January 15, 2019

விலாசம் இல்லாத ரஹப்(க) அல்-குனுனும், கேடுகெட்ட ஊடகங்களும்...!

ரஹப்(f) அல்-குனுன் விலாசம் இல்லாத ஒரு பெண், ஒரே ஒரு பெண், அவர் இஸ்லாத்தில் இருந்து வெளியாகினார். அவர் செய்த ஒரே ஒரு சாதனை அதுதான். 

அவரின் இன்றய நிலை.
* அவர்தான் இன்று உலகின் பேசுபொருள். 
* BBC, CNN, Independence, Reuters, போன்ற பிரதான ஊடகங்களின் ஒரு கிழமை தலைப்புச் செய்தி அவர்தான்.
* அவரை பாதுகாக்கப் போகின்றோம் என்று UNO களத்தில் இறங்கியது.
* அவருக்கான அனைத்து தேவைகளும் செய்துகொடுக்கப்பட்டது.
* ஒரு கிழமையில் 300 ற்கும் மேற்பட்ட அவர் பற்றிய ட்விட்டர் பதிவுகள் உலக பிரதான தலைவர்களால் பதிவிடப்பட்டது.
* உடனே பல நாடுகள் அவருக்கு அடைக்கலம் கொடுக்க யோசிக்க ஆரம்பித்தது.
* கனடா முன் வந்தது. 
* அவர் இப்போது கனடாவின் புகலிடம் தேடியாக அரவணைக்கப் படுகிறார்.
* அங்கு அவருக்கு இராஜ மரியாதை.

அவர் பற்றி உலகப் புகழ் ஊடகங்கள் இவ்வாறுதான் செய்தி வெளியிட்டது. 
* ரஹப் பயப்படுகிறார்.
* ரஹப் உதவி தேடுகிறார்.
*ரஹப் அறையில் தூங்கிக்கொண்டு இருக்கின்றார்.
* ரஹப் வலது பக்கம் திரும்பிப் பார்த்தார்.
* ரஹப் விமானத்தில் ஏறினார்.
* ரஹப் கனடா செல்கிறார்.
* ரஹப் கனடாவை அடைந்தார்.

ரஹப் என்ற ஒரு சவூதி பெண்ணில் இந்த அளவு அக்கறை எடுத்த மேற்கத்தேய ஊடகம் இதே உலகில் அதே கிழமையில் நடந்தேறிய கொடுமைகளை வெளிப்படுத்தவே இல்லை. கடந்த  5 நாட்களுக்குள் இவைகளும் உலகில் நடந்தது.

* சிரியா அகதி முகாம்களில் சிறு பிள்ளைகள் அதீத குளிரால் உறைந்து போய் வெளிரிச் செத்தார்கள்.
* இன்னும் சில அகதி முகாம்களில் முழங்கால் அளவு நீர் பரவி மக்கள்  சொல்லொண்ணா துயரை அனுபவித்தார்கள்.
* காஸ்மீர் ஒரு மரண ஊர்வலத்தில் கலந்துகொண்ட அப்பாவிப் பொதுமக்கள் மீது இந்தியா இராணுவம் சுட்டுத்தீர்த்தது. 20 கு மேற்பட்டவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டர்கள்.
* காசா மீது இஸ்ரேல் பல இடங்களில் குண்டு போட்டு பல கட்டிடங்களை அழித்தொழித்தது.
* இஸ்ரேல் ஒரு அப்பாவி பலஸ்தீன் பெண்ணை கொன்றது.

இப்படி மனிதாபிமானத்துக்கு முரணான எவ்வளவோ விடயங்கள் நடந்தேறியும் இந்த கேடுகெட்ட ஊடகங்கள் கண்டுகொள்வதே இல்லை. 

காரணம் அவர்கள் முஸ்லிம்கள். 

இஸ்லாத்தை விமர்சிக்க பூதக்கண்ணாடி கொண்டு நிகழ்வு தேடும் இந்த ஊடக உலகத்துக்கு ரஹப் ஒரு வரம். அவரை வைத்து செய்கின்றார்கள்.

இனி என்ன 
* அவர் உலகப்புகழ் ஆவார்.
* சிறந்த பேச்சாளர் ஆவார்.
* இஸ்லாத்துக்கு எதிராக புத்தகம் வெளியிடுவார்.
* ஐரோப்பிய பாராளுமன்றத்தில் கௌரவிக்கப்படுவார்.
* Noble Peace Prize பெறுவார்.
* உலகின் ஜகன் ஆவார்.

வாழ்க உங்கள் ஊடக உலகம் !

- Rilmiyas Muhammad -

9 கருத்துரைகள்:

Well said my dear brother Rilmiyas.

They plot...BUT Allah plot with more power.

One Rahab went out of ISLAM due to her ignorance and may the wrong handling of her parents and failing to teach the true message of Tawheed to their daughter.

BUT many 1000's of women daily get attracted toward ISLAM with no noise...

Alhamdulillah... Allah is great.

எல்லாம் வல்ல அல்லாஹ் இவருக்கு ஹிதாயத்தை கொடுக வேண்டும்.இல்லா விட்டால் இந்த பச்சோந்திகள் இவளை விரைவில் பாலியல் பட நடிகையாக்கி அழகு பார்ப்பார்கள்

Before criticizing this woman, we have to analyze the circumstances which led to her decision of fleeing. It is nothing but domestic violence. There are many millions of Muslim victims like Rahaf out there with no clue of how to escape domestic violence. Rahaf was brave lucky and also intelligent. I am not trying to justify her move of giving up her religion, but that may have been the main reason she is enjoying freedom in a free country today.
It is the duty of all to ask themselves what they did against domestic violence among Muslims before finding fault with people like Rahaf.

காட்டுமிராண்டிகளிடமிருந்து தப்பி ஒரு வழியாக சிறந்த வாழ்க்கையை தொடங்கிய அந்த பெண்ணுக்கு நிச்சயமாக பாதுகாப்பு கிடைக்கும்.

இஸ்லாமிய பெயர் தாங்கி மட்டும் வாழ்வதனால் இஸ்லாமியர் ஆகிவிட முடியாது. ராகாப் இஸ்லாத்தை விட்டு வெளியேறியது எங்களுக்கும் மகிழ்ச்சியே இஸ்லாமிய பெயரை மாத்திரம் வெய்த்து கொண்டு பிறப்பால் இஸ்லாம் மார்க்கத்தை பெற்றவர். அவர் எந்த மதத்தை ஏற்று கொண்டும் அசிங்கங்களை செய்யலாம், அதிலும் எங்களுக்கு ஆட்சபனை இல்லை, ஆனால் எங்களுக்குள்ள ஒரே பிரச்சனை இதை ஓர் செய்தி என எல்லா ஊடகங்களும் கூப்பாடு போடுவது தான்.
நீங்கள் அறியாவிடினும் இஸ்லாத்தை மாற்று மதத்தவர்கள் தூய்மையோடு ஏற்றுக்கொள்வது உண்மையே பிறப்பால் முஸ்லீம் ஆனவர்களை விடாவும் உளத்தூய்மையாக வாழ்கின்றனர்

இஸ்லாம் அல்லாத நபர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் அது இஸ்லாத்திற்கோ, முஸ்லிம்களுக்கோ பெருமை இல்லை. இஸ்லாத்தை ஏற்றவர்தான் பெருமைப்படவேண்டும். இஸ்லம் சங்கு போன்ற பெருமதியானது இஸ்லாத்திலிருந்து ஒதுங்குபவர்கள் பெறுமதியிழந்த சங்குபோன்றவர்கள். பெறுமதியிழந்த சங்கை தூக்கி சிலர் கொண்டாடுகின்றார்கள். எங்களுக்கு கவலைதான் கையிலிருந்த சங்கு பெறுமதியிழந்தால்.

All those who oppose ISLAM... Get to know that.. you and your universe and all that exist in it were created and is being controlled by ONE TRUE GOD. He is expecting his creation to worship him alone.

Those who oppose the call of their creator but submit their worships to the creations such as Idles, Sun, Moon, Fire, Stones, Trees and Dead will not be allowed to Enter the Paradise, which is also belonging to the same ONT TRUE GOD.

Before your death, If you are not going to accept the call of your Creator... expect the final destination of Hell fire, which is also a creation of the same god. ( he has made it for those who takes falls gods like idles and so on)

We wish you to understand your and our GOD before your death. IF not be witness that this message reached you from us ON the day of JUDGEMENT by the same GOD.

இது பெற்றோர்கள் செய்த தவறின் விளைவாகும் ஏனனில்

தற்றகாலத்தில் தனது பிள்ளைகள் அல்லாவை சந்தோசப்பட வைக்கக்கூடியவர்களாக ஆக்குவதைவிட, பணத்தை சமம்பாதிப்பதத்திற்கும் குடும்பத்தில் அல்லது சமூகத்தில் புகளையும் பெறுவதை முக்கியமாக்கிக்கொட்டனர் .

அதனால் தனது பிள்ளைகள் தொழுகிறாரார்களா என்றுகூட அவதானிப்பதில்லை.

புகளுக்காக வெஸ்டர்ன் மற்றும் கிறிஸ்தியன் பாடசாலைகளில் படிக்கிறார்கள் அங்கு அந்நியர்களின் பண்பாட்டை பழகி வாழ்ந்துவிட்டு வீட்டில் இஸ்லாமிய நடைமுறையை வெறுக்கத்தானே செய்வார்கள். பல மயில் தூரம் சென்று பாடசாலைக்கும் டுஷனுக்கும் அனுப்புகிறோம் அனால் பக்கத்தில் உள்ள பள்ளிவாசலுக்கு சென்று தொழுவதட்கு மகனை அனுப்புவதில்லை. அவன் சோமம்பரியாக வீட்டில் தொழுகிறான்

Post a Comment