Header Ads



ஹிஸ்புல்லாவுக்கு இதைவிட வேறு, என்ன தகுதி வேண்டும்..?

கிழக்கு மாகாணத்திற்கு  பல சிங்கள ஆளுனர்கள் நியமிக்கப்பட்ட பின்னர்,  தமிழ் பேசும் சமூகத்தைச் சேர்ந்த முதலாவது ஆளுனராக   ஹிஸ்புல்லா, நியமிக்கப் பட்டுள்ளார், அந்த நியமனம் தொடர்பான ,வாதப்பிரதிவாதங்களை  இப்பதிவு ஆராய்கின்றது, 

#கிழக்கு_மாகாணம்

இலங்கையில்  தமிழ் பேசும் முஸ்லிம்  ளைப் , பெரும்பான்மை யாக்க் கொண்ட மாகாணம் இதுவாகும், நீண்டகால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட அபிவிருத்தி க்காக எங்கும் மாகாணங்களில் ஒன்று, நீண்டகாலமாக கிழக்கு+ வடக்கு  இணைப்பினால் அபிவிருத்தியினால் புறக்கணிக்கப் பட்ட மாகாணமுமாகும், இன்று  சுதந்திர கிழக்காகப் பிரிக்கப்பட் பின்னர், இங்கு மக்களின் தேவைகளையும், அன்றாட வாழ்வியலையும், இன ஒற்றுமையையும் அவசரமாக்க் கட்டி எழுப்ப வேண்டிய தேவை உள்ள மாகாணமாகும். 

#முஸ்லிம்_தமிழ்_உறவு,

மாகாண மட்டத்திலான இன உறவு போதிய அளவு விருத்தி அடைய வில்லை ஆயினும், யுத்த காலத்தை விட இன்று  முன்னேற்றம் காணப்பட்டிருக்கின்றது, கடந்தகால வரலாற்று ஆதாரங்களின் படி, சிங்கள பெரும்பான்மையின் நெருக்கடிக்கு எதிராக ஒன்றிணைந்து போராடிய  வேளையில் சம்மான துன்பங்களை அனுபவித்த சமூகங்கள், #தந்தைசெல்வா, #அமிர்தலிங்கம் போன்றோருடன் இணைந்து #சாத்வீகப் போராட்டத்தில், பலர் உயிர் இழந்தும், காயப்பட்டதோடு மட்டுமல்ல,   பிரபாகரனின் தலைமையில்  ஆயுதப் போராட்டம்,  தமிழ் மக்களை முதன்மைப்படுத்திய போராட்டமாயினும், 300 க்கும் மேற்பட்ட #முஸ்லிம்களை_மாவீர்ர்களாக்கும்" வரை இந்த ஒற்றுமை நிலைத்திருந்திருக்கிறது,  , ஆனாலும், புலிகளின் ஒரு பிரிவினரின் #கிழக்குவாதம்" போராட்டத்தை பலி கொடுத்திருந்த்து, 

#தமிழ்_பேசும்_ஆளுனர்கள், 

இலங்கை வரலாற்றில் ஆளுனர்களாக, முஸ்லிம்களில், தென்காமாணத்திற்கு,  பாக்கீர் மாக்கார் அவர்களும், அலவி மௌலானா அவர்கள் மேல் மாகாண ஆளுனராகவும், சிறந்த பணி புரிந்திருக்கின்றார்கள், அதற்கு அங்கு வாழும், பெரும்பான்மை சிங்கள மக்களும் போதிய ஒத்துழைப்பு வழங்கினர்,அதே போல் கடந்த வருடம், #வடமேல்_மாகாண   ஆளுனராக நியமிக்கப்பட்ட. ,KC #லோகேஸ்வரன் என்ற தமிழரையும் அங்கு வாழும் பெரும்பான்மை மக்கள் ஏற்று ஆதரவு வழங்கி இருந்தனர், இந்த நிலையில கிழக்கு ஆளுனராக நியமிக்கப்பட்டிருக்கும் தமிழ் பேசும் ,கிழக்கைச் சேர்ந்த ஒருவரை எதிர்ப்பதற்கான நியாயங்கள் என்ன? என்பதில் கேள்வி உண்டு, 

#யார்_இந்த_ஹிஸ்புல்லா??

ஹிஸ்புல்லா,  அஷ்ரஃப் அவர்கள் முஸ்லிம்களுக்கான தனிக்  கட்சியை  ஆரம்பிக்கும் போது உடனிருந்தவர், மட்டுமல்ல, தனது தேர்தல் மாவட்டமான மட்டக்களப்பிற்கு, பல அபிவிருத்திகளைச் செய்தவர் மட்டுமல்ல, தமிழ் அரசியல் வாதிகள் எதிர்ப்பு அரசியல் செய்த வேளைகளில் அரசுடன் இணைந்து பணியாற்றியவர். மட்டுமல்ல, கிழக்கின் #முதலாவது_முதலமைச்சராக வர வேண்டியவர். ஆனாலும், தமிழ் மக்களின்  அக்கால உணர்வை மதித்து விட்டுக் கொடுத்து   #பிள்ளையனின்_மாகாண_ஆட்சியின் கீழே பக்க பலமாக இருந்து பணி புரிந்தவர்,  இவ்வாறான அரசியல் அனுபவம் மிக்கவர் இன்றைய ஆளுனராக நியமிக்கப்பட்டிருப்பது தமிழ் பேசும் சமூகத்திற்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதமாகவே கருத வேண்டும், 
அபிவிருத்தி செய்து காட்டியவர்,  அரசியல் அனுபவமிக்கவர், 
அரசியல் கல்வியில் கலாநிதி பட்டமுடையவர், இத்தனை தகைமையை விட வேறு என்ன?? தகைமை ஒரு ஆளுனருக்குத்  தேவைப்படுகின்றது, 

#தமிழ்_மக்களின்_அச்சங்கள்,  

புதிய ஆளுனர் தமிழ் தரப்பிற்கு எதிரானவர் என்ற அச்சம் தமிழ் தரப்பில் உண்டு, ஆனால்  யுத்த கால, இலங்கையில் ஹிஸ்புல்லா தமிழ் மக்களுக்கு ஒரு இனவாதமுடையவராக தமிழ் எதிர்ப்பு அரசியல் வாதிகளாலும், அவர்களது ,ஆதரவாளர்களாலும் காட்டப்பட்டிருக்கின்றார், ஆனால் உண்மை நிலை அவ்வாறு இல்லை,  இருந்தாலும், யுத்தகால இலங்கையின் மறு முகமாக" இனவாதம்" இரு  தரப்பு அரசியலிலும்,  இடங்களிலும் இருந்திருக்கின்றது,  இது எல்லா அரசியல் வாதிகளுக்கும்  பொருத்தும்.அதற்கு சிறந்த உதாரணம் , 

காத்தான்குடி பள்ளிவாசலில் இடம் பெற்ற அப்பாவி முஸ்லிம் படுகொலைகள் 

ஆனால் இன்றைய நிலை அவ்வாறானதல்ல, ஒரு ஆளுனரால் இனி அவ்வாறு செயற்படவும் முடியாது, 

#மறப்போம்_மகிழ்வோம், 

கடந்த காலங்களில் எல்லாத் தரப்பிலும் பல குறைபாடுகள் இடம் பெற்றிருக்கின்றன, ஆனாலும் அதனை தொடர்ச்சியாக இன்றும் பேசிப்,  பேசி ஒப்பாரியும்  ஆர்ப்பாட்டமும், எதிர்ப்பும் வெளியிடுவது,இன்னும் பிரச்சினையை அதிகரிப்பது மட்டுமல்ல, அப்பாவி மக்களின் வாழ்வில் அபிவிருத்தியை தட்டிப்பறிப்பறிப்பதுமாகவும் அமையும், 

#முஸ்லிம்தரப்பின்_நியாயங்கள், , 

கிழக்கு முஸ்லிம்கள் , தமிழ் தரப்பினருடன் பல சந்தர்ப்பங்களில் இணைந்து போராடி இருக்கின்றார்கள், ஆனாலும் அதற்கான பலன்கள் எதுவும் கிடைக்கவில்லை என்பது மட்டுமல்ல, தமிழர்களின் கோரிக்கையினால்  சிங்கள தரப்பிலிருந்தும்  முஸ்லிம்கள் பல   சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர், அதற்கான காரணங்களில் ஒன்று, முஸ்லிம் கட்சித் தலைவர்களில் சிலர் இன்றும் கிழக்கு + வடக்கு இணைப்பை ஆதரிப்பதாகும், இது நாடளாவிய ரீதியாக சிங்கள + முஸ்லிம் பிணக்குகளுக்கான காரணங்களில் ஒன்றாகவும் உள்ளது, எனவேதான் #தமிழர்களின்_கோரிக்கைக்காக இன்றும் முஸ்லிம்கள் பிரச்சினையை எதிர்கொள்கின்றனர்,

இந் நிலையில் முஸ்லிம் ஒருவரின் நியமனத்தை தமிழர்களில் சிலர் எதிர்ப்பபது ,சிங்களவர்களுடன் இணைந்து நிரந்தர  #கிழக்கின்_பிரிப்பை முஸ்லிம் மக்களும் விரும்புவதற்கான சூழலையும், இன்னும் பல எதிர் விளைவுகளையும், உண்டுபண்ணும், 

#தீர்வு_என்ன, ?? 

எனவேதான்,தமிழ் பேசும் மக்களின் பல்வேறு தேவைகளை கருத்திற் கொண்டு புதிய கிழக்கு ஆளுனருக்கு எதிராக திட்டமிட்டு  மேற்கொள்ளும் #இனவாத_எதிர்ப்புக்களை தமிழ் தரப்பினர்  கைவிட்டு, ஒன்றிணைந்த தமிழ்+முஸ்லிம் உறவினைக் கட்டி எழுப்புவதுடன், இம் மாகாண  மக்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகளை அவரசரமாகத் தீர்க்க  ஆதரவளிக்க,முன்வர வேண்டும், 

இன்றேல், மீண்டும் அபிவிருத்தியில் பின்னடைந்த மாகாணமாக இன்னும் பல ஆண்டுகள் நாம் பின்னோக்கிச் செல்ல வேண்டி வரும்,

இவற்றை எல்லாம் புதிய ஆளுனர் கலாநிதி ஹிஸ்புல்லா அவர்களும் தனது அரசியல். அனுபவத்தின் ஊடாக இலகுவாக வெற்றி கொள்ள வேண்டும்,அது அவரால் முடியும்  என்பதே என் போன்ற பலரினதும் நம்பிக்கையாகும்., 

#முபிஸால்_அபூபக்கர்.
முதுநிலை விரிவுரையாளர்

8 comments:

  1. இந்த இனவாதியை பதவியிலிருந்து அகற்றும் வரை போராட்டங்கள் ஓயக்கூடாது.
    இதற்கு வடக்கு மக்களும் ஆதரவு

    ReplyDelete
  2. வடக்கில் ஒரு தமிழரை ஆளுநர் பதவி கொடுத்ததற்கு வடக்கு முஸ்லிம்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்யவில்லை,ஏன் கிழக்கில் ங்களுக்கு இந்த பொறாமை

    ReplyDelete
  3. He is going to be the Governor for Eastern province until the new President election. We all know that and Hisbullah himself knows that. Better to just ignore these Tamil terrorists’s stupid acts like hartal etc.

    ReplyDelete
  4. Ajan நேற்று தானே தமிழ் பயங்கரவாதிகள் ஹர்த்தால் செய்து மூக்குடைபட்டீர்கள். உனக்கு ஒரு விடயம் தெரியுமா? பிரிந்து கிடந்த முஸ்லிம்களை நேற்று ஒன்றிணையவிடீர்கள். இந்த ஒன்றிணைவு அடுத்து கிழக்கு முஸ்லிம் முதல்வரை பதிவியில் அமர்த்தும்வரை தொடரும். குட்ட குட்ட குனிவோம் என்று நினைத்தாயா? இனி கிழக்கில் முஸ்லிம்களின் எழுச்சியை காண்பீர்கள்

    ReplyDelete
  5. உனது மூலம் கிழியுமே தவிர ஈழம் கிடைக்காது.

    ReplyDelete
  6. லூசிப்பயல் அண்டனி

    ReplyDelete
  7. அஜன் அண்ணே... யு ஆர் வெல்கம்.... இது ஜனநாயக நாடு, நீங்க போராட்டம் பண்ணுங்க அண்ணே.... தீக்குளிப்பு போராட்டம் பண்ணப் போறீங்கன்னா சொல்லுங்கண்ணே... நாங்களே ஸ்பான்ஸர் பண்றோம்.

    ReplyDelete
  8. @Info x, என்ன.. ISIS கிழக்கில் இணைந்துவிட்டார்களா?

    ReplyDelete

Powered by Blogger.