Header Ads



விரைவில் வடக்குகிழக்கை, ரணில் தாரைவார்த்து விடுவார்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தந்திரம் தனக்கு நன்கு தெரியும் எனவும், விரைவில் அவர் வடக்கு கிழக்கை தாரைவார்த்து விடுவார் எனவும் எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அத்துடன், தற்போது புதிய அரசமைப்பொன்று தேவையில்லை எனவும் அதில் காணப்படும் அதிகாரங்கள், நாட்டைப் பிளவுபடுத்தும் எனவும் அவர் கூறியுள்ளார்.

சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச,

“பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறுவதுபோன்று புதிய அரசியலமைப்பில் எதுவும் இல்லை என்றால், சம்பந்தனும், சுமந்திரனும் ஏன் துள்ளிக் குதிக்க வேண்டும்.

வடக்கு கிழக்கு இணைப்பில்லை, ஒற்றையாட்சியே, பௌத்திற்கு முன்னுரிமை என பிரதமர் ரணில் கூறுகின்றபோதும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரிப்பதனால், அதில் ஏதோ இருக்கிறது.

கூட்டமைப்பினர் முட்டாள்களில்லை. பிரதமர் சொல்வதன் அடிப்படையில் குறித்த சொற்பதங்கள் இல்லாதிருக்கலாம் என்றும் நாட்டை பிளவுபடுத்தும் அதிகாரங்கள் இருப்பதனாலேயே கூட்டமைப்பு, ஆதரிக்கின்றது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தந்திரம் தனக்குத் தெரியும். அவர் வடக்கு கிழக்கை தாரைவார்த்து விடுவார். ரணில் விக்கிரமசிங்க, சம்பந்தன், சுமந்திரன் ஆகியோர் புலம்பெயர் தமிழர்களின் நிகழ்ச்சி நிரலில் செயற்படுகின்றனர்.

அவர்களுக்குப் பின்னால் பலம் பொருந்திய நாடுகள் உள்ளதாகவும் கூறியுள்ளார். நாட்டில் பாராளுமன்றத் தேர்தலை நடாத்தி, புதிய அரசாங்கத்தை அமைக்க வேணடும்.

எவ்வாறாயினும், புதிய அரசியலமைப்பை நிறைவேற்ற ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.

3 comments:

  1. இந்த நாட்டில் வாழும் ஒவ்வொரு மனிதனும் சரியாக விளங்கிக் கொள்ளவேண்டிய முக்கியமான அம்சம் என்னவென்றால்,இவர் வாய்திறந்தால் இனமுறுகல்,இனத்துவேசம் தவிர வேறு எதுவும் அதிலிருந்து வௌியாகமாட்டாது என்பதுதான். இந்த உண்மை விளங்காமல் மக்கள் தொடர்ந்தும் செயற்பட்டால், அவர்களுக்கும் இந்த நாட்டுக்கும் அழிவும் கடும்வறுமையும் தான் எஞ்சியிருக்கும்.

    ReplyDelete
  2. Public should avoid this criminal groups of Mottu

    ReplyDelete
  3. ரணில் சொன்ன உடனே வடக்கும் கிழக்கும் இணைஞ்சுடும். என்ன கதையப்பா இது. ரெண்டையும் இணைக்கிறஎன்டால் கண்ணுக்குத் தெரியாத எத்தனையோ Legal Procedures இருக்கு. முதலாவது நாட்டு மக்கள் விரும்புவார்களா. மீறி இணைத்தாலும் அச்செயல் நீதிழமன்றத்தின் அதிகாரத்தையும் தீர்ப்பையும் கொச்சைப்படுத்தியதாக ஆகமாட்டாதா. சரி முஸ்லிம்களும் சிங்களவர்களும் பெரும்பான்மையாக வாழும் ஒரு மாகாணத்தை தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் மாகாணத்துடன் இணைப்பதற்கு தற்போது என்ன அவசியம் அவசரம் ஏற்பட்டுள்ளது.

    ReplyDelete

Powered by Blogger.