January 10, 2019

வெள்ளிக்கிழமை கடைகளை திறப்போம், ஹர்த்தாலை எதிர்ப்போம் - அக்கரைப்பற்று மேயர் அழைப்பு

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக சரித்திரம் சான்று பகரக் கூடிய நிகழ்வொன்று நடைபெற்றது. அதுதான் கிழக்கு மாகாண ஆளுனராக கௌரவ எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் பதவியேற்றுக் கொண்டமையாகும். முஸ்லிம் மக்களின் அபிலாஷைகளை மாத்திரமன்றி தமிழ் - சிங்கள மக்களின் அபிலாஷைகளையும் நிறைவேற்றக் கூடிய ஆளுமை மிக்க ஆளுனராக அவர் அடையாளம் காணப்பட்டார். கிழக்கில் வாழ்கின்ற சகல இன மக்களும் ஒற்றுமையாகவும், விட்டுக் கொடுப்புடனும் வாழ்வதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படக்கூடிய அழகிய தருணமாக முழு நாட்டு மக்களும் இவ் ஆளுனர் விடயத்தில் அக மகிழ்வடைந்தனர். அவர் அமைச்சராக பதவி வகித்த காலங்களில் அபிவிருத்தி, உரிமைக் குரல், மக்கள் நலன், பாரபட்சமின்றிய சேவை என அனைவராலும் போற்றப்பட்ட ஒருவர். இவ்வாறான தூய சிந்தனை கொண்ட ஒருவர் பல்லின மக்கள் வாழ்கின்ற கிழக்கு மாகாணத்தின் ஆளுனராக நியமிக்கப்பட்ட செய்தியினை அறிந்த போது நான் அளவிலா மகிழ்ச்சியடைந்தேன். அவரது பணி மேலும் சிறக்க வேண்டுமென இறைவனை பிராத்தித்தேன்.

இன்று கௌரவ ஆளுனர் அவர்களின் நியமனம் தொடர்பில் இனவாத கருத்துக்களை சில விஷமிகள் பரப்பி விடுவதினை சமூக வலையத்தளங்கள் மூலமாகவும், கபடத்தனமான துண்டுப்பிரசுரங்கள் மூலமாகவும் அவதானிக்க கூடியதாய் உள்ளது. இவ்வாறு அடையாளமற்று ஒழிந்து கொண்டு ஊர், பெயரின்றி இயங்கி வரும் இனவாத விஷக்கிருமிகளின் செயல்பாடுகளை நாம் ஒருபோதும் கவனத்தில் எடுத்தல் கூடாது. இவ்வாறான செயற்பாடுகள் மிகவும் கண்டிக்கத்தக்கதும் மன வேதனைக்கு உரியதுமாகும். கிழக்கு மாகாணம் என்பது முஸ்லிம் - தமிழ் - பௌத்தம் என பல்லின மக்கள் வாழ்கின்ற அலகாகும். பயங்கரவாத சூழல் முடிவிற்கு வந்ததன் பிற்பாடு எல்லா மக்களும் ஒன்றெனக் கலந்து பரஸ்பரம் அன்பு பாராட்டி இங்கு வாழ்ந்து வருகின்றனர். இதில் அரசியல் நோக்கத்திற்காக அற்ப செயல்களை செய்யக் கூடிய சில விஷக்கிருமிகள் நச்சுவாயு போல எம்மத்தியில் பரவிவருகின்றனர். முஸ்லிம் மக்களுக்கும் தமிழ் மக்களுக்குமிடையில் பிரச்சினைகளை உருவாக்கி அரசியல் அநாகரிக குளிர் காய முனைகின்றனர். இதற்கு நாம் எவரும் துணை போகக் கூடாது என்பதில் மிகக் கவனமாக இருக்க வேண்டும். வரலாற்றில் மீண்டுமொரு இருண்ட யுகத்தினை நாம் அடைய முடியாது. இதற்கான முயற்சிகளே இப்பொழுது பல்வேறு ரூபங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அவற்றின் ஒரு அங்கமே ஆளுனர் நியமனத்திற்கு எதிரான பொய் வதந்திகளாகும்.

வடக்கும் கிழக்கும் பிரிந்திருக்கும் இச்சந்தர்ப்பத்தில் இவ்வாறான துயரமானதும், துரோக நிகழ்வுகளும் இடம் பெறுமாயின் இணைந்த வடகிழக்கு எனும் செயற்பாட்டில் முஸ்லிம்களுடைய அதிகார, உரிமை செயல்களின் நிலையினை நினைத்து நாம் அதிகமான கேள்விகளை எழுப்ப வேண்டியுள்ளது. இவ்வாறான முறைகெட்ட செயல்களை செய்பவர்கள் இனவாத குழப்பத்தினை ஏற்படுத்தும் சில விஷக்கிருமிகளேயாகும். ஒட்டு மொத்த தமிழ் மக்களும் இவ்வாறானவர்கள் அல்ல. அரசியல் சுய லாபத்திற்காக துரோகத்தின் நிழலாய் உலாவும் ஒரு சிலரே.

நாளை கடைகளை அடைத்து ஆளுனர் நியமனத்திற்கு எதிராக செயற்படும்படி தான்தோன்றித்தனமான துண்டுப்பிரசுரங்களும், செய்திகளும் வெளியானபடி இருக்கின்றன. நாம் இதற்கு மாற்றமான நடவடிக்கையில் உடனடியாக ஈடுபடல் வேண்டும். இனவாத விஷக்கிருமிகளின் கருத்துக்ளையும், வங்குரோத்து சிந்தனைகளையும் முறியடிக்க வேண்டும். இன, மத, பேதமற்ற கிழக்கின் வெளிச்சம் முழு தேசத்திற்கும் முன்னுதாரணமாய் திகழ வேண்டும்.

நாளை வெள்ளிக்கிழமை பெரும்பாலான முஸ்லிம் பகுதிகளில் கடைகள் அடைக்கப்படுவது மரபான செயல்பாடாக காணப்படுகிறது. ஆனால் நாளை நாம் அனைவரும் கடைகளை அதிகாலையிலே திறந்து வியாபாரங்களை ஆரம்பிக்க வேண்டும். தமிழ் மக்களுடைய பெருநாட்களில் ஒன்றான தைப் பொங்கல் நெருங்கி வருகின்ற காலமாக இக்காலமிருக்கிறது. வியாபார செயற்பாடுகள் மாத்திரமன்றி தமிழ் - முஸ்லிம் மக்களுடைய வணிக உறவிலும் இதனுடைய தாக்கம் அதிகமானதாகும். அக்கரைப்பற்று வர்த்தக சங்கமும், வியாபாரிகளும் நாளை முழுவதுமாய் கடைகளைத் திறந்து தங்களது வியாபாரங்களை மேற்கொள்வதில் தெளிவாக இருக்கிறார்கள். எனவே தயகூர்ந்து அனைவரும் நாளை புனித நாளான வெள்ளிக்கிழமை கடைகளைத்திறந்து எமது ஹர்த்தால் மறுப்பினை வெளிக்காட்டுவோம். என்றும் வல்ல நாயகன் அல்லாஹ் எம்மோடும் எமது தூய எண்ணத்தோடும் இருப்பான் எனும் அழியாத நம்பிக்கையில்.

அதாஉல்லா அகமட் ஸகி
மாநகர முதல்வர்
மாநகர சபை
அக்கரைப்பற்று.

3 கருத்துரைகள்:

கட்சி ரீதியாகவும், இயக்கங்கள் ரீதியாகவும் பிரிந்திருந்த முஸ்லிம்களை ஒன்றிணைத்த பெருமை தமிழ் பயங்கரவாதிகளையே சாரும். இன்று முஸ்லிம்கள் தமிழ் பயங்கரவாதத்தோடு மோத ஒன்றிணைந்துவிட்டனர். இது அடுத்த கிழக்கு முஸ்லிம் முதல்வரை உருவாக்கும் வரை தொடரும்.

ஹிஸ்புல்லா பதவியேற்று அவரது நிர்வாகம் எப்படி நடைறெறப்போகிறது
என்பதை பார்த்து அதன்பிறகு முடிவெடுக்காமல் தற்போதிலிருந்து எதிர்ப்பு நடவடிக்கையை ஆரம்பிப்பது
பதவி ஆசைக்கப்பின்னால் ஒழிந்துகொண்டிருக்கும் இனவாதமே
என்பதை நல்மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.

பாதிக்கபடப்போகும் மக்களின் போராட்டத்தை கொச்சை படுத்துவது தான் இனவாதம்.

இந்த போராட்டம் கவர்னர் ஒரு முஸ்லிம் என்பதால் அல்ல. இது இப்படியான முஸ்லிம் இனவாதிகளின் கட்டுக்கதை.
கிழக்கின் முன்னால் முதலமைச்சரே TNA ஆதரவுடன் வந்தவர் தான்.

இந்த போராட்டம் நேர்மையற்ற-இனவாதிக்கு இந்த பதவி கொடுக்க பட்டதை எதிர்த்துத்தான்.

Post a comment