Header Ads



இப்படிச் சொல்ல ஒரு, முஸ்லிம் அமைப்புக்கூட இல்லையா...?

மாவனல்ல புத்தர் சிலை உடைப்பு சம்பவத்தின் பின்னர் பெளத்த கடும்போக்காளர்கள் கலவரங்களில் ஈடுபடவில்லை. மிக நிதானமாக அமைதியை விரும்பும் பெரும்பாண்மை முஸ்லிம்களும் வன்முறையை நாடும் சிறுபாண்மை அடிப்படை வாதிகளும் என கருத்துத் தெரிவிக்கின்றனர். இது எனக்கு ஆச்சரியத்தை தரவில்லை. இது முஸ்லிம் விரோத சக்திகளின் தன்னம்பிக்கை அதிகரித்திருபதையே காட்டுகிறது. முஸ்லிம் விரோதிகளின் தன்னம்பிக்கை சந்தேக நபர்களின் பட்டியல் தயாரிக்க போதிய ஒத்துழைப்புக் கிடைப்பதையே சுட்டி நிற்கிறது. தெரிவு அடிப்படையில் செயல்பட அரசும் பெளத்த கடும்போக்காளர்களும் தயாராகி விட்டதையும் இது சுட்டி நிற்கலாம். 
*
உலகின் சமயங்கள் எல்லாவற்றிலும் கடும் போக்காலர்கள் உள்ளனர். உண்மையில் மதங்களில் கடும்போக்காளர்கள் சிலர் இருப்பதல்ல பிரச்சினை. தம் தம் மதத்தில் உள்ள கடும்போக்காளர்களை ஆரம்பத்தில் இருந்தே ஜனநாயக வரம்புக்களுக்குள் கட்டுபடுத்த மதம் சார் சமூகங்களும் நிறுவனங்களும் தவறிவிடுவதே பிரச்சினையாகும். ஜனநாயகத்தை மீறும்போது ஆரம்பத்திலேயே தடுத்தால் மத கடும்போக்கு உள்வாரியாகவும் தேசிய ரீதியாகவும் உடன்பிறந்தே க்கொல்லும் வியாதியாக மாறும் வாய்பில்லை. எங்கள் பிள்ளைகளை அவசியமான அறுவைச் சிகிச்சை செய்தேனும் காப்பாற்ற ஒருபோதும் பெற்றோருக்கு ஊர் சமூகத்துக்கு இனத்தலைமைகளுக்கு காலம் கடந்து போவதில்லை. இன்னும் காலா தாம்தமாகவில்லை. இலங்கை முஸ்லிம்கள் உள்வாரியாகவும் தேசிய ரீதியிலும் தங்கள் பிள்ளைகள் ஜனநாயக மரபுகளை மீறாமல் இருபதை உறுதிப் படுத்த ஒன்று திரண்டு செயல்பட வேண்டிய கடைசித் தருணம் இதுவாகும். 

மதம்சார் சமூகமும் நிறுவனங்களும் ஊடகங்களும் அறிவுத் துறையும் பல்கலைக் கழகங்களும் வழிதவறிய ஒருசில இளைஞர்களை காப்பாற்றி நல்வழிப்படுத்த இப்பவே கழத்தில் குதித்தாகவேண்டும். 
*
இலங்கையில் இஸ்லாமிய அடிப்படை வாதம் என்கிற விவாதம் இலங்கையில் மட்டுமன்றி சர்வதேச மட்டத்திலும் தீவிரமான விவாதமாக மாறி வருகிறது. இலங்கையில் போர் முடியும்வரை தமது ஆதரவு வட்டத்தை பெரிதாக வைத்திருக்க அடக்கி வாசித்த சிங்கள சக்திகள் போர்முடிந்ததும் மிக தீவிரமாக விவாதித்த விடயங்களில் இஸ்லாமிய அடிபடைவாதம் முக்கியமானதாகும். உலகம் முழுவதும் அவசியமானபோது அடிப்படை வாத சக்திகளை வளர்தெடுப்பதும் அவர்களை தங்கள் எதிரிகளுக்கு எதிராகப் பயன்படுத்துவதும் பின்னர் கொன்றொழிப்பது பண்டுதொட்டு நிகழ்ந்துவருகிற கொடுமைதான். இத்தகைய நச்சு பாம்புக்கு எங்கள் பிள்ளைகளை நாமே தாரைவாற்கத் தயாராகுவது பாதகமாகும்.
*
இலங்கையில் முஸ்லிம் அடிபடை வாதம் என ஆங்கிலத்தில் தேடினால் 2010 - 2019 காலக்கட்டத்தில் எழுதப்பட்ட பலநூறு கட்டுரைகள் செய்திக்குறிப்புகள் இணையத்தில் கிடைக்கிறது. இது தொடர்பாக விக்கிலீக்ஸ் தகவல்களும் வெளியிடபட்டுள்ளன. மேற்படி பதிவுகளுக்கான முக்கிய தகவல்களில் பெளத்த அடிபடை வாதிகளிடமிருந்தல்ல முஸ்லிம்களிடமிருந்தே சேகரிக்கப்பட்டுள்ளது. கசிந்த அமரிக்க தூதரக அறிக்கை ஒன்ருக்கான தகவல்கள் ஒரு ஓய்வுபெற்ற முஸ்லிம் உளவுதுறறை அதிகாரியிடமிருந்து பெறபட்டதாக தெரிவிக்கபட்டுள்ளது.

வெளிக்கு அடிப்படைவாதப் பிரச்சினையா? அப்படி ஒன்றும் இல்லையென சாதிக்கும் முஸ்லிம் மக்கள் மத்தியில் இருந்தே இரகசியமாக துப்புக்கொடுத்தல் அதிகரித்து வருவது அதிற்ச்சி தருகிறது.

இது பொறுப்பான சமூக நடத்தையல்ல.

பொறுப்பெடுத்து வெளிப்படையாக முன்வந்து எங்கள் பிள்ளைகள் சிலர் தவறிவிட்டார்கள். அவர்களை எங்களிடம் விடுங்கள். நாங்கள் அவர்களை நல்வழிப்படுத்துகிறோம் என்று சொல்ல நாட்டில் ஒரு முஸ்லிம் அமைப்புக்கூட இல்லையா? அவர்கள் உங்கள் பிள்ளைகள். அவர்களைக் காட்டிக் கொடுக்காதீர்கள். முன்வந்து பொறுபெடுத்து அவர்களை திருத்திக் காப்பாற்றுங்கள். இதுவே பெற்றோரின் சமூகத்தின் ஊரின் சமயத்தின் இனத்தின் அமைப்புரீதியான அறமாகும். 
.

6 comments:

  1. ஒரு இந்து சகோதரருக்கு உள்ள ஆதங்கமும் தூரநோக்கும் எம் புத்திஜீவிகளுக்கும் ? இயக்கம்களுக்கும் இல்லாதது வருத்தம் தருகிறது
    மார்க்கத்தில் ஒரு ஹதீஸுக்கு ஒவ்வொரு இயக்கமும் தம் கொள்கைக்கு ஏற்றவாறு விளக்கம் தரும் இத்தருணத்தில் இப்பிரச்சினையை முடிந்த பிரச்சினை அல்லது நாம் பூசிக்கொள்ளக்கூடாது எனும் கோணத்திலேயே இயக்கங்கள் பார்க்கின்றன ...

    ReplyDelete
  2. http://www.jaffnamuslim.com/2019/01/blog-post_426.html

    ReplyDelete
  3. ஒரு நல்ல கட்டுரை. அதுவும் ஜெயபாலன் (1980 களிலிருந்து தமிழ் – முஸ்லிம் பிரச்சனைகளை வேறு கோணத்தில் நோக்கும் ) பேனாவிலிருந்து ......

    ReplyDelete
  4. ஒரு நல்ல கட்டுரை. அதுவும் ஜெயபாலன் (1980 களிலிருந்து தமிழ் – முஸ்லிம் பிரச்சனைகளை வேறு கோணத்தில் நோக்கும் ) பேனாவிலிருந்து ......

    ReplyDelete

Powered by Blogger.