Header Ads



கோத்தபாய போட்டியிட்டாலும் ஐதேக வேட்பாளரால், அவரை இலகுவாக தோற்டிக்க முடியும் - அஜித் பீ. பெரேரா

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவினால் போட்டியிட முடியாது என அமைச்சர் அஜித் பீ பெரேரா தெரிவித்துள்ளார்.

களுத்துறை, பண்டாரகம பிரதேசத்தில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் முன்னர் அவர் அமெரிக்க குடியுரிமையை கைவிட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். அமெரிக்க குடியுரிமையை கைவிட்டு, ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச போட்டியிட்டாலும் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளரால் அவரை இலகுவாக தோற்டிக்க முடியும் எனவும் அஜித் பீ பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தனது அமெரிக்க குடியுரிமையை இரத்துச் செய்யும் அடிப்படை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச களுத்துறையில் நேற்று தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் தகுதியானவர் நிறுத்தப்படுவார். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தயார் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஏற்கனவே கூறியுள்ளார். அவர் அமெரிக்க குடியுரிமையை இரத்துச் செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் விமல் வீரவங்ச குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. ரணில் ஜனாதிபதி வேட்பாளராக வருவரானால் எதிரணியில் நாய்க்குட்டி போட்டிட்டாலும் நாய்க்குட்டிதான் வெல்லும்.

    ReplyDelete

Powered by Blogger.