Header Ads



மார்ச்சில் ஜனாதிபதித் தேர்தல்...? மைத்திரி மீண்டும் களமிறங்குகிறார்...??

அதிபர் தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிடுவதற்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தயார்படுத்தல்களை மேற்கொண்டு வருவதாக, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக, மகிந்த ராஜபக்சவுடன், சிறிலங்கா அதிபர் ஏற்கனவே ஆலோசனை நடத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

அரசியலமைப்புக்கு அமைய, அதிபர் தேர்தலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 9ஆம் நாளுக்குப் பின்னர் எந்த நேரத்திலும் அறிவிக்க முடியும்.

சிறிலங்கா பொதுஜன முன்னணியின் ஆதரவும் சிறிலங்கா அதிபருக்குக் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

இந்தப் பின்னணியிலேயே சிறிலங்கா சுதந்திரக் கட்சியின்  பொதுச்செயலரை அவர் மாற்றியுள்ளார் என்றும், மாகாணங்களுக்கு தனது ஆதரவாளர்களை ஆளுனர்களாக நியமித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

2

அதேவேளை முன்னாள் மூத்த அமைச்சர் ஒருவர் மற்றும் மூத்த ஊடகவியலாளர் ஒருவர் மூலமாக jaffna muslim இணையத்திற்கு கிடைத்த தகவல்கள் மூலம் எதிர்வரும் மார்ச் மாதம் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படலாமென அறியவருகிறது.

1 comment:

  1. UNP should be happy if My3 contests under Mhainda alliance, easy to defeat him with minority and neutral votes.

    ReplyDelete

Powered by Blogger.