Header Ads



தப்லீக் இஜ்திமாவிலிருந்து, படிக்க வேண்டிய பாடமும், பெண் நிருபரின் வாக்குமூலமும்...!!


உளமாற வாழ்த்துக்கிறோம்..
ஒவ்வொரு தப்லீக் சகோதரர்களுக்கும் உள்ளார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்...
அரசுகள் சாதிக்க முடியாததை..
பெரும் அமைப்புகளால் சாதிக்க இயலாததை..
10 லட்சத்தைக் கூட்டிய பிறகும் படோபகரம் இல்லாது..
ஆர்ப்பரிப்பு சுயதம்பட்டம் ஏதுமில்லாது..
அழைக்கப்பட்டவர் ஒவ்வொருவர் மீதும் அக்கறை கொண்டு..
அவரவர்களின் தேவைகளை அவசியங்களை எவ்வித தடையும் இடையூறுமின்றி கிடைக்க ஏற்பாடு செய்த சாதனை சாதாரணம் அல்ல...
காவல்துறையும் விக்கித்து நிற்கும் அளவிற்கு நேர்த்தியாய் வாகன போக்குவரத்து நெருக்கடிகளை சீராக்கி ..
யாருக்கும் சிரமம் அளிக்காது வந்தோர் ..
வந்தார்கள் என்றில்லாமல் வீடு வந்து சேரும் வரை அதற்கான பொறுப்புகள் அனைத்தையும் திறம்பட நிறைவேற்றிய ..
தப்லீக் ஜமா அத்தின் தலைமைக்கும், அதன் ஒவ்வொரு அங்கத்தினருக்கும் உளமார்ந்த வாழ்த்துக்கள்...
இது ஓர் எடுத்துக்காட்டான முன்மாதிரி இஜ்திமா..
இஜ்திமா என்றால் கூடுகை என்று அர்த்தப்படும்..
முஸ்லிம்கள் லட்சங்களில் கூடினாலும் 
முஸ்லிம்கள் தனியாய் வாழ்ந்தாலும்..
பிறருக்கு எள்ளளவும் எள்ளின் முனையளவும் தீங்கோ நெருக்கடியோ தராதவர்கள் என மீண்டும் ஒருமுறை..
முஸ்லிம்களை தீவிரவாதிகளாக பயங்கரவாதிகளாக சித்திரிக்கும் உலகின் குறிப்பாக இந்தியாவின் சதிகளை போட்டுடைக்கும் வகையில் நாங்கள் தீவிரவாதிகளல்ல என முகத்தில் அறைந்தார் போல் நிரூபித்த ..
இந்த தப்லீக் இஜ்திமாவிற்கு எத்தனைமுறை வாழ்த்துக்கள் கூறினாலும் தகும்...!

இதுபோன்ற அனுபவத்தை முன்பொருமுறை தெஹல்காவின் ஒரு பெண் நிரூபர் கூறினார்...
அகில இந்திய இஜ்திமாவைப் பற்றி கட்டுரை எழுத அவர்களோடு பயணிக்கப் போகிறேன் என்ற போது அந்த நிருபரின் வீட்டிலே அச்சப்பட்டார்களாம்..
அவருக்குள்ளும் ஓர் அச்சம் இருந்ததாம்..
ஒன்றாய் பயணித்து இஜ்திமாவிற்கு போய் வந்த அந்த பெண் நிருபர் சொன்னார்...
எல்லோரும் ஆண்கள்..
என்றாலும் ..
என் வீட்டில் கூட நான் இவ்வளவு பாதுகாப்பை உணரவில்லை..
அத்துணை பாதுகாப்பு!
என் உள்ளத்தில் ஒரு சிறு உறுத்தலுமின்றி இனிமையாய் போய் வந்தேன் என்றார்..
அதன் அடுத்த மைற்கல் இது..
தொடரட்டும் தப்லீக்கின் பணி..
மீண்டும் வாழ்த்துகிறோம்..
தமிழகத்தின் வஹ்தத் இ இஸ்லாமி ஹிந்த் ன் சார்பில்..
வாழ்த்துக்கள் முஃமின்களே!

வஹ்தத்தே இஸ்லாமி
ஊடக பிரிவு
தமிழ்நாடு

5 comments:

  1. Ma shaa Allah, great. May Allah's unrivalled blessing shroud all of you!

    ReplyDelete
  2. I'm sorry to disagree with this.. Allah made it obligatory to get together in Meccca. That is 30 lakhs. It includes all this description and more.. But here difference is what is point to together like this? what decision and step you have made to improve quality of Muslim life all over India. Millions in poverty, million Muslim widow, and refugees and so many other issue. Why not give that money all this urgent issues.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. There are eight thawheed groups in Sri Lanka. You are representing which group?

    ReplyDelete

Powered by Blogger.