Header Ads



ஹஜ் விண்­ணப்­ப­தா­ரி­களில் பலர், ஆர்­வ­மற்­று இருப்பதாக கவலை

இந்த வரு­டத்­துக்­கான ஹஜ் கட­மையை நிறை­வேற்­று­வ­தற்கு ஹஜ் விண்­ணப்­ப­தா­ரி­களில் பெரும்­பான்­மை­யினர் ஆர்­வ­மற்­ற­வர்­க­ளாக இருக்­கி­றார்கள்.

முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் ஹஜ் கட­மை­யினை மீள கைய­ளிக்­கக்­கூ­டிய பதிவுக் கட்­ட­ண­மாக 25 ஆயிரம் ரூபாவைச் செலுத்தி தங்­க­ளது பய­ணத்தை உறுதி செய்­யு­மாறு 3000 விண்­ணப்­ப­தா­ரி­க­ளுக்கு கடி­தங்­களை அனுப்பி வைத்­தி­ருந்­தது. பய­ணத்தை உறுதி செய்­வ­தற்­கான இறுதித் தினம் ஜன­வரி 3 ஆம் திகதி  எனவும் தெரி­வித்­தி­ருந்­தது. ஆனால் நேற்­று­வரை சுமார் 700 விண்­ணப்­ப­தா­ரி­களே தங்­க­ளது பய­ணத்தை உறுதி செய்­துள்­ளனர். இவ்­வ­ருடம் இலங்­கைக்கு 3000 ஹஜ் கோட்டா கிடைக்­க­வுள்­ளது. மேலும் மேல­தி­க­மாக 1000 கோட்டா பெற்­றுக்­கொள்­வ­தற்கு அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் சவூதி ஹஜ் அமைச்­ச­ருடன் சவூ­தியில் பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்ளார்.

ஹஜ் விண்­ணப்­ப­தா­ரிகள் ஹஜ் பயணம் மேற்­கொள்­வதில் ஆர்வம் குன்­றி­ய­வர்­க­ளாக  இருக்கும் நிலையில் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் நிலுவையிலுள்ள விண்­ணப்­ப­தா­ரிகள் அனை­வ­ருக்கும் 14741 பதி­வி­லக்கம் வரை ஹஜ் பய­ணத்தை உறுதி செய்­யும்­படி கோரி கடி­தங்கள் அனுப்பி வைக்­க­வுள்­ளது. ஹஜ் பய­ணத்தை 25 ஆயிரம் ரூபா மீள கைய­ளிக்­கக்­கூ­டிய பதி­வுக்­கட்­டணம் செலுத்தி உறு­திப்­ப­டுத்தும் விண்­ணப்­ப­தா­ரி­களில் இவ்­வ­ருடம் ஹஜ் கட­மைக்­காக பதிவு எண் வரிசைக் கிர­மப்­படி பய­ணிகள் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ளனர். கோட்­டா­வுக்கும் மேல­தி­க­மாக பய­ணிகள் உறுதி செய்தால், எஞ்­சி­ய­வர்கள் அடுத்த வருடம் பய­ணத்தில் இணைத்துக் கொள்­ளப்­ப­ட­வுள்­ளனர்.

இதே­வேளை கடந்த வருடம் தங்­க­ளது பய­ணங்­களை உறுதி செய்த பய­ணி­களில் 760 பேர் பயணம் மேற்­கொள்­வ­தற்கு வாய்ப்புக் கிட்­ட­வில்லை. அவர்கள் இவ்­வ­ருட ஹஜ் கட­மையில் இணைத்துக் கொள்­ளப்­ப­ட­வுள்­ளார்கள். இவ்­வ­ருடம் ஹஜ் கட­மையை நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளவர்கள் தாமதியாது பதிவுக் கட்டணம் 25 ஆயிரம் ரூபாவைச் செலுத்தி தங்களது பயணங்களை உறுதி செய்து கொள்ளுமாறு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் எம்.ஆர்.எம். மலீக் வேண்டியுள்ளார்.

3 comments:

  1. There are number of reasons why people are not interested.
    1. Too expensive
    2 You can perform Umra in a fraction of cost. Mostly one sixth of the cost.
    3. Muslims are not happy with Saudi Araibia's standing and its human right records.
    4. Mohamed Bins Salman behavior and his leading role in killing of journalist Jamal Khashoggi
    5. World Muslims are very shame to say this MBS and his father are custodian of holy mosques.
    6. Unless MBS is removed, Haj pilgrim will drop to 1 million.

    ReplyDelete
  2. பலருக்கும் அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட போதும் கடிதங்களை அலுவலகத்தில் பதுக்கி வைக்கும் நிகழ்வும் உள்ளது. ஒரு வேளை அவ்வாறு கடிதம் கிடைக்கப்பெறாமை காரணமாக இருக்கலாம்.

    ReplyDelete
  3. இரானிடம் பிச்சை வாங்கி சாப்ப்பிட்டுக்கொண்டு முஸ்லிமகளை குழுக்களாக மாற்றி குழப்பங்களை தூண்டி வேடிக்கை பார்க்கும் இலங்கையில் வாழும் சில விஷமிகளுக்கும் சவூதி செல்லத்தடை செய்யப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை

    ReplyDelete

Powered by Blogger.