Header Ads



மனைவிகளால் அணிக்குள் சர்ச்சை - நரி சிங்கமாகாது என்கிறார் திசார பெரேரா

நியுசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி வீரர்கள் மத்தியில் கடும் பிளவு ஏற்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் தன்னை பற்றி அவதூறு கருத்தை வெளியிட்டதற்காக சிரேஸ்டவீரர் ஒருவரின் மனைவியை திசார பெரேரா சாடியுள்ளதை தொடர்ந்து இது அம்பலமாகியுள்ளது.

என்னை எனது பணியை அமைதியாக செய்யவிடுங்கள் என திசார பெரேரா தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்

மேலும் சிரேஸட வீரர் ஒருவரின. மனைவி பதிவு செய்த கருத்திற்கு தான் சிங்களத்தில் பதிவு செய்த கருத்துக்களையும் திசார பெரேரா பதிவு செய்துள்ளார்

பேஸ்புக் மூலம் என்மீது சேற்றை வாரியிறைக்க முயலும் கணவனையும் மனைவியையும் தனிப்பட்ட விரோதங்களிற்காக எனது விளையாட்டில் தலையிட வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றேன் என  திசார பெரேரா தெரிவித்துள்ளார்

அணியில் இடம்பெறுவதற்காக நான் யாரிடமும் செல்லவேண்டியதில்லை என குறிப்பிட்டுள்ள அவர் 2018 இல் நான் விளையாடிய விதமே என்னை அணிக்கு தெரிவு செய்வதற்கு போதுமானது என குறிப்பிட்டுள்ளார்.

என்மீது குற்றச்சாட்டுகள் ஏதாவது இருந்தால்  வெளிப்படையாக அதனை தெரிவியுங்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வீரர்களின் மனைவிமார்கள் தங்கள் வேலையைதானே பார்த்தால் நாங்கள் சுலபமாக விளையாட முடியும் எனவும் திசர பெரேரா தெரிவித்துள்ளார்.

புதிய விளையாட்டுத்துறை அமைச்சராக ஹரீன் பெர்ணான்டோ நியமிக்கப்பட்ட பின்னர் திசார பெரோ அவரை அடிக்கடி சென்று பார்த்துள்ளார் இது வெட்கக்கேடான விடயம் என சிரேஸ்ட வீரர் ஒருவரின் மனைவி தனது முகப்புத்தகத்தில் தெரிவித்ததை தொடர்ந்தே இந்த சர்ச்சை வெடித்துள்ளது

அதற்கு பதிலளித்துள்ள திசார பெரேரா சிங்கத்தின் தோல் போர்த்திய நரி ஒருபோதும் சிங்கமாகாது நரியை தனது வாயை திறந்தவுடன் அது  நரியாகிவிடும் என குறிப்பிட்டிருந்தார்.

No comments

Powered by Blogger.