Header Ads



நீர்கொழும்பில் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ள, சட்டத்தரணி பஷீர் அஹமட்டின் மரணம்

-Ajmal Mohideen-

நல்ல பண்பான ஒரு நண்பரை இழந்திருக்கின்றேன், ஆசிரியராக வாழ்க்கையை ஆரம்பித்து தனது சுய முயற்சியாலும்,சுய உழைப்பாலும் சட்டப் பட்டதாரியாகி சிறு வயதில் முன்னேறி 53  வயதில் அவரது வாழ்வு முடிந்திருக்கின்றது.

பிறப்பவர் அனைவரும் மரணத்தை அடைவார் என்பது சர்வ நிச்சயமானது.ஆனால் சிலரது இறப்புச் செய்தியை கேள்வியுறும் போது இதயம் இலகுவில் ஏற்றுக் கொள்ளவும்,தாங்கிக் கொள்ளவும் தயங்குகின்றது,

நீர் கொழும்பு வாழ் மக்களுக்கு சட்டத்தரணி பஷீர் அஹமட் எனும் நண்பரின் இழப்பு நிச்சயம் ஒரு வெற்றிடத்தை உணரச் செய்யும்.

வெறுமனே ஒரு சட்டத்தரணியாக இல்லாமல் தனது அலுவலகத்திற்கு வரும் சகலருக்கும் தனது சட்டத்தொழிலுக்கப்பால்  ஆலோசனைகளையும், தேவையான தகவல்களையும் வழங்கும் ஒரு நல்ல நண்பராக இருந்தார்.

பணக்கணக்கை மட்டும் பார்க்கும் இன்றைய தொழிற்கல்வி தகைமை கொண்ட படித்தவர் மத்தியில் வாடிக்கையாளரிப் மனக்கணக்கை பார்த்து நியாயமான கட்டணங்களை பெறுபவராகவும், சமூக, சமய விவகாரம் தொடர்பான விடயங்களில் இலவசமாகவும் சட்டஉதவிகளை செய்பவராகவும் இருந்தார் .

அவரது முயற்சியால் உருவாக்கப்பட்ட நீர்கொழும்பு, ஹிரகந்துர வீதி, பள்ளிவாசல் இயங்குவதற்கான சகல முயற்சிகளையும் மேற்கொண்டிருந்தார்,

அந்தப் பள்ளிவாசல் எல்லா தடைகளையும் கடந்து இயங்க வேண்டும் என்பதற்காகவும், மன்னிக்கப்பட்ட சகல ஈடேற்றங்களையும் பெற்ற ஒருவராகவும் இருக்க நாம் பிரார்த்திப்போம்

நீர்கொழும்பு, சட்டத்தரணி பஷீர் அஹமட் அவர்கள் இன்று காலை காலமானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். 

ஜனாஸா நல்லடக்கம்
4.30 மணிக்கு பெரியமுல்ல மையவாடியில் இடம்பெறும்

Attorney at law A.A.Basheer Ahamed (Negombo)
330 /9c Manthree waththa periyamulla
Negombo
02/01/2019

2 comments:

  1. we have lost another great person, a great Human. may Allah accept him to Jannathul Firdhows.
    إن لله ما أخذ وله ما أعطى وكل شيء عنده بأجل مسمى

    اللهم اغفر له وارحمه وعافه واعف عنه وأكرم نزله ووسع مدخله واغسله بالماء والثلج والبرد .....

    ReplyDelete
  2. மக்களின் உள்ளங்களை வென்றவர் .சிறந்த இரு கல்வி மான் , பணிவான பேச்சாற்றல் உடையவர் , நிச்சயம் இவரின் இலப்பானது நீர்கொழும்பில் ஒரு பாரிய வெற்றிடத்தை ஏற்படுத்தும் (முக்கியமாக முஸ்லிம்களுக்கு)

    ReplyDelete

Powered by Blogger.