January 08, 2019

தமிழ் - முஸ்லிம்களிடையே பகைமையை, மூட்டும் கயவர்கள் யார்...?

-Ashraf Ahameth-

கடந்த வாரம் மட்டக்களப்பில் நடைபெற்ற அந்த கசப்பான சம்பவத்தினை நீங்கள் யாவரும் அறிந்திருக்கக்கூடும். ஒரு மூத்த வயதுடையவரை நிர்வாணப்படுத்தி அடித்து விரட்டும் அந்த கோர சம்பவத்துடன் தொடர்புபட்ட இரு சமூகங்களும் தமிழ் பேசும் சமூகமே.

இந்த விடயத்தில் தமிழர் முஸ்லிமுக்கோ, அல்லது முஸ்லீம் தமிழருக்கோ இந்தக் கொடூரமான செயலை செய்வது எப்படியும் நியாயப்படுத்த முடியாத ஒன்று என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா? அவர் உண்மையிலேயே ஏதேனும் தவறு செய்திருப்பினும்,  தண்டனை வழங்கும் அதிகாரத்தை நாம் கையிலெடுக்க முடியாது என்பதனையும் நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா? வயதில் மூத்த ஒருவரை கீழாடையின்றி நிர்வாணப்படுத்தி தண்டிக்கும் காட்சி மனிதாபிமானம் உள்ள யாருக்கும் இதயத்தை உருக்ககூடியது என்பதை உணர்கிறீர்களா?

கடந்த முப்பது வருட கொடிய யுத்தம் வடகிழக்கை சின்னாபின்னப்படுத்தி எம் வாழ்வையும் வளர்ச்சியையும் குழிதோண்டிப் புதைத்தது மட்டுமன்றி, எம் குழந்தைகள்வரை அதன் தாக்கம் வீழ்ச்சியை ஏற்படுத்தியதை நாம் மறந்துவிட்டோமா? நாம் அடைந்தவற்றைவிட இழந்தவைதான் அதிகம் என்பதை நாம் உணர்ந்தோம் அல்லவா?

உண்மையிலேயே ஓரிரு அற்பர்கள் செய்யும் செயலால் ஈரினங்களும் அல்லல்படுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். இரண்டறக் கலந்து வாழும் தமிழ் முஸ்லிம்களிடையே பகைமையை ஏற்படுத்தி குளிர்காய முனையும் கயவர்கள் யார்? ஏன் கிழக்கிலும் வடக்கிலும் எப்போதுமே இனமுறுகலை எதிர்பார்த்துச் செயற்படுகிறார்கள்? நிம்மதியான சுவாசக்காற்றை சுவாசித்து மனிதாபிமானத்துடன் வாழும் மக்களை ஒருவருக்கொருவர் எதிரியாக்கி இரு இனத்தின் வாழ்விலும் வீழ்ச்சியை ஏற்படுத்தும் கபட செயலுக்கு நீங்கள் ஆதரவளிக்கிறீர்களா?

நமது கருத்துக்களும், வார்த்தைப்பிரயோகங்களும், செயற்பாடுகளும் இன்னோர் இனத்தை வேண்டுமென்றே சீண்டுவதாக இருந்தால் எப்படி எங்கள் சமுதாயம் நிம்மதியான வாழ்வை வாழ முடியும். வடகிழக்கின் தமிழர்களும் அண்டைவீட்டு முஸ்லீம்களும் வாழும் இந்த ஒற்றுமையான வாழ்வை சீரழித்துவிட்டு எதை நாம் அடையப்போகிறோம்? அரசியல்வாதிகளுக்கு மட்டுமே இவ்வாறான இனசீண்டல்கள் இலாபமளிக்குமே அன்றி ஏழை மக்களுக்கு?

ஒன்றை மட்டும் எண்ணிப்பாருங்கள். நடைபெற்ற அசம்பாவிதங்கள் முஸ்லீம் தரப்பினால் தமிழருக்கு நடந்திருந்தால் இப்போதைய உங்கள் மனநிலை என்னவாக இருக்கும். ஆனாலும் பொறுமையுடன் நிதானத்துடனும் சட்டரீதியாக அதனைக் கையாள்வதுதான் சிறப்பு என்ற தீர்மானத்தில் இருக்கும் கிழக்கு முஸ்லீம்களை இன்னுமின்னும் காடையர் குழுகொண்டு தாக்குவது எவ்வகையான கீழ்த்தரமான செயல்? இது ஓர் பாரிய இனவிரிசலையே நமக்குள் உண்டுபன்னக்கூடும் அல்லவா?

தன் தாயை உண்மையாய் நேசிப்பவன் ஒருநாளும் மற்றவர் தாயின் வயிற்றுக்கு அநீதி செய்யமாட்டான். அதுபோலத்தான் தன் இனத்தை உண்மையாய் நேசிப்பவன் மற்ற இனங்களுக்கு அநீதி நினைக்கமாட்டான். நாங்கள் எங்கள் தாயைப்போல இனத்தையும் சமூகத்தையும் ஏன் உங்களையும் கூட நேசிக்கின்றோம், மதிக்கின்றோம், மரியாதை செய்கின்றோம். தயவுசெய்து காடையர்களின் கபடத்தனத்தில் சிக்குண்டு நமக்குள் ஓர் இன விரிசலை ஏற்படுத்த எப்போதும் துணைபோகாதீர்கள்.

10 கருத்துரைகள்:

Muslim haven't done this when they killed Muslim and looted their properties, who is this bloody ignorant, suitable punishment is needed as soon as possible to this idiot

நானா அங்கு பள்ளிவாசல் கட்ட காணி பிடிக்க தான் வந்தவராம். அவர் வாயாலேயே ஒத்து கொண்டுவிட்டார். கள்ள காணியில் பள்ளி கட்டுபவருக்கு வேறென்ன தண்டனை வழங்குவது

வயதுக்கு மூத்த முஸ்லிம் ஒருவரை நிர்வாணப்படுத்தி கேவலப்படுத்தியது எல்லாம் மட்டக்களப்புத் தமிழர் வரலாற்றில் மிகவும் சின்ன விசயம் பாருங்கோ. வன்முறைக் காலங்களிலும் சரி முற்பட்ட பிற்பட்ட காலங்களிலும் சரி இந்த மட்டக்களப்புத் தமிழர்கள் முஸ்லிம்களுக்குச் செய்த கொடூரங்கள்; அவற்றை எல்லாம் இந்தப் பத்தியில் எழுதி முடிக்க ஏலாது பாருங்கோ. யாழ்ப்பாணத் தமிழர்களும் மலையக மற்றும் இலங்கைத் தமிழர்களும் மட்டக்களப்புத் தமிழர்களின் வீர தீர பராக்கிரம செயல்களுக்கு ஈடு கொடுக்க முடியாதவர்கள் பாருங்கோ. இவங்கள் முஸ்லிம்களுக்கு செய்த அநியாயங்களுல் தலையாயது வன்முறையின் பின்னரான சமாதான காலத்தில் ஈவிரக்கமின்றி ஒரு அப்பாவி கர்ப்பிணி முஸ்லிம் தாயின் வயிற்றைக் கிழித்து சிசுவைத் துக்கி எறிந்து விளையாடியமை மனித நாகரிகத்திற்கே சவால் விடக்கூடிய அரும் காட்சி. இப்படி எத்தனை எத்தனையோ வகையான தமது வீரபிரதாபங்களை முஸ்லிம்களிடம் காட்டிய மறவர்குல மாணிக்கங்கள்தான் இந்த மட்டக்களப்பு மாவட்ட தமிழ்ப் பெரும் குடியினர். வன்முறைக்காலங்களில் இடம்பெற்ற இவர்களது அட்டாதுட்டிகள் பத்திரிகைகளில் எல்லாம் எழுதத் தகுந்தவை அல்ல. இவர்களது முஸ்லிம்கள்மீதான அட்டகாசங்களை தமிழ்த் தலைவர்களோ அல்லது எந்த தமிழ் புத்திஜீவிகளுமோ அல்லது தமிழ்ப் பத்திரிகைகளோ கண்டித்து எழுதிப் பேசிக் கிழித்ததாக வரலாறு இல்லை. பொதுவாக தமிழர்களின் சிந்தனை முழுக்க முழுக்க முஸ்லிம்களின் வளங்களைச் சூறையாடி சின்னாபின்னப்படுத்துவதுதான். அது எந்த உருவத்தில் வந்தாலும் முழுத்தமிழர்களுக்கும் மகிழ்ச்சிதான். மிக விரைவில் ஒரு காலம் வரும். அன்று வியாழேந்திரன், கருணா அம்மான் போன்ற பலரை மட்டக்களப்பு தமிழ் சமூகம் “தமிழினத்தின் தேசிய வீரர்கள்” என்று பட்டம் சூட்டிக் கௌரவிக்கும்.

கருணாவும் பொதுபலயின் இந்து பிரிவும்

there is a law in this country , why this cannot be taken to the court and punish who ever responsible

இலவாதிகளால் (இந்த அலைத்தளத்தில் முஸ்லிம்களை உசுப்பேத்தும் நபர்கள் உட்பட) முஸ்லிம்களின் வளரச்சியையும் இஸ்லாத்தின் எழுச்சயையும் ஒன்றும் செய்ய முடியாது இதெல்லாம் ஓர் மயிர்ரளவுக்குச் சமன் என்ன இயலாதவர்கள்டம் சண்டித்தனம் காட்டுவது சண்டியன் அல்ல அவன் பொன்?

excellent Mr.Ashraf A. we are same Tamil Language Speaking Peoples no issues with Religions, our strong unity is main issues so do not trap with Politicians political games

Jaffna muslim என்ற இணையதள பத்திரிக்கை ஆசிரியரே.

அனுசாத்து சந்திரபால், எங்கப்பா ஒரேயடியா காணமப் போய்டிங்க. நீங்க Jaffna Muslim comments பக்கம் அடிக்கடி வரனும். முஸ்பாத்தியே இல்லாமல் போச்சு. நீங்க அடிக்கடி இங்க உலா வந்தால்த்தான் எங்களுக்கும் உற்சாகம் ஆர்வம் வரும். நாங்களும் எப்பவும் முன்னயப்போல எலிக்குஞ்சு மாதிரி இருக்க ஏலாது பாருங்க. வாங்க வந்து எங்களுக்கும் உசுப்பேத்துங்க மச்சி.

Porama pudichi sawuranuhal kolaihal. Thaniya pona iyaladha mootha nafaridam katuranuhal katumirandi. Iwanuhalda peruma,porama,wanjam, thandhiram, muslimgal oru unityaha walwadhu wanihathil sirandhuwilanguwadhu iwanuhaluku pidipadhu illai iedhuway andha idathil naan irundhal awangal ammata kudicha paal ellam kakki irupan. Innum karunawum innum sila inawadhi madhawadhi ielaweri piditha, poramai aanawam niraindha thimurupiditha naihal facebookil kooda muslimgalin unarwaithoonda Kudiyakoodiya kewalamana padhiwuhalai iduhindraner. Indha naihalda madhathula hindha jadhi uyarndha jadhi andru kooriyadha muslim pondrawarhal pona jemmathula senja pawathukaha porandha kootam andu anni indha ilijadhi kootam namadhu madhathaiwida uyarndhu selwachelipodu walwadha andra kowam weru. 5 ariwumika matukadawulai arupadhal innoru kowam ariwu ketta katpulam wakiram niraindha pulihal saidha thawarai maraithu hisbullawai matrum muslimgal badhil adi koduthadhai kewalama wilasithalli thirium kootam than idhai saiwadhu...

Post a Comment