Header Ads



ரணிலிடம் பகிரப்பட்ட பல விடயதானங்களை, ஏனைய அமைச்சர்களின் கீழ் கொண்டுவர தீர்மானம்

புதிய அமைச்சரவையின் விடயதானங்களை உள்ளடக்கி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அரசாங்கத்தின் சிரேஸ்ட அமைச்சர்களுக்கிடையில் பல சந்தர்ப்பங்களில் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடலின் பிரதிபலனாக அமைச்சர்களின் விடயதானங்கள் குறித்த வர்த்தமானி அறிவித்தலில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

திருத்தம் செய்யப்படவுள்ள வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் பகிரப்பட்டுள்ள பல விடயதானங்களை ஏனைய அமைச்சர்களின் கீழ் கொண்டுவரவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கண்டி அபிவிருத்தி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவுக்கு அரச வங்கி மற்றும் அரச பெருந்தோட்டங்களை நிரந்தரமாகப் ஒதுக்குவதற்கும் எதிர்பார்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் நிதி மற்றும் ஊடக அமைச்சின் கீழ் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ள நிறுவனங்கள் பலவற்றை பிரதான அமைச்சரொருவரின் விடயதானங்களின் கீழ் கொண்டு வருவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.