலனாக மாறிய ஜனாதிபதி

(பி.எம்.எம்.ஏ.காதர்)

மான்புமிகு ஜனாதிபதி மைத்திரி;பால சிறிசேன முன்;னாள் அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வை கிழக்கு மாகாண ஆளுணராக நியமித்து கிழக்கு மக்களின் துயர்துடைக்கும் காவலனாக மாறியுள்ளார் எனத் தெரிவித்து “தென்கிழக்கு அஷ்ரப் சமூக சேவைகள் நிறுவனம்”அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

தென்கிழக்கு அஷ்ரப் சமூக சேவைகள் நிறுவனத்தின் ஸ்தாபகத் தலைவர் அப்துல் ஜப்பார் சமீம் ஜே.பி.வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில் வேலும் தெரிவித்திருப்பதாவது:-கிழக்கில் வாழும் மூவின மக்களுக்கும் ஹிஸ்புல்லாஹ் எனும் ஒரு அளுமை வரலாற்றில் பெரும் பொக்கிஷமே. 

மூவின மக்களையும் ஒரே நேரத்தில் கௌரவப்படுத்த ஜனாதிபதி எடுத்த தீர்க்கதரிசனமான முடிவே ஹிஸ்புள்ளாஹ்;வின் ஆளுணர் நியமனமாகும்.இதன் மூலம் ஜனாதிபதி கிழக்கு மக்களின் கலங்கரை விளக்காக வெளிச்சம் தந்துள்ளார்.

இதுவரை காலமும் ஒரு சிறுபான்மை சமூகத்தினுடைய ஒருவர் கிழக்கு மாகாணத்தின் ஆளுணராக பதவி வகிக்காத நிலையில் கிழக்கு மாகாண மக்கள் படும் அவலங்களை கருத்தில் கொண்டு கிழக்கு மக்களின் துயரங்களை நன்கு அறிந்த ஒருவரை ஆளுணராக நியமிப்பதற்கு ஜனாதிபதி எடுத்த இத்தீர்மானமானது இலங்கையின் அரசியல் வரலாற்றுக்குத் தங்க மகுடமாகும்.

கிழக்கின் நீண்ட கால அரசியல் வாதியும் மக்களின் மனங்களை வென்ற சரித்திர நாயகனுமான கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வை இப்பதவிக்குத் தெரிவு செய்தமை ஜனாதிபதியின் தீர்க்கதரிசனத்தை பறைசாற்றி நிற்கின்றது.

இந்த மாபெரும் கைங்கரியத்தைச் செய்த ஜனாதிபதி தைத்திரிபால சிறிசேனவின் கரங்களைப் பலப்படுத்த கிழக்கு மக்கள் முன்வரவேண்டும்.

இது மக்கள் அவருக்குச் செய்ய்ய வேண்டிய நன்றிக்கடனாகும். என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. Wish the writter should know that Mr. Hisbullah couldnt get MP post legally by the people, He went to parliament in the National list
    This is just My3's political drama nothing else...watch and see

    ReplyDelete

Powered by Blogger.